பொலன்னறுவை கல் விகாரை வளாகத்தில் கழிவு முகாமைத்துவத்தை மேம்படுத்துவதற்கு பீப்பள்ஸ் லீசிங் பங்களிப்பு


பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி, கல்வி மேம்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் உள்ளூர் சமூகங்களின் அதிகாரமளித்தல் போன்ற மூன்று மையப் பகுதிகளின் கீழ் அதன் நிறுவன சமூகப் பொறுப்புகளை செயற்படுத்துகின்றது. சுற்றாடல் பாதுகாப்புப் பொறுப்புணர்வு முயற்சியாக, பொலன்னறுவை கல் விகாரையின் விகாராதிபதியின் வழிகாட்டலின் கீழ் மத்திய கலாசார நிதியம் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் இனங்காணப்பட்ட தேவையின் அடிப்படையில் பொலன்னறுவை கல் விகாரையில் கழிவுகளை பிரிக்கும் தொட்டிகளை நிறுவுவதற்கு பீப்பள்ஸ் லீசிங் பங்களிப்பு வழங்கியுள்ளது.

பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர் ஷமிந்திர மார்செலின் கருத்திட்டத்திற்கு அமைய இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த முன்முயற்சியின் நோக்கம் ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதில் உதவுவதும் முறையான கழிவகற்றல் அமைப்பை உருவாக்குவதுமாகும்.

நிறுவப்பட்ட குப்பைத் தொட்டிகள் 2022 ஏப்ரல் 06ஆம் திகதி பொது மக்களிடம் கையளிக்கும் பொருட்டு பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சியின் உதவி பிராந்திய முகாமையாளர் சுசில் பிரியந்தவினால் கந்த கெட்டிய அத்தாதஸ்ஸி – சோலோஸ்மஸ்தான பாரகர தேரரிடம் கையளிக்கப்பட்டது.

பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல், தொடர்பாடல் மற்றும் நிலைத்தன்மையின் முகாமையாளர் ஹிஷான் வெல்மில்ல, கிளை முகாமையாளர் நாலக சுரேஷ், பீப்பள்ஸ் லீசிங் பொலன்னறுவை கிளையின் இரண்டாவது அதிகாரி சம்மிக்க ஜயமாந்த,பொலன்னறுவை மத்திய கலாச்சார நிதியத்தின் பிரதம மேற்பார்வையாளர் திஸ்ஸ பண்டார,  தொல்பொருள் திணைக்களத்தின் பிராந்திய உத்தியோகத்தர் மலிந்த நிஷான் மற்றும் பொலன்னறுவை பிரதேச பொது சுகாதார பரிசோதகர் சுதத் பாலச்சந்திர ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

திடக்கழிவுப் பிரிப்பு என்பது கழிவு முகாமைத்துவ சங்கிலியின் ஒரு முக்கிய பகுதியாகும். மேலும் இது திடக்கழிவுகளை குறைக்கவும்,  மீள் உபயோகம் மற்றும் மீள்சுழற்சி மற்றும் முறையான முகாமைத்துவத்திற்கான வழிகளை எளிதாக்குகிறது. இந்த 3R முறையின் வளர்ச்சியின் மூலம், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதிலும், மனிதர்களின் நல்வாழ்விலும் இது ஒரு நன்மை பயக்கும் விடயமாகும்.

பொலன்னறுவை கல் விகாரை பழைய காலத்தில் உத்தரராம என்றே அழைக்கப்பட்டது. இது பொலன்னறுவையில் அமைந்துள்ள புத்தரின் பாறை கோயிலாகும். பெரிய கருங்கற்பாறை முகப்புக்களில் செதுக்கப்பட்டுள்ள நான்கு புத்தர் சிற்பங்கள் இக்கோயிலின் முக்கிய அம்சம். இவற்றுள் ஒன்று பெரிய இருக்கும் சிலை, இன்னொன்று சிறிய சிலை, மற்றொன்று நிற்கும் நிலையில் உள்ள சிலை, நான்காவது படுத்த நிலையில் உள்ளது. பழங்கால சிங்களவர்களின் சிற்பம் மற்றும் செதுக்கல் கலைகளுக்கு இவை சிறந்த எடுத்துக்காட்டுகளாகக் கருதப்படுகின்றன. கல் விகாரை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்களை ஈர்க்கும் ஒரு புராதன புனித இடமாகும்.

பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி இலங்கையின் முன்னணி வங்கியல்லாத நிதி நிறுவனம் மற்றும் நாட்டின் மிகப்பெரிய அரச வங்கிகளில் ஒன்றான மக்கள் வங்கியின் துணை நிறுவனமாகும். 1996ஆம் ஆண்டு விசேட குத்தகை நிறுவனமாக செயற்படத் தொடங்கிய பீப்பள்ஸ் லீசிங், 2011ஆம் ஆண்டு கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி, பங்களாதேஷில் வெளிநாட்டுச் செயற்பாடுகள் உட்பட ஆறு துணை நிறுவனங்களுடன் பல்வகைப்பட்ட வங்கியல்லாத நிதியியல் அதிகார மையமாக வளர்ந்துள்ளது. அதன் 25ஆவது ஆண்டு விழாவை 31 மே 2021 அன்று கொண்டாடியது.

நிறுவப்பட்ட குப்பைத் தொட்டிகள், பொது மக்களிடம் கையளிக்கும் பொருட்டு பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சியின் உதவி பிராந்திய முகாமையாளர் சுசில் பிரியந்தவினால் கந்த கெட்டிய அத்தாதஸ்ஸி – சோலோஸ்மஸ்தான பாரகர தேரரிடம் கையளிக்கப்பட்டது.