PLC- ஏஷியா பசிபிக் ICT எலையன்ஸ் விருதுகள் (APICTA) 2017 நிகழ்வில் PLC தங்க விருதை வென்றது
பீப்பிள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பி.எல்.சி.யின் ICT பிரிவினால் உருவாக்கப்பட்ட “SelfeCash” வசதி, APICTA 2017 விருதுகள் நிகழ்வில் நிதித் தொழில் பிரிவில் தங்க விருதை வென்றது. இப் பிரிவில் இலங்கை நிறுவமொன்று தங்க விருதைப் பெற்றது வரலாற்றிலேயே முதல் தடவையாகும். APICTA விருதுகள் நிகழ்வு அடுத்தடுத்த 17ஆவது ஆண்டாக 2017 டிசெம்பர் 07 முதல் 10 வரை டாக்கா, பங்களாதேஷில் நடைபெற்றது. இதில் ஆசிய பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், புரூணை தாருஸ்ஸலாம், சீனா, சீன தைப்பெய், ஹொங்கொங், இந்தோனேசியா, ஜப்பான், மக்காவோ, மியன்மார், பாகிஸ்தான், சிங்கப்பூர், ஸ்ரீலங்கா, வியட்நாம் ஆகிய 16 நாடுகள் கலந்துகொண்டன.