PLC – CA ஸ்ரீலங்காவின் 53ஆவது ஆண்டறிக்கை விருதுகள் நிகழ்வில் நான்கு விருதுகளைப் பெற்றது


இலங்கைப் பட்டயக் கணக்காளர்கள் நிலையம் 2017இன் ஆண்டறிக்கைகளுக்கென ஏற்பாடு செய்த விருதுகள் நிகழ்வில், “சேகரிக்கும் தருணங்கள்” என்னும் தொனிப்பொருளில் 2016/17 நிதியாண்டிற்னெ பீப்பிள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பி.எல்.சி. வெளியிட்ட ஆண்டறிக்கை நான்கு மதிப்பார்ந்த விருதுகளைப் பெற்றுக்கொண்டது. ஒருங்கிணைக்கப்பட்ட அறிக்கையிடல் – வியாபார மொடல் தொடர்பிலான மிகச் சிறந்த வெளிப்படுத்துகை, நிறுவன சமூகப் பொறுப்புணர்வு அறிக்கையிடல் ஆகிய ஒட்டுமொத்தப் பிரிவுகளில் தங்க விருதுகள், ஒட்டுமொத்த முகாமைத்துவ விபரிப்புப் பிரிவில் வெண்கல விருது, நிதி நிறுவனங்கள் மற்றும் லீசிங் நிறுவனங்கள் (மொத்தச் சொத்துக்கள் ரூ.20 பில்லியனுக்கு மேல்) பிரிவில் வெள்ளி விருது என்பனவே அவையாகும். இந்த வருடப் போட்டியில் ஒரு நிதி நிறுவனம் பெற்ற ஆகக் கூடுதலான விருதுகள் இவையாகும்.

ஒட்டுமொத்த ஒருங்கிணைவான ஆண்டறிக்கை – வியாபார மொடல் பிரிவில் தங்க விருது
ஒட்டுமொத்த முகாமைத்துவ விபரிப்புப் பிரிவில் வெண்கல விருது
ஒட்டுமொத்த நிறுவன சமூகப் பொறுப்பு அறிக்கையிடல்; பிரிவில் தங்க விருது
நிதி நிறுவனங்கள் மற்றும் லீசிங் நிறுவனங்கள் (மொத்தச் சொத்துக்கள் சுமார் ரூ.20 பில்லியன்) பிரிவில் வெள்ளி விருது