“பீப்பள்ஸ் லீசிங் பெற்றோல் பெரலிய’’ என்ற விளம்பர புரட்சியில் முதல் மாத 25 வெற்றியாளர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.
பீப்பள்ஸ் லீசிங் & ஃபைனான்ஸ் பிஎல்சி, மக்கள் வங்கியுடன் இணைந்த இலங்கையின் முன்னணி வங்கி சாரா நிதி நிறுவனமான ‘பீப்பள்ஸ் லீசிங் பெட்ரோல் பெரலிய’வை அறிமுகப்படுத்தியது-இது அதன் விசுவாசமான வாடிக்கையாளர்களை பாராட்டும் வகையில் தொடங்கப்பட்ட ஒரு புரட்சிகர திட்டம். பீப்பள்ஸ் லீசிங் பெரலிய உண்மையிலேயே ஒரு தனித்துவமான திட்டமாகும், இது இலங்கையில் உள்ள வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது இதுவே முதல் தடவையாகும்.
இந்தத் திட்டத்தின் கீழ், பீப்பள்ஸ் லீசிங் மற்றும் ஃபைனான்ஸ் பிஎல்சியிடம் ஒரு மாதத்தில் புதிய குத்தகை வசதிகள் அல்லது வாகனக் கடன்கள் பெற்ற வாடிக்கையாளர்கள் ஒரு வருடத்திற்குள் 100,000 ரூபாய் எரிபொருள் கொடுப்பனவைப் பெற தகுதியுடையவர்கள். ஒவ்வொரு மாதமும் இருபத்தைந்து வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள், ஆண்டுக்கு 300 வெற்றியாளர்கள், ரூ. 2,500,000 மதிப்புள்ள எரிபொருள் கொடுப்பனவுகள் ஒவ்வொரு மாதமும் வென்ற வாடிக்கையாளர்களிடையே பகிரப்படுகின்றன. இந்த பரந்த திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்கள் மீது எவ்வித செலவுகளும் சுமத்தப்படமாட்டாது; மேலும், முதலுக்கு மாதாந்த வட்டி வழங்கப்படும். இந்த சலுகைத்திட்டத்தின் கீழ் முதல் 25 வெற்றியாளர்கள் ஆகஸ்ட் 2020 அன்று அறிவிக்கப்பட்டனர்
வெற்றியாளர்கள் அகுரஸ்ஸ, பலாங்கொட, அளுத்கம, பத்தரமுல்ல, திகன, திவுலபிட்டிய, தெனியாய, கலென்பிந்துனுவேவ, கிரியுல்ல, ஹட்டன், ஜா-எல, கிளிநொச்சி, கொடிகாமம், கண்டி, குருநாகல், கலவா னை, குளியாப்பிட்டிய, கடவத்தை, தெஹிவளை, மத்துகம, மாத்தறை, நெல்லையடி, நுகேகொட. பொலன்னறுவை மற்றும் உடுகம பகுதிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்டார்கள்.
வெற்றியாளர்கள் நோக்கம் கருதி வடிவமைக்கப்பட்ட மென்பொருள் மற்றும் செயல்முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள், இது பீப்பள்ஸ் லீசிங் மற்றும் ஃபைனான்ஸ் பிஎல்சியின் முதுநிலை நிர்வாகக்குழுவினால் சுயாதீனமாக கண்காணிக்கப்படுகிறது.
பீப்பள்ஸ் லீசிங் பெட்ரோல் பெரலிய திட்டம் ஜூலை 2020 வரை செயல்படும்.
பீப்பள்ஸ் லீசிங் மற்றும் ஃபைனான்ஸ் பிஎல்சியின் துணைப் பொது முகாமையாளர் (சந்தைப்படுத்தல்) திரு லக்ஸந்த குணவர்தன, மாத தொடக்க வெற்றியாளர்களை அறிவிக்கும் நிகழ்ச்சியில் உரையாற்றுகையில் , பீப்பள்ஸ் லீசிங் பெட்ரோல் பெரலிய ஒரு வெற்றிகரமான விளம்பரமாகும் எனக் கூறினார்.
திட்டத்தை தொடங்கிய பிறகு, பீப்பள்ஸ் லீசிங் மற்றும் ஃபைனான்ஸ் பிஎல்சியின் பல பழைய மற்றும் புதிய வாடிக்கையாளர்கள் புதிய வாகனக் கடன்கள் மற்றும் குத்தகை வசதிகளைப் பெற்றனர். ஒரு வாடிக்கையாளர் ஒரு புதிய கடன் அல்லது குத்தகை வசதியைப் பெறும்போது, தங்கள் (அவன் அல்லது அவள்) புதிய உறுதிப்பாட்டோடு, தவணைப்பணத்தை குறிப்பாக முதல் வருடத்தில் திருப்பிச் செலுத்த வேண்டும். எனவே, வாடிக்கையாளரின் கண்ணோட்டத்தில், நாங்கள் வழங்கும் இலவச எரிபொருள் கொடுப்பனவு ஒரு பெரிய நிவாரணமாகும். மேலும் , மாதாந்த எரிபொருள் கொடுப்பனவு பீப்பள்ஸ் லீசிங் மற்றும் ஃபைனான்ஸ் பிஎல்சியின் சேமிப்புக் கணக்கில் வைப்பு செய்யப்படுவதால், அது வட்டியையும் உருவாக்கும். இது வாடிக்கையாளருக்கு கூடுதல் நன்மையாக இருக்கும் ”என்று திரு குணவர்தன கூறினார்.
‘பீப்பள்ஸ் லீசிங் பெட்ரோல் பெரலிய’ வழங்கும் நன்மைகள் குறித்து நாட்டில் எங்கிருந்தும் எந்தவொரு பீப்பள்ஸ் லீசிங் மற்றும் ஃபைனான்ஸ் பிஎல்சி கிளைகளிலும் விசாரிக்குமாறு நாம் மக்களை கேட்டுக்கொள்கின்றோம்.
பீப்பள்ஸ் லீசிங் மற்றும் ஃபைனான்ஸ் பிஎல்சி, 1996 இல் இலங்கையின் பெரிய அரச வங்கியான மக்கள் வங்கிக்கு முழுமையாக சொந்தமான துணை நிறுவனமாக இணைக்கப்பட்டது.
பீப்பிள்ஸ் லீசிங் தற்போது நாட்டின் மிக உயர்ந்த மதிப்பீடு செய்யப்பட்ட வங்கி சாரா நிதி நிறுவனமாகும், இதில் ஃபிட்ச் ரேட்டிங்ஸ் இன்டர்நேஷனலின் ‘B-‘ மதிப்பீடு (‘இறையாண்மை’க்குக் கீழே ஒரு புள்ளி), ஃபிட்ச் மதிப்பீடுகள் லங்கா லிமிடெட் நிறுவனத்திடமிருந்து “AA-(lka)” மதிப்பீடு மற்றும் பிராண்ட் ஃபைனான்ஸ் பி.எல்.சி.யின் வங்கி சாராத நிதி சேவைகளில் முதலிடம் வகிக்கிறது. இலங்கை வர்த்தக சபையினால் நாட்டின் சிறந்த பத்து நிறுவனங்களில் ஒன்றாகவும் இந்த நிறுவனம் அங்கீகரிக்கப்பட்டது.
பி.எல்.சியின் நிதி சேவை தயாரிப்பு இலாகாவில் குத்தகை, வாகன கடன்கள், நிலையான வைப்புக்கள், சேமிப்புக் கணக்குகள், வீட்டு மற்றும் வணிகக் கடன்கள், தங்கக் கடன்கள், பங்கு பரிவர்த்தனைகளுக்கான இடைத்தரகர் சேவை, தொழிற்படு மூலதன இடர்களை காரணிப்படுத்தல் மற்றும் இஸ்லாமிய நிதி சேவைகள் ஆகியவை அடங்கும்.
எமது குழுமத்தில் ஆறு துணை நிறுவனங்கள் உள்ளடங்குகின்றன, அவையாவன, பீப்பள்ஸ் இன்ஷ்ஷூரன்ஸ் லிமிட்டட், பீப்பள்ஸ் மைக்ரோ பினான்ஸ் லிமிட்டட், பீப்பள்ஸ் லீசிங் ப்ரொப்பர்ட்டி டிவலொப்மன்ட் லிமிட்டட், பீப்பள்ஸ் லீசிங் பி(f)லீட் மெனேஜ்மென்ட் லிமிட்டட், பீப்பள்ஸ் லீசிங் ஹெவ்லொக் ப்ரொப்பர்ட்டீஸ் லிமிட்டட், மற்றும் அதனது வெளிநாட்டு வர்த்தக நிறுவனமான (பங்களாதேஷ்) லங்கன் அலையன்ஸ் ஃபைனான்ஸ் லிமிடெட் ஆகும்.
பீப்பள்ஸ் லீசிங்கின் தனித்துவமான அம்சங்களாவன, ஒரே கூரையின் கீழ் மாறுபட்ட நிதி தீர்வுகளை வழங்குவதற்கான அதன் வலிமை மற்றும் ஸ்திரத்தன்மை, தடையற்ற, வசதியான மற்றும் நட்பான வாடிக்கையாளர் சேவை அனுபவத்தை வழங்குவதாகும்.