வேலைவாய்ப்பு மற்றும் தெரிவு
பி. எல். சியானது தமக்குரிய ஊழியர்களை பணியமர்த்துவதில் அல்லது தெரிவு செய்வதில் அதற்கே உரிய வழமையான அனுகுமுறைகளையும் விதிமுறைகளையும் பின்பற்றி வருகின்றது. மனித வள முகாமைத்துவப் பிரிவினால் நடைமுறைப்படுத்தும் முறைமைகளினூடாக புதிய ஊழியர்களை தெரிவு செய்தல் பணிமர்த்தல் அவர்களுக்குரிய பயிற்சிகளை ஏற்பாடு செய்து நடாத்தல் போன்ற நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஊடாக எமது நோக்கத்தை அடையத்தக்க முயற்சியுள்ள திறமையான ஆளுமை மிகுந்தவர்களை இனங்கண்டு தெரிவு செய்வும் சந்தர்ப்பம் கிடைக்கப்பெறுகின்றது. இத்தெரிவானது எவ்வித சாதி மத இன குல மொழி பால் மற்றும் அரசியல் பேதங்கள் ஏதுமின்றி திறமையானவர்களுக்கு சந்தர்ப்பத்தை பெற்றுக்கொடுத்தலே இங்கு இடம்பெறுகின்றதுடன் உரியவர்களுக்கு பதவியுயர்வுகளும் கிடைக்கின்றன.
புதிதாக சேவையில் அமர்த்தப்படும் ஊழியர்களுக்கு உரிய மேற்பார்வையின் கீழ் வடிவமைக்கப்பட்ட பயிற்சிகள் வழிகாட்டல் நிகழ்வுகள் மற்றும் தேவையான அனைத்துவிதமான வசதிகளைப் பெற்றுக்கொடுத்தல் என்பவற்றின் மூலம் அவர்கள் அவர்களது பணியை உரியவிதமாக செய்யும் வகையில் அமைத்துக் கொடுக்கப்படும்.
பிஎல்சியூடன் இணைந்துகொள்வதற்குத் தேவையான மிகக் குறைந்த தகைமைகள்
- க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் முதல் தடவையிலேயே கணிதம் மற்றும் ஆங்கிலத்தில் திறமை சித்தியுடன் க.பொ.த உயர்தரப் பீர்டசையில் மூன்று பாடங்களிலும் சித்தியடைந்திருத்தல் கட்டயாமாகும்.
- மேலதிகமாக தொழில் துறை அல்லது கள அனுபவம் மற்றும் தொழில் சார் அனுபவங்கள் ஆங்கில மொழி எழுத மற்றும் பேசுவதலுள்ள திறமைகள் கருத்திற்கொள்ளப்படும்.
நாம் எமது குழாத்தை முன்னேற்றமடையச் செய்வோம்.
எமது எதிர்கால வெற்றியின் பிரதானமான சொத்தாக பிஎல்சி தமது ஊழியர்களை கருதுகின்றது. ஒவ்வொரு ஊழியரும், தம்மிடமிருந்து நிறுவனம் எதனை எதிர்பார்க்கின்றது என்பதனை முறையாக அறிந்து அதற்கு ஏற்ற வகையில் செயற்றிறன் முகாமைத்துவ செயன்முறைகளின் மூலம், தேவையான திறன்கள், அறிவு, பெறுமதிகள் மற்றும் அனுபவங்களை தமது உயர் திறன் விருத்தி மட்டத்துக்கு கொண்டு செல்லும் வகையில் அமைத்துக்கொள்ளல் வேண்டும்.
அனைத்து ஊழியர்களும், மாற்றம்பெறும் சூழல் தேவைகள் மற்றும் தமது தொழில் ரீதியான விருத்திப் படிகளுக்கும், அனைத்துவிதமான தற்போதைய மற்றும் எதிர்கால வர்த்தக தேவைகளுக்கும் ஏற்றவகையில் தமது அறிவுத் திறன்கள் மற்றும் ஆற்றல்களை நவீனமயப்படுத்துவதுடன் புதுப்பித்துக்கொள்ளல் அத்தியவசியமாகும். அத்துடன் பிஎல்சியானது தமது சேவைக் குழாத்தின் திறன்கள் மற்றும் ஆற்றல்களை புதுப்பித்துக் கொள்வதற்கும் நவீனமயப்படுத்துவதற்கும் தமது நோக்கம் குறிக்கோள் என்பவற்றை அடையும் வகையில் செயற்பாடுகளை கொண்டு நடாத்துவதற்கும் தேவையான பயிற்சிகள் மற்றும் செயலமர்வுகள் என்பவற்றை ஏற்பாடு செய்வதற்குத் தேவையான நிதி முதலீடுகளை ஒதுக்கியுள்ளது.
புதிதாக சேவையில் இணைபவர்களது தேவைக்கு ஏற்ப மற்றும் நிறுவனத் தேவைகளுக்கு ஏற்பவும் முறைசார் நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் பயிற்சிகள் வழங்கப்படும். மேலும் வருடாந்த செயற்றிறன் மதிப்பீட்டின் மூலம் தனிநபர் பயிற்சித் தேவைகள் பற்றி அடையாளம் காணப்படும். பொறுத்தமான ஊழியர்களுக்கு உயர் கல்விக்கான நிதி உதவிகள் வழங்கப்படுவதுடன், ஏற்கனவே உயர் கல்வி கற்றவர்களுக்கு அதற்குரிய செலவைப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பமும் வழங்கப்படும், அத்துடன், வெளிவாரி மற்றும் வெளிநாட்டு பயிற்சிகளும் பெற்றுக்கொடுக்கப்படும்.
வெளிவாரியான பயிற்சி சந்தர்ப்பங்கள் பிஎல்சி குழாத்தின் அறிவு, திறன் மற்றும் நடத்தை என்பவற்றில் விருத்தியை ஏற்படுத்துவதுடன், தலைமைத்துவ விருத்தி, முகாமைத்துவ திறன்கள், பயிற்சி மற்றும் வழிகாட்டல் முறைமைகளும் பயன்படுத்தப்படுகின்றன.
பிற உண்மைகள்
- நாம் எமது எமது குழாத்துக்கு செவிசாய்ப்போம்.
- நாம் பல்வகைமையுடைய எமது குழாத்தின் பலத்தை அறிவோம்.
- நாம் எமது குழாத்தின் திறமைகளை அறிந்து கௌரவிப்போம்.
- நாம் எமது குழாத்தைப் பற்றி கவனம் செலுத்துவதுடன் அவர்களது நலனுக்கு முன்னுரிமையளிப்போம்.
- நாம் எமது குழாத்தின் வேலைப்பழு மற்றும் வாழக்கையை சமநிலைப்படுத்தத் தேவையான நலன்புரி நிகழ்வுகளை ஏற்பாடு செய்துகொடுப்போம்.