பிஎல்சி அம்பாறை கிளை முன்பள்ளி ஆசிரியர் பயிற்சித் நிகழ்வொன்றை நடத்துகிறது
அம்பாறை பீப்பள்ஸ் லீசிங் மற்றும் ஃபினான்ஸ் பிஎல்சி (PLC) மூலமாக, அம்பாறை மாவட்ட செயலகத்தில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அம்பாறை மாவட்ட செயலகத்தினால் மேற்கொள்ளப்பட்டிருந்த கோரிக்கைக்கு அமைவாக இந்த பயிற்சி நிகழ்வை பீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி முன்னெடுத்திருந்தது.
இந்த பயிற்சிகளை சிறுவர்களுக்கு நட்பான ஆரம்ப பயிலல்கள், பரிபூரண விருத்தியுடனான எதிர்கால சந்ததியை உருவாக்குவதற்கான சிறுவர்களை தயார்ப்படுத்தும் விஞ்ஞான ரீதியான வழிமுறை போன்ற தலைப்புகளில் புகழ்பெற்றவரால் இந்த பயிற்சி முன்னெடுக்கப்பட்டிருந்தது. 255 முன்பள்ளி ஆசிரியர்கள் இந்த நிகழ்ச்சியினூடாக அனுகூலம் பெற்றிருந்தனர்.
பீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி அம்பாறை கிளை முகாமையாளர் தனுஜ தினேஷ் கருத்துத் தெரிவிக்கையில், இந்த பெறுமதி வாய்ந்த செயற்பாட்டுக்கு தமது அணி பங்களிப்பு வழங்கியிருந்தமை தொடர்பில் மகிழ்ச்சியடைவதாக குறிப்பிட்டார்.
‘இலங்கை பொருளாதார மாற்றத்தை எதிர்கொண்ட வண்ணமுள்ளது. இந்த மாற்றத்துக்கு பங்களிப்பு வழங்குவதில் நாட்டின் மனித மூலதனம் முக்கிய பங்கை வகிக்க வேண்டும். சிறுவர்களை அவர்களின் சிறுபராயத்தில் சிறந்த முறையில் தயார்ப்படுத்துவதனூடாக எதிர்காலத்தில் நாட்டுக்கு சிறந்த குடிமகன்களை உருவாக்குவதற்கு உதவியாக அமையும். எமது சிறுவர்கள் புத்தாக்கமானவர்களாகவும், உறுதியான தலைமைத்துவம் மற்றும் தொடர்பாடல் திறன்களை கொண்டவர்களாக இருப்பதனூடாக இந்த மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும். இந்த ஆரம்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதில் முன்பள்ளி ஆசிரியர் அதிகளவு பங்களிப்பை வழங்குவார். பீப்பள்ஸ் லீசிங்கை பொறுத்தமட்டில் நாம் இந்த விடயம் தொடர்பில் பெருமளவு பொறுப்பை ஏற்பதுடன், இதன் காரணமாக பீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி அம்பாறை கிளை இந்த நிகழ்ச்சியை முன்னெடுக்க முன்வந்திருந்தது’ என்றார்.
1995ம் ஆண்டு பீப்பள்ஸ் லீசிங் கம்பனி நிறுவப்பட்டிருந்தது. இது இலங்கையின் மாபெரும் அரச வங்கியான மக்கள் வங்கியின் துணை நிறுவனமாகும். இலங்கையின் வங்கிசாரா நிதித்துறையில் சந்தை முன்னோடியாக பீப்பள்ஸ் லீசிங் கம்பனி திகழ்கிறது.
கம்பனியின் உயர் தர கடன் நியமத்துக்காக, பிட்ச் ரேட்டிங் லங்கா பிஎல்சிக்கு AA- (lka) எனும் எனும் கடன் தரப்படுத்தல் வழங்கப்பட்டுள்ளதன் மூலம் உயர்ந்த மட்ட தரப்படுத்தலைப் பெற்ற நிதிச் சேவை வழங்குநர் எனும் நிலையை கொண்டுள்ளது. இலங்கையில் இரு சர்வதேச தரப்படுத்தல்களை பெற்ற ஒரே உள்நாட்டு நிதித் தாபனமாக பீப்பள்ஸ் லீசிங் திகழ்கிறது. இதில் ஒன்று தரநிலை மற்றும் ஏழையின் (‘‘B+/B’’) இறையாண்மைக்கு சமம். மற்றையது ஃபிட்ச் ரேட்டிங் இன்டர்நேஷனலின் (‘B’) தரப்படுத்தலாகவும் அமைந்துள்ளது.
பீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் நிறுவனத்தின் விசேட நிதிச் சேவைகளில், லீசிங், நிலையான வைப்புகள், சேமிப்புக் கணக்குகள், தனிநபர் மற்றும் வியாபார கடன்கள் மற்றும் இஸ்லாமிய நிதிச் சேவைகள் போன்றன அடங்குகின்றன.
இந்நிறுவனத்தின் துணை நிறுவனங்களாக பீப்பள்ஸ் இன்சூரன்ஸ் பிஎல்சி, பீப்பள்ஸ் மைக்ரோ- ஃபினான்ஸ் லிமிடட், பீப்பள்ஸ் லீசிங் புரொபர்டி டிவலப்மன்ட் லிமிடட், பீப்பள்ஸ் லீசிங் ஃப்லீட் மனேஜ்மன்ட் லிமிடட் மற்றும் பீப்பள்ஸ் லீசிங் ஹவ்லொக் புரொப்பர்டீஸ் லிமிடெட் ஆகியன காணப்படுகின்றன.
பீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் நிறுவனம் தமது வாடிக்கையாளர்களுக்கு ஒரே கூரையின் கீழ் பரந்தளவு நிதிசார் சேவைகளை வழங்குவதால் வாடிக்கையாளர்களுக்கு சகல சேவைகளையும் இலகுவான முறையில் பெற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளது