இலங்கையின் சிறுவர்கள் மத்தியில் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் ‘செனெஹஸ யாலு’ அன்பளிப்பு திட்டம்
இலங்கையின் முன்னணி வங்கிசாரா நிதிச்சேவைகளை வழங்கும் பீப்பள்ஸ் லீசிங் நிறுவனம்.
‘செனஹஸ இதுரும்’ சமூக பொறுப்புணர்வு செயற்திட்டத்தை ‘செனெஹஸ’ சிறுவர் சேமிப்பு கணக்குடன் அறிமுகம் செய்துள்ளது. வருடாந்தம் எட்டு சதவீத வட்டியுடன், நாட்டின் சிறுவர் சேமிப்பு கணக்குகளில் வழங்கப்படும் உயர்ந்த வட்டி வீதத்தை வழங்கும் கணக்காக இது அமைந்துள்ளது.
நிறுவனம் அண்மையில் ‘செனஹஸ யாலு’ அன்பளிப்பு திட்டத்தை சிறுவர்களுக்காக அறிமுகம் செய்திருந்தது.
‘செனஹஸ யாலு’ அன்பளிப்பு திட்டத்தின் கீழ், 13 வயது வரையான பிள்ளைகளின் பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கான கணக்கில் அடிக்கடி பணத்தை வைப்புச் செய்ய முடியும். இந்த கணக்கில் வைப்புச் செய்யப்படும் தொகைகளின் பிரகாரம், சிறுவர்களுக்கு கவர்ச்சிகரமான அன்பளிப்புகள் வழங்கப்படும்.
ரூ. 500, 1000, 2500, 5000, 10,000 மற்றும் 25,000 போன்ற தொகைகளை வைப்புச் செய்யும் போது, அவர்களுக்கு உண்டியல், மெஜிக் உண்டியல், சிறுவர் உணவு பெட்டி, சிறுவர் குடை, கணினி மவுஸ், 32 GB நினைவக அட்டை மற்றும் சுவிஸ் கியர் பயணப் பொதி போன்றன அன்பளிப்புகளாக வழங்கப்படும்.
பீப்பள்ஸ் லீசிங்கின் வைப்புகள் மற்றும் சேமிப்புகள் பிரிவின் பிரதம முகாமையாளர் சமன் லியனகே ‘செனஹஸ யாலு’ திட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில் ‘சிறுவர்கள் மத்தியில் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பது என்பது தேசிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தினால் செனஹஸ யாலு அன்பளிப்புத் திட்டம் சிறுவர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டதுடன், தற்போது அவர்களின் சேமிப்புக் கணக்குகளின் மீது கவர்ச்சிகரமான அன்பளிப்புகளை பெற்றுக் கொள்ள முடியும். உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. சிறுவர்கள் இதற்கு கவரப்பட்டுள்ளனர். 13 வயது வரையான பிள்ளைகளின் பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்காக ‘செனஹஸ யாலு’ கணக்குகளை ஆரம்பிக்க ஆர்வம் காண்பித்து வருகின்றனர்.’ என்றார்.
1995ம் ஆண்டு பீப்பள்ஸ் லீசிங் கம்பனி நிறுவப்பட்டிருந்தது. இது இலங்கையின் மாபெரும் அரச வங்கியான மக்கள் வங்கியின் துணை நிறுவனமாகும். இலங்கையின் வங்கிசாரா நிதித்துறையில் சந்தை முன்னோடியாக பீப்பள்ஸ் லீசிங் கம்பனி திகழ்கிறது.
கம்பனியின் உயர் தர கடன் நியமத்துக்காக, பிட்ச் ரேட்டிங் லங்கா பிஎல்சிக்கு AA- (lka) எனும் கடன் தரப்படுத்தல் வழங்கப்பட்டுள்ளதன் மூலம் உயர்ந்த மட்ட தரப்படுத்தலைப் பெற்ற நிதிச் சேவை வழங்குநர் எனும் நிலையை கொண்டுள்ளது. இரண்டு சர்வதேச மதிப்பீடுகளைக் கொண்ட ஒரே இலங்கை நிதி நிறுவனம் பிஎல்சி ஆகும், அதில் ஒன்று தரநிலை மற்றும் ஏழையின் (‘‘B+/B’’) இறையாண்மைக்கு சமம், மற்றொன்று ஃபிட்ச் ரேட்டிங் இன்டர்நேஷனலின் (‘B’) இறையாண்மைக்குக் கீழே உள்ளது.
பீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் நிறுவனத்தின் விசேட நிதிச் சேவைகளில், லீசிங், நிலையான வைப்புகள், சேமிப்புக் கணக்குகள், தனிநபர் மற்றும் வியாபார கடன்கள் மற்றும் இஸ்லாமிய நிதிச் சேவைகள் போன்றன அடங்குகின்றன.
இந்நிறுவனத்தின் துணை நிறுவனங்களாக பீப்பள்ஸ் இன்சூரன்ஸ் பிஎல்சி, பீப்பள்ஸ் மைக்ரோ- ஃபினான்ஸ் லிமிடட், பீப்பள்ஸ் லீசிங் புரொபர்டி டிவலப்மன்ட் லிமிடட், பீப்பள்ஸ் லீசிங் ஃப்லீட் மனேஜ்மன்ட் லிமிடட் மற்றும் பீப்பள்ஸ் லீசிங் ஹவ்லொக் புரொப்பர்டீஸ் லிமிடெட் ஆகியன காணப்படுகின்றன.
பீப்பள்ஸ் லீசிங் நிறுவனம் தமது வாடிக்கையாளர்களுக்கு ஒரே கூரையின் கீழ் பரந்தளவு நிதிசார் சேவைகளை வழங்குவதால் வாடிக்கையாளர்களுக்கு சகல சேவைகளையும் இலகுவான முறையில் பெற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளது.