COVID 19 தொற்று நோயிலிருந்து காக்கும் போராட்டத்திற்கு, PLC மூலம் 5 மில்லியன் நிதியுதவி


எமது சமூகத்திற்கு முக்கிய தேவை ஏற்படும் எல்லா வேளைகளிலும் முதலாவதாக உதவிக்கு வருவது, இலங்கையின் வங்கித் துறை சாராத நிதி நிறுவனங்களுள் முதலிடத்தை வகிக்கும் மற்றும் மக்களுக்கு நட்புறவான பீப்பிள்ஸ் லீசிங்கின் வழக்கமாகும்.

நாடு முழுவதும் Covid 19 கொள்ளை நோய்க்கு எதிராகப் போராடும் இந்த வேளையில். அதிமேதகு ஜனாதிபதியின் பணிப்பிற்கு அமைய இலங்கை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ள விசேட நிதியமான Covid 19 உடல்நலப் பராமரிப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு பீப்பிள்ஸ் லீசிங் நிறுவனம் ரூபா. 5 மில்லியனை வழங்கியுள்ளது.

பீப்பிள்ஸ் லீசிங் தலைவர் திரு.சுஜீவ ராஜபக்ஷ இந்த நன்கொடையை அதிமேதகு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பீ. ஜயசுந்தiவிடம் கையளிப்பதை இப் படம் காட்டுகின்றது. அருகில் நிற்பவர்.பீப்பிள்ஸ் லீசிங் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பொது முகாமையாளருமான ஜனாப் சப்ரி இப்ராஹிம்.