பீப்பள்ஸ் லீசிங் வழங்கும் “ஹரித நானா” புலமைப்பரிசில் திட்டத்தின் இரண்டாம் கட்டம் கண்டியில் ஆரம்பம்


தேசிய தொழிற் படையில், துறைசார் இளம் தொழிலாளர்களை ஊக்குவிப்பதற்கான தேசிய முன்னுரிமைக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றும் வகையில், இலங்கையின் முன்னணி வங்கி அல்லாத நிதி நிறுவனமான பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி (பிஎல்சி) கூட்டு சமூகப் பொறுப்பை நிறைவேற்றும் முயற்சியாக, இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையுடன் (விடிஏ) இணைந்து ஹைப்ரிட் ஒட்டோமொபைல் தொழில்நுட்பத் துறையில் 50 இளைஞர்களுக்கு தொழிற்கல்வி புலமைப்பரிசில்களை வழங்கியது.

கண்டி பிரதேசத்தை மையமாகக் கொண்டு ஹரித நானா புலமைப்பரிசில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை பிஎல்சி நடைமுறைப்படுத்தியது. நிதி கல்வியறிவு மற்றும் தொழில்முனைவு திறன்களை வளர்ப்பதற்காக இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பிஎல்சியின் சந்தைப்படுத்தல், தொடர்பாடல் மற்றும் நிலைத்தன்மையின் முகாமையாளர் ஹிஷான் வெல்மில, பிஎல்சி கண்டி கிளை முகாமையாளர் சேனக முனசிங்க, கண்டி அல்சபா கிளையின் முகாமையாளர் மொஹமட் அமீன், பிஎல்சி பிலிமத்தலாவ கிளையின் முகாமையாளர் உபுல் சாந்த,  இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் பிரதிப் பணிப்பாளர் (கண்டி பிராந்தியம்) ரொஹான் பிரியந்த, கட்டுகஸ்தோட்டை தொழிற்பயிற்சி நிலையத்தின் திட்ட உத்தியோகத்தர் யு.ஜி.எஸ். மாணிக்கே, கண்டி பிராந்தியத்திலுள்ள தொழிற்பயிற்சி நிலையங்கள், பிஎல்சி கட்டுகஸ்தோட்டை கிளை, பிஎல்சி தலைமை அலுவலகம் மற்றும் ஏனைய கல்விசார் திணைக்களங்களின் பிரதிநிதிகள் ஆகியோரின் பங்கேற்புடன் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் திகதி கட்டுகஸ்தோட்டை தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.

கண்டி பிராந்தியத்தில் ஹைபிரிட் ஒட்டோமொபைல் தொழில்நுட்பத்தைப் பின்பற்றுவதற்கான புலமைப்பரிசில்களை 16 இளைஞர்கள் பெற்றுக்கொண்டதோடு, முதல் பிரிவு இளைஞர்களுக்கான அறிமுக நிகழ்ச்சி அண்மையில் கொழும்பில் நடைபெற்றது.

பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி என்பது இலங்கையின் முன்னணி வங்கி அல்லாத நிதி நிறுவனமாகும், மேலும் நாட்டின் மிகப்பெரிய அரச வங்கிகளில் ஒன்றான மக்கள் வங்கியின் துணை நிறுவனமாகும். 1996ஆம் ஆண்டு விசேட குத்தகை நிறுவனமாக செயற்படத் தொடங்கிய பீப்பள்ஸ் லீசிங், 2011 ஆம் ஆண்டு கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. பீப்பிள்ஸ் லீசிங், பங்களாதேஸில் ஒரு வெளிநாட்டு முயற்சி உள்ளிட்ட ஆறு துணை நிறுவனங்களைக் கொண்ட பன்முகப்படுத்தப்பட்ட வங்கி அல்லாத நிதி அதிகார மையமாக வளர்ந்துள்ளது.