PLC – அதி பெறுமதியான வர்த்தகப் பெயர்களுள் ஒன்றாகும்


ரூ.7,614 மில்லியன் என்ற வர்த்தகப் பெயர் பெறுமதியையும் AA என்ற தரப்படுத்தலையும் கொண்டுள்ள PLC நிறுவனம், அதி பெறுமதி வாய்ந்த வர்த்தகப் பெயர்களின் பட்டியலில் 16ஆவது இடத்தை வகிக்கின்றது. ஐக்கிய இராச்சியத்திலுள்ள பிரான்ட் பினான்ஸ் பி.எல்.சி.யின் உப நிறுவனமாகிய பிரான்ட் பினான்ஸ் லங்காவினால் நிதி மற்றும் சந்தைப்படுத்தல் சாதனைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுயாதீன மற்றும் பாரபட்சமற்ற மதிப்பீட்டின் மூலம் பெறப்பட்ட முடிவு இதுவாகும். தனிப்பட்டவர்கள், SME தொழில் முயற்சியாளர்கள் மற்றும் பெரிய தொழில் நிறுவனங்களை உள்ளடக்கிய பரந்த வாடிக்கையாளர் அடித்தளத்தினால் உறுதி அடைந்துள்ள PLC நிறுவனம் தனது வர்த்தகப் பெயரின் வலிமையை இச் சாதனையின் மூலம் மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளது.