இஸ்லாமிய வசதிகள்
இஜாரா
இஜாரா எனப்படுவது லீசிங் இற்கு ஒத்ததாகும், இதனூடாக குறித்த அனுமதிக்கப்பட்ட பிரதிபலன்களுடன் பெற்றுக்கொள்ளப்படும் லீசிங் வசதியாகும். இம்முறையில் எமது வாடிக்கையாளர்களுக்கு குறித்த பிரதிபலனானது, குறித்த காலத்துக்கு குறித்த விடயத்தை கருத்திற்கொண்டு அல்லது குத்தகை நிபந்தனையில் குறித்த சேவைக்குரிய குறித்த விடயத்தை கருத்திற்கொண்டு வழங்கப்படுகின்றது. இதன்போது குறித்த ஒப்பந்தக் காலத்தின் நிறைவில் குறித்த முழுக்கட்டணமும் செலுத்தப்படும் பட்சத்தில் உரிமை வாடிக்கையாளர்களுக்கு மாற்றிக்கொடுக்கப்படும்.
- போட்டி முறையிலான வாடகைகள்
- மாறுபடும் வீதங்கள் (Variable Rates) அடிப்படையிலான திட்டங்கள்
- 7 ஆண்டுகள் வரையான மீளளிப்புக் காலம்
- பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத வாகனங்கள், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களுக்குப் பொருத்தமானது
- மூலதனத்தின் பகுதித் தீர்ப்பனவுக்கான (capital part settlement) விருப்பத்தேர்வு உண்டு
முராபஹா
முராபஹா அல்லது வர்த்தக முராபஹா எனப்படுவது ஷரீஆ அடிப்படையில் குறுகிய அல்லது நடுத்தர காலத்திற்கு பொருட்கள் அல்லது சொத்துக்கள் கொள்வனவூ செய்வதற்காக வழங்கப்படும் நிதியாகும். இம்முறையானது ஏதாவது ஒரு வாகனத்தை அல்லது பொருளை அதன் கிரயம் மற்றும் இலாபத்தை குறிப்பிட்டு செய்யப்படும் கொடுக்கல் வாங்கலை ஒத்ததாகும்.
- வாகனம், காணி மற்றும் இயந்திரங்களின் கொள்வனவு
- தொழிற்படு மூலதனத் தேவைகள்
- மூலதனத்தின் பகுதித் தீர்ப்பனவுக்கான வசதிகள்
வாடிஆ (தங்கப் பாதுகாப்பு வைப்பு வசதி)
PLC வழங்கும் வாடிஆ தங்கப் பாதுகாப்பு வசதி என்பது நிதிப் பிரச்சினையுள்ள மக்கள் அவசர பணத் தேவை ஏற்படும் வேளையில் தமது தங்க நகைகளைப் பாதுகாப்பு வைப்புக்காகக் கையளித்துப் பணத்தைப் பெற்றுக்கொள்ள இடமளிக்கும் ஒரு வசதியான தீர்வாகும்.
- வசதியான மீளளிப்புக் காலங்கள் (10 நாட்கள், 30 நாட்கள், 60 நாட்கள், 90 நாட்கள், 180 நாட்கள், நாட்கள்)
- பாதுகாப்பு வைப்புக்காக குறைந்தபட்ட கட்டணங்கள் – நாளாந்தம் கணிக்கப்படும்
- இலாபம் எதனையும் சேர்க்காமலே முற்பணம் வழங்கப்படும்
- தங்க நகைகளுக்கு இலவச தக்காஃபுல் காப்பீடு
- மக்கள் வங்கி CDM மூலம் கொடுப்பனவைச் செலுத்தலாம்
- வெளியிடத் தீா்ப்பனவு வசதியும் கிடைக்கும் (Outside settlement facility available)
சிரேஷ்ட பிரஜைகள் சேமிப்புக் கணக்கு
முஷாரகாஹ்
முஷாரகாஹ் ஆனது இலாப நட்டத்தை பகிர்ந்துகொள்ளும் ஒப்பந்த அடிப்படையிலான செயற்பாடாவதுடன், இங்கு ஷரீஆ அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்ட செயற்பாட்டிற்கு நிதி மற்றும் முகாமைத்துவ ஆலோசணைகள் வழங்கப்படும்.
வகாலாஹ்
வகாலாஹ் எனப்படுவது முதலீட்டாளர் (முவக்கில்) குறித்த தொகை பணத்தை அதில் வாடிக்கையாளரை ஒரு விற்பனை முகவராக கருத்திற்கொண்டு வாடிக்கையாளரின் வியாபாரத்தில் முதலீடு செய்து அதிலிருந்து குறித்த ஒப்புக்கொள்ளப்பட்ட விகிதத்தில் இலாபம் பகிரப்படலாகும்.