சிறிய நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் திறன் மேம்பாட்டுக்காக பீப்பள்ஸ் லீசிங்


இலங்கையின் முதல் தர வங்கிசாரா நிதிச்சேவைகளை பெற்றுக் கொடுக்கும் நிறுவனமான பீப்பள்ஸ் லீசிங், வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்த தொழில்முயற்சியாளர்கள் மற்றும் வியாபார சமூகத்தின் மேம்பாட்டை கவனத்தில் கொண்டு, திரி திவிய சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் ஆறாவது அமர்வை அண்மையில் முன்னெடுத்திருந்தது

பீப்பள்ஸ் லீசிங் வவுனியா கிளையின் முகாமையாளர் கே. கமலாகரன் ஒன்றுகூடியிருப்போர் மத்தியில் உரையாற்றுகிறார்.

இந்த நிகழ்வை பீப்பள்ஸ் லீசிங் வவுனியா கிளை ஏற்பாடு செய்திருந்ததுடன், வவுனியா நெல்ஸ் ஹோட்டலில் இடம்பெற்றது. இதில் வவுனியா மாவட்ட செயலாளர், பொலிஸ் போக்குவரத்து பொறுப்பு அதிகாரி, துறை மற்றும் சேவைகள் சபை முகாமையாளர், அனுராதபுரம் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பதில் ஆளுநர் மற்றும் பெருமளவான விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

முல்லைத்தீவு, ஓமந்தை, மாலாவி மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 161 பேர் இந்த திரி திவிய சமூகப் பொறுப்புணர்வு செயற்திட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தின் ஐந்து கட்ட சமூக பொறுப்புணர்வு கொள்கையில், தொழில் முயற்சியாண்மை மற்றும் நிதிசார் அறிவுமட்டம் ஆகியவற்றை சிறிய, நடுத்தரளவு தொழில்முயற்சியாளரக் ள் மத்தியில் மேம்படுத்துவது என்பதும் அடங்கியுள்ளது. திரி திவிய சமூக பொறுப்புணர்வு திட்டம் இந்த கொள்கை அம்சத்துக்கு பங்களிப்பு வழங்குவதுடன், பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தினால் நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்படுகிறது. சமூக பொறுப்புணர்வு வாய்ந்த நிறுவனம் எனும் வகையில், தனது வாடிக்கையாளர்கள் மற்றும் வியாபார சமூகத்தின் நலன் கருதி இந்த செயற்திட்டத்தை முன்னெடுக்கிறது.

‘வவுனியாவின் திரி திவிய திட்டம், நபர் ஒருவரை வெற்றிகரமான தொழில்முயற்சியாளர், வியாபார முகாமைத்துவ முன்னோடி, நிதி முகாமைத்துவம், வரி ஒதுக்கீடு, கணக்குகளை பேணல் மற்றும் வியாபார அறிக்கையிடல் போன்ற செயற்பாடுகளை முன்னெடுக்க ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருந்தது.

பீப்பள்ஸ் லீசிங் திரி திவிய சமூக பொறுப்புணர்வு செயற்திட்டத்தின் ஆறாவது அமர்வில் பங்கேற்றிருந்த தொழில் முயற்சியாளர்களின் ஒரு பகுதியினரை இங்கு காணலாம்

இந்த ஒரு நாள் அமர்வின் போது, பல விளக்கங்கள், சந்திப்புகளை மேற்கொள்ளும் வாய்ப்புகள் மற்றும் கலந்துரையாடல்கள் போன்றன வியாபார பிரமுகர்களுடன் இடம்பெற்றதுடன், தொழில் முயற்சியாளராக எதிர்கொள்ளக்கூடிய வெவ்வேறு சவால்களை பற்றி விளக்கும் வகையிலும் அமைந்திருந்தது.

இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்த அனைவருக்கும் பெறுமதி வாய்ந்த சான்றிதழ் மற்றும் நிகழ்வில் கலந்துரையாடப்பட்ட விடயங்களை உள்ளடக்கிய கையேடு ஆகியன வழங்கப்பட்டன.

வவுனியா பீப்பள்ஸ் லீசிங் முகாமையாளர் கே. கமலாகரன் இந்நிகழ்வில் உரையாற்றும் போது, திரி திவிய திட்டத்தினூடாக பீப்பள்ஸ் லீசிங் வாடிக்கையாளர்கள் மற்றும் வவுனியாவின் தொழில்முயற்சியாளர்களுக்கு வழிகாட்டல்களை பெற்றுக் கொடுப்பதற்கு தாம் எண்ணியுள்ளதாக குறிப்பிட்டார்.

‘எமது குழுநிலை செயற்பாட்டுக்கு சிறந்த சான்றாக இந்த திரி திவிய நிகழ்வில் பெருமளவான தொழில்முயற்சியாளர்கள் பங்கேற்றுள்ளமை அமைந்துள்ளது. இந்நிகழ்வை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு எனது ஊழியர்களின் அர்ப்பணிப்பான செயற்பாட்டை நான் வரவேற்கிறேன். இலங்கை தற்போது பொருளாதார மாற்றத்தை எதிர்கொண்ட வண்ணமுள்ளது. இந்த மாற்றத்தை பெறுமதி வாய்ந்ததாக மாற்றியமைப்பதற்கு, தொழில் முயற்சியாளர்களிடமிருந்து பங்களிப்பை நாடு எதிர்பார்க்கிறது. திரி திவிய ஊடாக தொழில் முயற்சியாளர்களின் இயலுமைகளை மேம்படுத்த பீப்பள்ஸ் லீசிங் முன்வந்திருந்தது. திரி திவிய நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கும், அதன் வளவாளர்களுக்கும் நாம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம’; என்றார்.

1995ம் ஆண்டு பீப்பள்ஸ் லீசிங் கம்பனி நிறுவப்பட்டிருந்தது. இது இலங்கையின் மாபெரும் அரச வங்கியான மக்கள் வங்கியின் துணை நிறுவனமாகும். இலங்கையின் வங்கிசாரா நிதித்துறையில் சந்தை முன்னோடியாக பீப்பள்ஸ் லீசிங் கம்பனி திகழ்கிறது.

கம்பனியின் உயர் தர கடன் நியமத்துக்காக, பிட்ச் ரேட்டிங் லங்கா பிஎல்சிக்கு AA- (lka)  எனும் கடன் தரப்படுத்தல் வழங்கப்பட்டுள்ளதன் மூலம் உயர்ந்த மட்ட தரப்படுத்தலைப் பெற்ற நிதிச் சேவை வழங்குநர் எனும் நிலையை கொண்டுள்ளது. இலங்கையில் இரு சர்வதேச தரப்படுத்தல்களை பெற்ற ஒரே உள்நாட்டு நிதித் தாபனமாக பீப்பள்ஸ் லீசிங் திகழ்கிறது. இதில் ஒன்று தரநிலை மற்றும் ஏழையின் (‘‘B+/B’’) இறையாண்மைக்கு சமம் . மற்றொன்று ஃபிட்ச் ரேட்டிங் இன்டர்நேஷனலின் (‘B’) தரப்படுத்தலாகவும் அமைந்துள்ளது.

பீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் நிறுவனத்தின் விசேட நிதிச் சேவைகளில், லீசிங், நிலையான வைப்புகள், சேமிப்புக் கணக்குகள், தனிநபர் மற்றும் வியாபார கடன்கள் மற்றும் இஸ்லாமிய நிதிச் சேவைகள் போன்றன அடங்குகின்றன.

இந்நிறுவனத்தின் துணை நிறுவனங்களாக பீப்பள்ஸ் இன்சூரன்ஸ் பிஎல்சி, பீப்பள்ஸ் மைக்ரோ- ஃபினான்ஸ் லிமிடட், பீப்பள்ஸ் லீசிங் புரொபர்டி டிவலப்மன்ட் லிமிடட், பீப்பள்ஸ் லீசிங் ஃப்லீட் மனேஜ்மன்ட் லிமிடட் மற்றும் பீப்பள்ஸ் லீசிங் ஹவ்லொக் புரொப்பர்டீஸ் லிமிடெட் ஆகியன காணப்படுகின்றன.

பீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் நிறுவனம் தமது வாடிக்கையாளர்களுக்கு ஒரே கூரையின் கீழ் பரந்தளவு நிதிசார் சேவைகளை வழங்குவதால் வாடிக்கையாளர்களுக்கு சகல சேவைகளையும் இலகுவான முறையில் பெற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளது.