PLC – “அதி மதிப்பார்ந்த நிறுவனங்கள்” – 2017 பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது
LMD இனால் கருத்தாக்கம் செய்யப்பட்டு Nielsen அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட 800 பேர் (முகாமையாளர்கள் மற்றும் உயர் தரத்தினர்) பங்குபற்றிய அபிப்பிராய மதிப்பீட்டில், இலங்கையின் அதி மதிப்பார்ந்த நிறுவனங்களில் ஒன்றாக PLC தேர்ந்தெடுக்கப்பட்டது. நிதிச் செயற்பாடுகள், தரச்சிறப்பில் அக்கறை, முகாமைத்துவத் திறன், நேர்மை, புத்தாக்கம், உயிர்த்துடிப்பு, நிறுவனக் கலாசாரம், நிறுவன சமூகப் பொறுப்புணர்வு, கண்ணோட்டம், தேசிய மனோபாவம் ஆகிய அளவுகோல்களின் அடிப்படையில மேற்கொள்ளப்பட்ட இந்த மதிப்பீட்டில் PLC 25ஆவது இடத்தைப் பெற்றது.