பெருமளவு வசதிகளுடன் புதிய முகவரியில் பீப்பள்ஸ் லீசிங் நெலுவ கிளை


பெருமளவான வாடிக்கையாளர்களின் தேவைகளை துரிதமாகவும், சிக்கலில்லாத வகையிலும் நிவர்த்தி செய்யும் வகையில், பீப்பள்ஸ் லீசிங் தனது நெலுவ கிளையை மேம்படுத்தப்பட்ட அதிகளவு இடவசதிகள் படைத்த புதிய முகவரிக்கு இடம்மாற்றியுள்ளது.

புதிய முகவரிக்கு இடம்மாற்றம் செய்யப்பட்ட பீப்பள்ஸ் லீசிங் நெலுவ கிளையை பீப்பள்ஸ் லீசிங் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பொது முகாமையாளருமான சப்ரி இப்ரஹிம் அங்குரார்ப்பணம் செய்வதையும், அருகில் சிரேஷ்ட பதில் பொது முகாமையாளர் சஞ்ஜீவ பண்டாரநாயக்க, பிரதம முகாமையாளர் ஹசந்த டி சில்வா ஆகியோரை காணலாம்.

புதிதாக இடம்மாற்றப்பட்ட கிளையை (மனுக கட்டிடம், தெல்லவ வீதி, நெலுவ) பீப்பள்ஸ் லீசிங் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பொது முகாமையாளருமான சப்ரி இப்ரஹிம் அங்குரார்ப்பணம் செய்திருந்தார்.

இலங்கையில் தேயிலை பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் நகரங்களில் ஒன்றாக நெலுவ அமைந்துள்ளது. பெருமளவு ஆரம்பநிலை வியாபாரங்களுக்கும் மக்களின் வாழ்க்கைக்கும் வலுச்சேர்த்துள்ளது. எனவே, பீப்பள்ஸ் லீசிங் கிளைக்கு விஜயம் செய்யும் மக்களுக்கு குத்தகை மற்றும் நிதிச்சேவைகளை துரித கதியில் பெற்றுக் கொடுக்கப்படுகின்றன. இந்த சேவையை பெற்றுக் கொடுப்பதற்காக புதிய முகவரிக்கு நெலுவ கிளை இடம்மாற்றப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பதில் பொது முகாமையாளர் சஞ்ஜீவ பண்டாரநாயக்க, செயற்பாடுகளுக்கான பிரதம முகாமையாளர் ஹசந்த டி சில்வா மற்றும் கிளை முகாமையாளர் அருண ஹேவாமத்தும மற்றும் பீப்பள்ஸ் லீசிங் வாடிக்கையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பீப்பள்ஸ் லீசிங் சிரேஷ்ட பதில் பொது முகாமையாளர் சஞ்ஜீவ பண்டாரநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், ‘நெலுவ வேகமாக அபிவிருத்தியடைந்து வரும் பிரதேசமாகும். வியாபாரங்கள் புதிதாக ஆரம்பிக்கப்படுகின்றன. நெலுவ பிரதேசத்தை அண்மித்து வசிப்போர் தமது நிதித் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்கு, பீப்பள்ஸ் லீசிங் மீது தமது நம்பிக்கையை கொண்டுள்ளனர். எனவே நெலுவ பிரதேசத்தில் நவீன வசதிகள் படைத்த பீப்பள்ஸ் லீசிங் கிளையொன்றை கொண்டிருக்க வேண்டியதன் அவசியத்தை நாம் உணர்ந்தோம். இதன் காரணமாக அதிகளவு வசதிகள் படைத்த புதிய முகவரிக்கு நெலுவ கிளையை இடம்மாற்றியுள்ளோம். இதனூடாக வாடிக்கையாளர்களுக்கு நட்பான, சிக்கலில்லாத மற்றும் சௌகரியமான நிதிச் சேவைகளை பெற்றுக் கொடுக்க நாம் முன்வந்துள்ளோம். பிரதேசத்தை அண்மித்து வசிப்போர் தற்போது மக்களுக்கு நட்பான நிதிச் சேவைகளை எமது புதிய கிளையிலிருந்து பெற்றுக் கொள்ள முடியும் என்றார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ‘சகல சேவைகளையும் வழங்கும் நிதிச்சேவைகளை பெற்றுக்கொடுக்கும் நிறுவனமாக நாம் திகழ்கிறோம். எனவே, நெலுவ பிரதேசத்தைச் சேர்ந்த மக்களை புதிதாக இடம்மாற்றம் செய்யப்பட்ட பீப்பள்ஸ் லீசிங் கிளைக்கு விஜயம் செய்யுமாறு பிரதேசவாசிகளை அன்புடன் அழைக்கிறேன். துரிதமாகவும் நட்பான வகையிலும் குத்தகை மற்றும் நிதியியல் சேவைகளை அவர்களுக்கு பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். பீப்பள்ஸ் லீசிங் உடன் உங்கள் வியாபாரங்கள் மற்றும் பிரத்தியேக வாழ்க்கைகள் அனைத்தும் வளம் பெறும் என நான் எதிர்பார்க்கிறேன் என்றார்.

1995ம் ஆண்டு பீப்பள்ஸ் லீசிங் கம்பனி நிறுவப்பட்டிருந்தது. இது இலங்கையின் மாபெரும் அரச வங்கியான மக்கள் வங்கியின் துணை நிறுவனமாகும். இலங்கையின் வங்கிசாரா நிதித்துறையில் சந்தை முன்னோடியாக பீப்பள்ஸ் லீசிங் கம்பனி திகழ்கிறது.

கம்பனியின் உயர் தர கடன் நியமத்துக்காக, பிட்ச் ரேட்டிங் லங்கா பிஎல்சிக்கு AA- (lka) எனும் கடன் தரப்படுத்தல் வழங்கப்பட்டுள்ளதன் மூலம் உயர்ந்த மட்ட தரப்படுத்தலைப் பெற்ற நிதிச் சேவை வழங்குநர் எனும் நிலையை கொண்டுள்ளது. இலங்கையில் இரு சர்வதேச தரப்படுத்தல்களை பெற்ற ஒரே உள்நாட்டு நிதித் தாபனமாக பீப்பள்ஸ் லீசிங் திகழ்கிறது. இதில் ஒன்று தரநிலை மற்றும் ஏழையின் (‘பி+/பி’) க்கு நிகரானதாக அமைந்துள்ளது. மற்றையது பிட்ச் ரேட்டிங் இன்டர்நேஷனலின் (‘பி’) தரப்படுத்தலாகவும் அமைந்துள்ளது.

மூத்த நிர்வாகத்துடன் பீப்பிள்ஸ் லீசிங் நெலுவ கிளையின் பணியாளர்கள்

பீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் நிறுவனத்தின் விசேட நிதிச் சேவைகளில், லீசிங், நிலையான வைப்புகள், சேமிப்புக் கணக்குகள், தனிநபர் மற்றும் வியாபார கடன்கள் மற்றும் இஸ்லாமிய நிதிச் சேவைகள் போன்றன அடங்குகின்றன.

இந்நிறுவனத்தின் துணை நிறுவனங்களாக பீப்பள்ஸ் இன்சூரன்ஸ் பிஎல்சி, பீப்பள்ஸ் மைக்ரோ- ஃபினான்ஸ் லிமிடட், பீப்பள்ஸ் லீசிங் புரொபர்டி டிவலப்மன்ட் லிமிடட், பீப்பள்ஸ் லீசிங் ஃப்லீட் மனேஜ்மன்ட் லிமிடட் மற்றும் பீப்பள்ஸ் லீசிங் ஹவ்லொக் புரொப்பர்டீஸ் லிமிடெட் ஆகியன காணப்படுகின்றன.

பீப்பள்ஸ் லீசிங் நிறுவனம் தமது வாடிக்கையாளர்களுக்கு ஒரே கூரையின் கீழ் பரந்தளவு நிதிசார் சேவைகளை வழங்குவதால் வாடிக்கையாளர்களுக்கு சகல சேவைகளையும் இலகுவான முறையில் பெற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளது.