பீப்பள்ஸ் லீசிங் தங்காலை கிளையினால் சிறுவர்கள் மத்தியில் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் பயிற்சிப்பட்டறை


பீப்பள்ஸ் லீசிங் தங்காலை கிளையின் மூலமாக, முன்பள்ளி சிறுவர்கள் மத்தியில் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் பயிற்சிப்பட்டறை ஒன்று அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வு தங்காலை நகர மண்டபத்தில் இடம்பெற்றதுடன், இதில் முன்பள்ளி சிறுவர்கள், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

நிகழச்சியில் பங்கேற்றிருந்த ஒரு தொகுதி முன்பள்ளி சிறுவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை காணலாம்.

சிறுவர்கள் மத்தியில் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பது தொடர்பில் அமைந்திருந்த இந்த நிகழ்ச்சியில், சிறுவர்கள் நிகழ்ச்சி பணிப்பாளரும், எழுத்தாளருமான உபுல் வீரசிங்க (உபுல் மாமா) கலந்து கொண்டு, சிறுவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார். அவர் வெளிப்படுத்தியிருந்த நடன மற்றும் பாடல் நிகழ்ச்சிகளை சிறுவர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் கண்டுகளித்தனர்.

பீப்பள்ஸ் லீசிங் தங்காலை கிளையின் முகாமையாளர் இசுரு சந்தருவன் டயஸ் இந்நிகழ்வில் உரையாற்றும் போது, முன்பள்ளி சிறுவர்கள் மத்தியில் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பது என்பது தேசிய மட்டத்தில் பொறுப்பு வாய்ந்த விடயமாக அமைந்துள்ளதாக குறிப்பிட்டார்.

‘ஆரம்ப கட்டத்தில் இவர்கள் மத்தியில் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பது என்பது, எமது எதிர்கால சந்ததியை வளமானதாக மாற்றிக் கொள்ள உதவியாக அமையும். தங்காலை மாவட்ட செயலகத்தின் அதிகாரிகள் மற்றும் பீப்பள்ஸ் லீசிங் தங்காலை கிளை ஊழியர்கள் ஆகியோரும் இந்த செயற்பாட்டுக்கு பங்களிப்பு வழங்க முன்வந்திருந்தனர். அவர்களுக்கு நான் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.

1995ம் ஆண்டு பீப்பள்ஸ் லீசிங் கம்பனி நிறுவப்பட்டிருந்தது. இது இலங்கையின் மாபெரும் அரச வங்கியான மக்கள் வங்கியின் துணை நிறுவனமாகும். இலங்கையின் வங்கிசாரா நிதித்துறையில் சந்தை முன்னோடியாக பீப்பள்ஸ் லீசிங் கம்பனி திகழ்கிறது.

சிறுவர் நிகழ்ச்சி பணிப்பாளர், எழுத்தாளர் மற்றும் பொதுப் பேச்சாளரான உபுல் வீரசிங்க (உபுல் மாமா) நடனம் மற்றும் பாடல் இசைத்து களிப்பூட்டுகிறார்.

கம்பனியின் உயர் தர கடன் நியமத்துக்காக, பிட்ச் ரேட்டிங் லங்கா பிஎல்சிக்கு AA- (lka) எனும் கடன் தரப்படுத்தல் வழங்கப்பட்டுள்ளதன் மூலம் உயர்ந்த மட்ட தரப்படுத்தலைப் பெற்ற நிதிச் சேவை வழங்குநர் எனும் நிலையை கொண்டுள்ளது. இலங்கையில் இரு சர்வதேச தரப்படுத்தல்களை பெற்ற ஒரே உள்நாட்டு நிதித் தாபனமாக பீப்பள்ஸ் லீசிங் திகழ்கிறது. இதில் ஒன்று தரநிலை மற்றும் ஏழையின் (‘‘B+/B’’) இறையாண்மைக்கு சமம். மற்றொன்று ஃபிட்ச் ரேட்டிங் இன்டர்நேஷனலின் (‘B’) தரப்படுத்தலாகவும் அமைந்துள்ளது.

பீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் நிறுவனத்தின் விசேட நிதிச் சேவைகளில், லீசிங், நிலையான வைப்புகள், சேமிப்புக் கணக்குகள், தனிநபர் மற்றும் வியாபார கடன்கள் மற்றும் இஸ்லாமிய நிதிச் சேவைகள் போன்றன அடங்குகின்றன.

சிறுவர் நிகழ்ச்சி பணிப்பாளர், எழுத்தாளர் மற்றும் பொதுப் பேச்சாளரான உபுல் வீரசிங்க (உபுல் மாமா) நடனம் மற்றும் பாடல் இசைத்து களிப்பூட்டுகிறார்.

இந்நிறுவனத்தின் துணை நிறுவனங்களாக பீப்பள்ஸ் இன்சூரன்ஸ் பிஎல்சி, பீப்பள்ஸ் மைக்ரோ- ஃபினான்ஸ் லிமிடட், பீப்பள்ஸ் லீசிங் புரொபர்டி டிவலப்மன்ட் லிமிடட், பீப்பள்ஸ் லீசிங் ஃப்லீட் மனேஜ்மன்ட் லிமிடட் மற்றும் பீப்பள்ஸ் லீசிங் ஹவ்லொக் புரொப்பர்டீஸ் லிமிடெட் ஆகியன காணப்படுகின்றன.