பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர்
திரு. சஞ்ஜீவ பண்டாரநாயக்க

திரு. சஞ்ஜீவ பண்டாரநாயக்க, 36 வருடங்களுக்கு மேலான தொழில்சார் அனுபவத்தைக் கொண்டுள்ளதுடன், அதில் 31 வருடங்கள் வங்கிசாரா நிதிச்சேவைகளை வழங்கும் துறையில் (NBFI) அனுபவத்தைக் கொண்டுள்ளார். 2007 ஆம் ஆண்டில் பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் (PLC) நிறுவனத்துடன் நிதியியல் மற்றும் நிர்வாக பிரதி பொது முகாமையாளராக இணைந்து கொண்டார். PLC இல் இவர் பிரதான பிரிவுகளான நிதியியல், திறைசேரி, நிர்வாகம், மனித வளங்கள், தகவல் தொழில்நுட்பம், கடன் மற்றும் சந்தைப்படுத்தல் ஆகிய பிரிவுகளுக்கு தலைமைத்துவமளித்துள்ளார். இவரின் முயற்சிகளினால், வங்கிசாராத நிதிச்சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் வரிசையில் 15 வருடங்களாக PLC ஐ முன்னிலையில் திகழ முடிந்துள்ளது.

திரு. பண்டாரநாயக்க, இலங்கை, பட்டய கணக்காளர் நிறுவகம், அவுஸ்திரேலியா சான்றளிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளர் நிறுவகம் மற்றும் இலங்கை சான்றளிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளர் சங்கம் ஆகியவற்றின் அங்கத்தவராக திகழ்கின்றார். அத்துடன், இவர் முகாமைத்துவ கணக்காளர்கள் பட்டய நிறுவகத்தின் (ஐக்கிய இராஜ்ஜியம்) இறுதியாளராகவும் திகழ்கின்றார். 2009, 2013 மற்றும் 2015 ஆகிய வருடங்களில் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்த நிதிச்சேவைகளை வழங்கும் நிறுவனங்களை நிர்வகிப்பதற்கான பதில் பிரதம நிறைவேற்று அதிகாரியாக இலங்கை மத்திய வங்கி இவரை நியமித்திருந்தது.

இலங்கை கொடுகடன் தகவல் பணியகத்தின் (CRIB) பணிப்பாளராக இவர் 10 வருடங்களுக்கு மேலாக திகழ்கின்றார். லீசிங் சம்மேளனத்தில் இவர் இரு தடவைகள் அங்கம் பெற்றுள்ளதுடன், 10 வருடங்களுக்கு மேலாக பணிப்பாளர் சபை அங்கத்தவராகவும் செயலாற்றியுள்ளார்.நிதிச் சேவைகளை வழங்கும் இல்ல சம்மேளனத்தின் (Finance House Association) பணிப்பாளர் சபை அங்கத்தவராகவும் இவர் திகழ்ந்தார்.


பதில் பிரதம நிறைவேற்று அதிகாரி / திரு.
உதேஷ் குணவர்தன

நிதியியல் மற்றும் செயற்பாட்டு முகாமைத்துவம் ஆகியவற்றில் பெருமளவு அனுபவத்தைக் கொண்ட நிபுணராக திரு. உதேஷ் குணவர்தன திகழ்கின்றார். பீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சியின் பிரதம செயற்பாட்டு அதிகாரியாக, நிறுவனத்தின் மூலோபாய செயற்திட்டங்களை முன்னெடுப்பதில் முக்கிய பங்காற்றியிருந்ததுடன், நிறுவனசார் சிறப்பையும் உறுதி செய்திருந்தார். இரு தசாப்த காலங்களுக்கு மேலான தொழில் அனுபவத்தைக் கொண்ட திரு. குணவர்தன, நிதிசார் தொழிற்துறையில் பல்வேறு பிரிவுகளில் நிபுணத்துவத்தை வெளிப்படுத்தி நன்மதிப்பைப் பெற்ற நபராக தம்மை நிலையுயர்த்தியுள்ளார்.

தொடர்ச்சியான பயிலல் மற்றும் நிபுணத்துவ விருத்தி போன்றவற்றுக்கான தமது அர்ப்பணிப்பினூடாக திரு. குணவர்தனவின் கல்விசார் தகைமைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இலங்கையின் ACA (Associate Chartered Accountant) மற்றும் ACMA (Associate of the Chartered Institute of Management Accountants) போன்ற பெருமைக்குரிய நிலைகளை கொண்டிருப்பதுடன்,இலங்கை வங்கியியல் நிறுவகத்தின் (IBSL) திறைசேரி, முதலீடுகள் மற்றும் இடர் முகாமைத்துவம் போன்றவற்றில் டிப்ளோமாவையும் கொண்டுள்ளார். இந்த உறுதியான கல்வி அடித்தளத்தினூடாக, நிதித்துறையில் காணப்படும் சிக்கல்களை கடந்து செல்ல அவசியமான அறிவையும் திறன்களையும் அவருக்கு வழங்கியுள்ளது.

தமது தொழில் வாழ்வில், சில முக்கியமான நிலைகளை வகித்துள்ளதுடன், அவற்றினூடாக, அவரின் நிதிசார் மற்றும் வியாபார செயற்பாடுகள் தொடர்பான பரிபூரண புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்ள பங்களிப்பு வழங்கப்பட்டிருந்தது. பங்களாதேஷின் லங்கன் அலையன்ஸ் பினான்ஸ் லிமிடெட்டின் பிரதம நிதி அதிகாரி மற்றும் கம்பனி செயலாளராக கடமையாற்றியிருந்ததனூடாக, பெறுமதி வாய்ந்த சர்வதேச அனுபவத்தையும், ஒழுங்குபடுத்தல்கள் தொடர்பான முக்கியமான தகவல்களையும் பெற்றுக் கொண்டுள்ளார். மேலும், பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சியின் உள்ளக கணக்காய்வு பிரிவின் பிரதி பொது முகாமையாளராக கடமையாற்றியுள்ளதுடன், பணிப்பாளர் சபையின் கணக்காய்வு குழுவின் செயலாளராகவும் இடர் முகாமைத்துவம் மற்றும் கூட்டாண்மை ஆளுகையில் தமது அனுபவத்தையும் மேம்படுத்தியுள்ளார்.

திரு. குணவர்தன, கணக்கீடு, கணக்காய்வு, நிதிசார் முகாமைத்துவம் மற்றும் திறைசேரி செயற்பாடுகள் போன்றவற்றில் ஆழமான அனுபவத்தை கொண்டுள்ளதுடன், நிதிசார் கட்டமைப்பினுள் தமது செயற்திறன் மற்றும் வினைத்திறன் ஆகியவற்றையும் பிரதிபலித்துள்ளார். மாற்றமடையும் சந்தைப் போக்குகளுக்கேற்ப மாறும் ஆற்றல் மற்றும் மூலோபாய சிந்தனை போன்றன அவர் சேவையாற்றியுள்ள நிறுவனங்களின் நிலைபேறான வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியுள்ளன.

பிரதம செயற்பாட்டு அதிகாரி எனும் நிலைக்கு மேலதிகமாக, பங்களாதேஷில் லங்கன் அலையன்ஸ் பினான்ஸ் லிமிடெட்டின் நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர், இலங்கை லீசிங் சம்மேளனத்தின் பணிப்பாளர் போன்ற நிலைகளையும் திரு. குணவர்தன வகிக்கின்றார். இந்த தலைமைத்துவ நிலைகளினூடாக, நிதிசார் தொழிற்துறையின் பரந்த அபிவிருத்திக்கான அவரின் அர்ப்பணிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், இணைந்த செயற்பாடுகளையும் ஊக்குவிக்கின்றன.

துறைக்கு திரு. குணவர்தனவின் அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்புகள் போன்றனவும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன. நிதியியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் அவர் கொண்டுள்ள சிறந்த ஆற்றல்களுக்கான எடுத்துக்காட்டாக அவுஸ்திரேலிய கணனி சங்கத்திடமிருந்து உலக பரிசை வெற்றியீட்டி சாதனை படைத்திருந்தமை அமைந்துள்ளது.

நிதியியல் துறையில் நன்மதிப்பைப் பெற்ற நபராக திரு. உதேஷ் குணவர்தன திகழ்வதுடன், தமது ஆழமான அனுபவம், கல்விசார் தகைமைகள் மற்றும் தலைமைத்துவ பண்புகள் போன்றவற்றை நிறுவனத்தின் வெற்றிகரமான செயற்பாடு மற்றும் தொழிற்துறையின் முன்னேற்றத்துக்கு ஆற்றியுள்ளார். அவரின் மூலோபாய ஆற்றல்கள் மற்றும் சிறப்புக்கான அர்ப்பணிப்பு ஆகியன பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சிக்கும், பரந்தளவு நிதிசார் சமூகத்துக்கும் அவரை பெறுமதி வாய்ந்த ஒரு சொத்தாக திகழச் செய்துள்ளன.


பிரதம நிறைவேற்று அதிகாரி/ பொது முகாமையாளர் ஷமிந்திர மார்செலின்

இலங்கை DFCC வங்கியின் சிரேஷ்ட உப தலைவரும் நிறுவன வங்கிச் சேவைப் பிரதானியுமாகிய திரு. ஷமிந்திர மார்செலின், 2020 நவம்பர் 20ஆம் திகதி தொடக்கம் பீப்பிள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பி.எல்.சி.யின் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் பொது முகாமையாளராகவும் இணைந்துள்ளார்.

HSBC குழுமத்திற்காக வெளிநாடுகளில் பணியாற்றியதோடு மட்டுமல்லாமல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வங்கிச் சேவைகளில் பரந்த அனுபவத்தையும் பெற்ற வங்கியாளரான திரு. மார்செலின், பீப்பிள்ஸ் லீசிங் நிறுவனத்தின் மூலோபாய முன்னேற்றத்திற்குப் பங்களிப்புச் செய்யக்கூடிய வகையில் வங்கித் துறை சார்ந்த தனித்துவமான நுண்ணறிவைக் கொண்டுள்ளார்.

அவர் DFCC வங்கியில் சேவையாற்றியபோது, அந்த வங்கியின் நிறுவன வங்கிச் சேவை மூலோபாயங்களை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் நடைமுறைப்படுத்தும் முயற்சிகளுக்குத் தலைமை தாங்கினார்.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில், மாலைதீவைச் சேர்ந்த பிரபல கம்பனி ஒன்றினால் பெறப்பட்ட இரட்டைத் தவணை இருதரப்புக் கடன் வசதிக்கான தனி ஆலோசகர் மற்றும் கட்டமைப்பு வங்கிக்குரிய அதிகாரமளிப்பை DFCC பெற்றுக்கொள்வதில் அவர் முக்கிய பங்கினை வகித்தார். இலங்கை DFCC வங்கியினால் வழங்கப்பட்ட மிகப் பெரிய கடன் வசதி இதுவாகும்.

வங்கியின் நிறைவேற்றுக் குழு, சொத்து மற்றும் பொறுப்புக் குழு, செயற்பாட்டு இடர் முகாமைத்துவக் குழு ஆகியவற்றின் அங்கத்தவர் என்ற முறையில் வங்கியின் நிறுவன முன்முயற்சிகளைச் சிறப்பாகப் பயன்படுத்துவதற்கு திரு. மார்செலின் முக்கியமான மூலோபாய பங்களிப்பினை வழங்கினார்.

HSBC குழுமத்தின் மாலைதீவு நாட்டிக்கான முகாமையாளர் என்ற முறையில் வெவ்வேறு பதவிகளில் செயலாற்றியதைத் தொடர்ந்தே அவர் DFCC வங்கியில் இணைந்தார்.

மாலைதீவில் வங்கித் தொழிற்றுறையின் புரட்சிகரமான மாற்றத்திற்குப் பங்களிப்புச் செய்த அவர், அந்த வேளையில் மாலைதீவின் மிகப் பெரிய சொத்துத் திரட்டலுக்கும் பொறுப்பாக இருந்தார்.

அபிவிருத்தி, செயற்பாடு மற்றும் நிறுவன சொத்து, சர்வதேச உப நிறுவன வங்கிச் சேவை மற்றும் அரச துறை என்பவற்றை உள்ளடக்கிய வணிக மற்றும் உலகளாவிய வங்கிச் சேவை வியாபாரத்தின் வளர்ச்சி அவரது தலைமையிலும் வழிகாட்டுதலிலும் ஒரு வலுவான ஒட்டுமொத்த வங்கிச் சேவை முன்முயற்சியாக விரிவடைந்தது. இதில் இலாப-நட்ட பொறுப்பும் அடங்கியிருந்தது. முக்கிய பங்காளிகள் மற்றும் வியாபாரத் தலைவர்களுடன் மூலோபாய உறவுகளைக் கட்டியெழுப்பவும் அவற்றைத் தொடர்ச்சியாகப் பேணவும் DFCC வங்கிக்கு இடமளிக்கும் விதத்தில், உறவுமுறை மற்றும் வங்கிச் சேவைத் திட்ட முகாமையாளர்களின் அணி ஒன்றினை அவர் வெற்றிகரமாக மேற்பார்வை செய்து வழிநடத்தினார்.

DFCC வங்கியில் இணைவதற்கு முன்னர் திரு. மார்செலின் HSBC ஸ்ரீலங்கா மற்றும் மாலைதீவின் நிதி நிறுவனங்கள் குழு மற்றும் அரச துறையின் பிரதானியாகக் கடமையாற்றினார்.

இலங்கை இறையாண்மை பத்திர மற்றும் குவாஸி இறையாண்மைப் பத்திர நிறுவனங்களின் வெற்றிகரமான முகாமைத்துவம், HSBC குழுமத்தின் முதலீட்டு வங்கியியல் மூலோபாயத்தின் அமுலாக்கம் என்பன அவரது முக்கிய சாதனைகளில் உள்ளடங்கும்.

திரு. மார்செலின் இலங்கையின் வங்கிச் சேவை மற்றும் நிதிச் சேவை துறைகளில் வலுவான தகைமைகளைக் கொண்டுள்ளார். இலங்கையின் முதலீட்டு வாய்ப்புகளை உலகளாவிய ரீதியில் வெளிப்படுத்துவதற்கும் அவர் பங்களிப்புச் செய்துள்ளார்.

நிதியமைச்சு, இலங்கை மத்திய வங்கி, பிரபல அரச மற்றும் தனியார் வணிக வங்கிகள் ஆகியவற்றினால் ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியப் பிராந்தியங்களில் நடத்தப்பட்ட பல்வேறு முதலீட்டு ஊக்குவிப்புப் பிரசார நிகழ்ச்சிகளில் அவர் பங்குபற்றியுள்ளார்.

திரு. மார்செலின் 1993ஆம் ஆண்டு இலங்கையிலுள்ள கொழும்பு சர்வதேசப் பாடசாலையில் உயர் கல்வியை முடித்துக்கொண்டார். லண்டன், நகர பல்கலைக்கழகத்திடமிருந்து 1996இல் பொருளியல் மற்றும் கணக்கியல் துறையில் BSc பட்டம் பெற்ற அவர், நிதி ஆலோசகர்களின் சர்வதேசத் தகைமை (FAIQ), ஐக்கிய இராச்சியத்தின் சாட்டர்ட் இன்சூரன்ஸ் நிலைய தகைமை (2008) ஆகியவற்றையும் பெற்றுள்ளார்.


முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி /
பொது முகாமையாளர், திரு. சப்ரி இப்ராஹிம்

2017 ஜுலை 1 ஆம் திகதி பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி / பொது முகாமையாளராக திரு. இப்ராஹிம் நியமிக்கப்பட்டார். அதற்கு முன்னர், உள்நாட்டிலும், சர்வதேச மட்டத்திலும் பல சிரேஷ்ட நிலைகளை வகித்துள்ளார். இதில், மக்கள் வங்கியில் சிரேஷ்ட பிரதி பொது முகாமையாளர், மொத்த வங்கியியல் (2014 ஒக்டோபர் முதல் 2016 செப்டெம்பர் வரை) மற்றும் சிரேஷ்ட பிரதி பொது முகாமையாளர், இடர் முகாமைத்துவம் (ஆகஸ்ட் 2007 முதல் ஒக்டோபர் 2014), ஹற்றன் நஷனல் வங்கியில் (2004 முதல் 2007 வரை) பிரதி பொது முகாமையாளர், திறைசேரி தலைமை அதிகாரி, கூட்டாண்மை வங்கியியல் மற்றும் வசூலிப்புகள் தலைமை அதிகாரி, பிரதம இடர் அதிகாரி மற்றும் பிரதம கடன் அதிகாரி மற்றும் ஸ்டான்டர்ட் சார்ட்டட் வங்கியின் (2002 முதல் 2004 வரை) கடன் மற்றும் GSAM தலைமை அதிகாரி ஆகிய பதவிகள் அடங்கும்.

34 வருடங்களுக்கு மேலான வங்கியியல் அனுபவத்தை திரு. இப்ராஹிம் கொண்டுள்ளார். பிரதானமாக கூட்டாண்மை வங்கியியல், திறைசேரி முகாமைத்துவம் மற்றும் இடர் முகாமைத்துவம் ஆகியன இவற்றில் அடங்கும். இவர் கொழும்பு பல்கலைக்கழகத்திடமிருந்து Honors Degree (BSc) பட்டத்தை கொண்டுள்ளதுடன், ஐக்கிய இராஜ்ஜியத்தின் பட்டய வங்கியியலாளர் நிறுவகத்தின் (FCIB) அங்கத்தவராகவும் திகழ்கின்றார். HNB செக்கியுரிட்டீஸ் (பிரைவட்) லிமிடெட் நிறுவனத்தின் பணிப்பாளராகவும் (2005 முதல் 2007) திரு. இப்ராஹிம் திகழ்ந்தார். அத்துடன் பீப்பளஸ் மேர்ச்சட் பாங்க் பிஎல்சியின் (2009 முதல் 2011 வரை) பணிப்பாளராகவும் திகழ்ந்தார். இவர் தற்போது பீப்பள்ஸ் இன்சூரன்ஸ் பிஎல்சி, பீப்பள்ஸ் மைக்குரோபினான்ஸ் லிமிடெட், பீப்பள்ஸ் லீசிங் ஃபிலீட் மனேஜ்மன்ட் லிமிடெட், பீப்பள்ஸ் லீசிங் புரொப்பர்டி டிவலப்மன்ட் லிமிடெட் மற்றும் பீப்பள்ஸ் லீசிங் ஹவ்லொக் புரொப்பர்டீஸ் லிமிடெட் ஆகியவற்றின் பணிப்பாளராக திகழ்கின்றார்.


முன்னைய பிரதம நிறைவேற்று அதிகாரி முகாமைப் பணிப்பாளர் (1997 – 2017), திரு. டீ. பீ. குமாரகே

பீப்பள்ஸ் லீசிங் கம்பனியின் பிரதம நிறைவேற்று அதிகாரி பொது முகாமையாளர் மற்றும் பீப்பள்ஸ் லீசிங் கம்பனியின் துணை நிறுவனங்களின் முகாமைப் பணிப்பாளரான திரு. டீ. பீ. குமாரகே அவர்கள் பீப்பள்ஸ் லீசிங் கம்பனியில் 20 வருட ஆக்கபூர்வமான திறன்மிக்க தொடர் சேவையினை நிறைவு செய்தார். பீப்பள்ஸ் லீசிங் கம்பனியானது 1995 ஆம் ஆண்டு மக்கள் வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனமாக இணைக்கப்பட்டது. திரு. குமாரகே அவர்கள் பீப்பள்ஸ் லீசிங் கம்பனியின் பிரதம நிறைவேற்று அதிகாரி பொது முகாமையாளராக 1997 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். திரு குமாரகே அவர்களது இலக்கை நோக்கிய தலைமைத்துவமானது நிறுவனத்தை மிகக் குறுகிய காலத்தில் வெற்றியை நோக்கிய பாதையில் இட்டுச் சென்றது. திரு. குமாரகே அவர்கள் நிறுவனத்தை லீசிங் துறை மற்றும் மிகப்பெரிய வங்கியல்லாத நிதி நிறுவனம் என்ற வகையில் முன்னிலையில் திகழத்தக்க நிறுவனமாக மாற்றுவதற்குரிய தலைவராக திகழ்ந்தார் என்பதை மறுக்க முடியாது. கொழும்பு பங்கு சந்தையில் முன்னணியில் திகழத்தக்க நிறுவனமாக மாற்றியதுடன் வர்த்தக நடவடிக்கைகளை இலங்கையில் மாத்திரமன்றி வங்காளதேசத்திலும் விஸ்தரித்தார். திரு. குமாரகே என்ற நாமம் பீப்பள்ஸ் லீசிங் கம்பனி வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் நாமமாகும்.