பீபள்ஸ் லீசிங்- இலங்கையின் உயர்தர நிதிச் சேவை வழங்குநர் – வருடாந்த தரத்திற்கான நிலை 2021


பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி, எல்எம்டீயின் வருடாந்த தரவுகளுக்கேற்ப இலங்கையில் மிக உயர்ந்த மதிப்பிடப்பட்ட நிதிச் சேவை வழங்குநராக உள்ளது, இது எல்எம்டீயின் ஊடக சேவை மேற்கொண்ட இலங்கையின் முன்னணி தர நிறுவனங்கள் மற்றும் அதன் விரிவான பகுப்பாய்வின் மூலமான செயல்திறன் மற்றும் சாதனைகள் போன்ற ஆய்வுகளின்படி வெளியிட்ட 2021ற்கான அறிக்கையாகும்.

அத்தோடு, பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சியானது, நாட்டிலுள்ள மிகவும் விரும்பப்படும் தர நிறுவனங்களில் முதலிடத்தைப் பிடித்துள்ளது..

நிதித் தர குறியீடு எல்எம்டீயின் பிராண்ட்ஸ் ஆண்டு இதழில் இலங்கையில் மிகவும் மதிப்புமிக்க மற்றும் வலுவான தரங்களை மதிப்பிடுகின்றது. வருடாந்தம் தரங்களை வெளியிடும் இலங்கையின் முன்னோடி தர மதிப்பீட்டு நிறுவனமாக பிராண்ட் ஃபைனான்ஸ் லங்கா திகழ்கின்றது.

பிராண்ட் ஃபைனான்ஸ் லங்கா, பீப்பள்ஸ் லீசிங் இன் தர மதிப்பீடுகளை செய்துள்ளது. இதனடிப்படையில் நிறுவனத்தின் தர மதிப்பீட்டானது,  இலங்கை ரூபாய் பெறுமதியினடிப்படையில், 8,132 பில்லியன்களாகவும் 2021இற்கான கடன் தரப்படுத்தலானது AA ஆகவும் காணப்பட்டது.

மிகவும் மதிப்புமிக்க மற்றும் வலுவான 100 தரங்கள் ஒரு சுயாதீன சந்தைப்படுத்தல் ஆராய்ச்சி நிறுவனத்தினால் சேகரிக்கப்பட்ட தரவுகளாலும், கொழும்பு பங்குச் சந்தையால் விளம்பரப்படுத்தப்படட மற்றும் பட்டியலிடப்பட்ட நிதி மற்றும் நிதிசாரா தகவல்களாலும் தீர்மானிக்கப்படுகின்றன

இலங்கை தரங்களின் மதிப்பீடு மற்றும் வலுவான தன்மையை கண்டறியும் பிராண்ட் ஃபைனான்ஸ் லங்கா நிறுவனத்தின் தலைமை அலுவலகம் லண்டனில் உள்ளது. இது இலங்கை உட்பட பல நாடுகளில் வலையமைப்பின் கிளைகளினூடாக இயங்குகின்றது.

இலங்கை அரசுக்கு சொந்த முன்னோடி நிதி நிறுவனமான பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி (பிஎல்சி) தனது 25வது ஆண்டு நிறைவை 31 மே 2021 அன்று கொண்டாடுகின்றது.