பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் நிறுவனத்தின் ஆண்டறிக்கை, International ARC Awards நிகழ்வில் இலங்கையின் மிகச் சிறந்ததாக முடிசூட்டப்பட்டு, மாபெரும் விருது மற்றும் பல்வேறு தங்க விருதுகளையும் வென்றுள்ளது


இலங்கையில் வங்கி அல்லாத முதன்மையான நிதி நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற
பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி, அமெரிக்காவின் Mercomm Inc. ஆல் ஏற்பாடு
செய்யப்பட்ட ARC Awards விருதுகள் நிகழ்வில் தனது ஆண்டறிக்கைக்காக மீண்டும் ஒரு
தடவை சர்வதேச அங்கீகாரத்தைச் சம்பாதித்துள்ளது. நிறுவனத்திற்கும், நாட்டிற்கும் பெருமை
ஈட்டித் தந்த இந்த வெற்றியில், “Great Partnerships” (மகத்தான கூட்டாண்மைகள்) என்று
தலைப்பிடப்பட்ட பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சியின் 2023/24
ஆண்டறிக்கைக்காக சர்வதேச அரங்கில் மதிப்பிற்குரிய பல கௌரவங்களை அது
தனதாக்கியுள்ளது. படைப்பாற்றலும், ஈடுபாட்டைத் தூண்டும் வகையிலும்
வடிவமைக்கப்பட்ட “Great Partnerships” ஆனது நிறுவனத்தின் பெறுபேற்றுத்திறன் மற்றும்
அதன் வர்த்தகநாமத் தூதுவர்களான கிரிக்கெட் நட்சத்திரங்கள் கமிந்து மென்டிஸ் மற்றும்
தனஞ்ஜய டி சில்வா ஆகியோருடனான புகழ்பூத்த கூட்டாண்மை ஆகியவற்றுக்கிடையிலான
ஒற்றுமையை விளக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. மோட்டார் கார் ஒன்றின்
பாகங்களுடன் ஒப்பிட்டு, வணிகத்தின் ஒவ்வொரு செயற்பாட்டுப் பிரிவும் எவ்வாறு
முக்கியமானவை என்பதைச் சித்தரிக்கும் வகையில் ஒரு உன்னதமான காரின் உருவகத்தை
இது பயன்படுத்தியுள்ளதுடன், ஒருங்கிணைந்த நிறுவனமாக, இந்நிறுவனத்தின்
உண்மையான மதிப்பை வெளிப்படுத்துகின்றது.
அந்த வகையில், “Financial Services: General Category” (நிதிச் சேவைகள்: பொதுப் பிரிவு)
என்ற பிரிவில் ஐந்து தங்க விருதுகளை சம்பாதித்து, இலங்கையிலிருந்து ஆகக் கூடுதலான
விருதுகளையும் சம்பாதித்த நிறுவனமாக மாறியுள்ளது. முறையே Financial Data (நிதிப்
புள்ளிவிபரம்), Chairman’s/President’s Letter (தவிசாளரின்/தலைவரின் கடிதம்), Interior
Design (உட்புற வடிவமைப்பு), Non-Traditional Annual Report (பாரம்பரியத்திற்கு மாறான
ஆண்டறிக்கை), மற்றும் Written Text (எழுத்தாக்கம்) ஆகியவற்றுக்கு தங்க விருதுகள்
வழங்கப்பட்டுள்ளன. மேலும், Infographics (தகவல் படவுருக்கள்) க்காக வெள்ளி விருதையும்,
Printing & Production (அச்சிடல் மற்றும் தயாரிப்பு வடிவம்) க்காக வெண்கல விருதையும் அது
பெற்றுள்ளது.
மேலும், நிறுவனத்தின் வரலாற்றிலேயே முதல்முறையாக, இந்த ஆண்டு ARC Awards
விருதுகள் நிகழ்வில் இரு மாபெரும் விருதுகளை பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ்
பெற்றுள்ளதுடன், இதைப் பெற்ற ஒரேயொரு இலங்கை நிறுவனம் என்பதும்
குறிப்பிடத்தக்கது. இவற்றுள் “Best of Sri Lanka” மற்றும் “Best of Category – Financial Data”
ஆகிய பெருமதிப்பிற்குரிய மாபெரும் விருதுகள் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொழிற்துறை வேறுபாடின்றி, அனைத்துப் பிரிவுகள் மத்தியிலும் உச்ச வெற்றியீட்டும்
ஆண்டறிக்கைகளிலிருந்து தெரிவு செய்யப்படுகின்ற அறிக்கைகளுக்கு மாத்திரம் மாபெரும்
விருதுகள் வழங்கப்படுவதால் இச்சாதனைகள் பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ்
நிறுவனத்தைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதுடன், மிகவும்
மதிப்புமிக்கவையாகவும் ஆக்கியுள்ளன.
பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் நிறுவனத்தின் தவிசாளர் பிரதீப் அமிர்தநாயகம் அவர்கள்
இந்த அங்கீகாரங்களின் முக்கியத்துவம் குறித்து கருத்து வெளியிடுகையில்,
“இப்பெருமதிப்பிற்குரிய விருதுகளை வென்றுள்ளமை உண்மையில் எமக்கு மிகவும்

பெருமையளிக்கின்ற, அர்த்தமுள்ள ஒரு சாதனையாகும். இந்த ஆண்டிற்கான ARC Awards
விருதுகள் நிகழ்வில் இரு மாபெரும் விருதுகளை வென்று, பல்வேறு துறைகள் மத்தியில்
இலங்கையின் மிகச் சிறந்ததாக ஏழு ஆண்டுகளின் பின்னர் மீண்டும் ஒரு தடவை
அங்கீகாரத்தைச் சம்பாதித்துள்ளமை அதியுயர் மட்டத்தில் ஆண்டறிக்கைத் தராதரங்களைப்
பேணுவதில் எமது அணியின் அர்ப்பணிப்பின் உண்மையான பிரதிபலிப்பாகும். எம்முடன்
தொடர்புபட்ட அனைத்து தரப்பினரும் எந்நேரமும் விரிவான மற்றும் துல்லியமான தகவல்
விபரங்களுக்கான அணுகலைக் கொண்டிருப்பதை உறுதி செய்து,
வெளிப்படைத்தன்மையுடனும், தெளிவுடனும் அவற்றைத் தொடர்ச்சியாக வழங்குவதில்
பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் நிறுவனம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு
வருகின்றது,” என்று குறிப்பிட்டார்.
“Academy Awards of Annual Reports” (ஆண்டறிக்கைகளுக்கான அக்கடமி விருதுகள்) என்று
பொதுவாக அழைக்கப்படுகின்ற ARC Awards நிகழ்வானது நிதி அறிக்கையிடலில்
மகத்துவத்திற்கான சர்வதேச தர ஒப்பீட்டு நியமமாகத் திகழ்வதுடன், இந்த ஆண்டு, 32
நாடுகளிலிருந்து 1,550 க்கும் மேற்பட்ட நுழைவு விண்ணப்பங்கள் போட்டியிட்டன. ஆகவே
இச்சாதனைகள், நிதி மற்றும் நிறுவன அறிக்கையிடலில் பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ்
நிறுவனத்தின் அதிசிறந்த ஆற்றல்களை பிரதிபலிப்பதுடன், நிதிச்சேவைகள் துறையில்
ஒருங்கிணைந்த அறிக்கையிடலில் புதிய தராதரத்தை நிலைநாட்டி, வெளிப்படைத்தன்மை
மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றில் அது காண்பிக்கும் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக்
காட்டுகின்றது.
பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது
முகாமையாளர் சஞ்சீவ பண்டாரநாயக்க அவர்கள் கருத்து வெளியிடுகையில், “எமது
ஆண்டறிக்கைகளை வடிவமைப்பதில் நாம் மேற்கொள்ளும் அயராத உழைப்பிற்கு
இவ்விருதுகள் மிகத் தெளிவாக முத்திரை குத்தியுள்ளன. சர்வதேச தராதரங்களை பூர்த்தி
செய்வது மாத்திரமன்றி, அதற்கும் மேலான வகையில் அறிக்கைகளை தயார் செய்வதில் நாம்
எப்போதும் கவனம் செலுத்தியுள்ளதுடன், இந்த ஆண்டு ARC Awards விருதுகள் நிகழ்வில்
சம்பாதித்துள்ள அங்கீகாரம் அதனைப் பிரதிபலிக்கின்றது. நாம் பெற்றுக்கொண்ட மதிப்புமிக்க
அங்கீகாரத்தைப் போற்றுகின்ற அதேசமயம், ஒருங்கிணைந்த அறிக்கையிடலில்
மகத்துவத்தின் எல்லைகளை தொடர்ந்தும் விரிவுபடுத்துவதற்கு நாம் திடசங்கல்பம்
பூண்டுள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.
பீப்பள்ஸ் லீசிங் அன்ட் லீசிங் நிறுவனத்தின் பிரதம நிதி அதிகாரி ஒமால் சுமணசிரி அவர்கள்
கருத்து வெளியிடுகையில், “இந்த அங்கீகாரங்களை சம்பாதித்துள்ளமை எமக்கு மிகவும்
பெருமையளிக்கின்றது. இது எம்மைப் பொறுத்தவரையில் முக்கியத்துவம் வாய்ந்த
சாதனையாக மாறியுள்ளதுடன், எமது ஒட்டுமொத்த அணியின் கடின உழைப்பு மற்றும்
அர்ப்பணிப்பை தெளிவாக பிரதிபலிக்கின்றது. இத்தகைய மகத்தான ஆண்டறிக்கையை
வடிவமைப்பதில் எமக்கு விலைமதிப்பற்ற உதவியை வழங்கியுள்ள Emagewise (Pvt) Ltd
நிறுவனத்திற்கு எமது உண்மையான நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்
கொள்ள விரும்புகின்றோம்,” என்று குறிப்பிட்டார்.
உலகெங்கிலுமிருந்து பெரு நிறுவனங்கள், சிறு வணிகங்கள், அரசாங்க முகவர் ஸ்தாபனங்கள்
மற்றும் இலாப நோக்கற்ற ஸ்தாபனங்கள் அடங்கலாக பலவும் ARC விருதுகள் நிகழ்வில்
பங்குபற்றுகின்றன. இதற்கிடையில், இதற்கான நடுவப்பணியானது சுயாதீனமான முறையில்
இடம்பெறுவதுடன், படைப்பாற்றல், தெளிவான விளக்கங்கள், செயற்திறன் மற்றும்

புத்தாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில், விண்ணப்பத்தாரிகளின் வரவுசெலவுத் திட்டங்கள்
மற்றும் அளவு தொடர்பான பாகுபாடின்றி நியாயமான மதிப்பீடு உறுதி செய்யப்படுகின்றது.
ARC Awards நிகழ்வில் பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் நிறுவனத்தின் வெற்றி,
மகத்துவத்தின் தொடர்ச்சியான வெற்றி வரலாற்றின் அங்கமாகும். தனது
ஆண்டறிக்கைகளுக்காக ARC Awards நிகழ்வில் கடந்தகாலங்களிலும் பல்வேறு விருதுகளை
இந்நிறுவனம் தொடர்ச்சியாக சம்பாதித்து வந்துள்ளது. “Multi-Dimensional” என்ற
தலைப்பிலான அதன் 2022/23 ஆண்டறிக்கையானது தகவல் படவுருக்களுக்காக
(Infographics) மூன்று தங்க விருதுகள் மற்றும் மாபெரும் விருதொன்று அடங்கலாக, நான்கு
விருதுகளை சம்பாதித்திருந்தது. ARC Awards விருதுகளுக்கு அப்பால், இலங்கை பட்டயக்
கணக்காளர்கள் கற்கை நிலையம் (Institute of Certified Management Accountants of Sri
Lanka) ஏற்பாடு செய்த ஒருங்கிணைந்த அறிக்கையிடல் விருதுகள் நிகழ்வில்
மகத்துவத்திற்கான விருது, CA Sri Lanka ஏற்பாடு செய்த TAGS Awards மற்றும் SAFA Awards
போன்ற ஏனைய பல மேடைகளிலும் இந்நிறுவனத்தின் ஆண்டறிக்கைகள் அங்கீகாரங்கள்
சம்பாதித்துள்ளன.
பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி தொடர்பான விபரங்கள்
இலங்கையிலுள்ள, அனுமதி உரிமம் பெற்ற, வங்கி அல்லாத நிதி நிறுவனமான பீப்பள்ஸ்
லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி, பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட நிதித் தீர்வுகளை
வழங்குவதில் அதன் புத்தாக்கம் மற்றும் ஓயாத அர்ப்பணிப்பிற்கு பெயர்பெற்று
விளங்குகின்றது. வலுவான அத்திவாரத்துடனும், பல்வகைப்பட்ட தீர்வு வரிசைகளுடனும்,
மகத்துவத்தின் மீதான அர்ப்பணிப்புடனும், நிதிச் சேவைகள் துறையில் முன்னிலை வகிக்கும்
நிறுவனமாக PLC தலைதூக்கியுள்ளது. மக்கள் வங்கியின் துணை நிறுவனமாக, இலங்கை
மக்களுக்கு வளர்ச்சி மற்றும் சுபீட்சத்தை வளர்த்து, நிதித் சேவைகளை வழங்குவதில்
நம்பிக்கைக்குரிய மற்றும் நன்மதிப்புடைய சேவை வழங்குனர் என்ற தனது ஸ்தானத்தை PLC
தொடர்ந்தும் வலுப்படுத்தி வருகின்றது.