பீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி, அங்குரார்ப்பண CEO Club நிகழ்வில் சந்தைப்படுத்தல் துறை வல்லுனர்களைக் கௌரவித்துள்ளது


பீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி, தனது அங்குரார்ப்பண “CEO Club” நிகழ்வை, 2023 ஜுன் 13 அன்று கொழும்பிலுள்ள புகழ்பூத்த தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடாத்தியுள்ளது. தனது பணியாளர்களின் வளர்ச்சியின் மேல் முதலீடுகளை மேற்கொண்டு, மகத்துவத்திற்கான கலாச்சாரத்தை வளர்ப்பதில் நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பைக் குறிக்கும் வகையில், இந்நிகழ்வானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததொரு மைல்கல்லாக மாறியுள்ளது. முதல்முறையாக ஆரம்பிக்கப்பட்டுள்ள CEO Club என்ற பிரத்தியேகமான நிகழ்ச்சித்திட்டமானது, நிறுவனத்தில் உச்ச பெறுபேறுகளை நிலைநாட்டுகின்றவர்களுக்கு அங்கீகாரமளித்து, போற்றிக் கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.      

இந்நிகழ்விற்கு முன்பதாக பல்வேறுபட்ட ஆர்வமூட்டுகின்ற மற்றும் போட்டி நிகழ்வுகள் இடம்பெற்றிருந்ததுடன், பல்வேறுபட்ட கிளைகள் மத்தியில் விற்பனைப் பெறுபேறுகளை முன்னெடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட கிளைகளுக்கு இடையிலான போட்டியொன்றும் இவற்றுள் அடங்கியிருந்தது. இப்போட்டியின் வெற்றியாளர்களுக்கு CEO Club நிகழ்வில் விருதுகள் வழங்கப்பட்டதுடன், வெளிநாட்டுச் சுற்றுலாக்கள், ஹோட்டலில் தங்குவதற்கான திட்டங்கள் மற்றும் பேர்ள் பே இல் ஒரு நாள் பொழுதைக் களிப்பதற்கான ஏற்பாடு அடங்கலாக வியப்பூட்டும் பரிசுகள் அவர்களுக்கு வழங்கப்பட்டன. நாடளாவியரீதியிலுள்ள பீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி கிளை வலையமைப்பிலிருந்து 200 க்கும் மேற்பட்ட உச்ச சந்தைப்படுத்தல் வல்லுனர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றதுடன், நிறுவனத்தினுள் காணப்படும் பரவலான ஈடுபாடு மற்றும் உற்சாகமான போட்டி மனப்பாங்கு ஆகியவற்றை சுட்டிக்காட்டுவதாக இது அமைந்துள்ளது.      

இம்முயற்சி குறித்து பீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி இன் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. உதேஷ் குணவர்த்தன அவர்கள் கருத்து வெளியிடுகையில், “எமது அங்குரார்ப்பண CEO Club நிகழ்வானது எமது உச்ச சந்தைப்படுத்தல் வல்லுனர்களின் மகத்தான திறமைகளையும், அர்ப்பணிப்பையும் போற்றிக் கொண்டாடுவது மட்டுமன்றி, மகத்தான உச்சங்களை எட்டுவதற்கு ஒட்டுமொத்த அணிக்கும் உத்வேகமளிக்கின்றது. இந்த மதிப்பு மிக்க கழகமானது மகத்துவத்திற்கு அங்கீகாரமளித்து, வெகுமதியளிப்பதற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதுடன், எமது அணியின் போற்றத்தக்க சாதனைகள் குறித்து நான் உண்மையில் பெருமை கொள்கின்றேன்,” என்று குறிப்பிட்டார்.

ஊழியர்களின் மிகச் சிறந்த சாதனைகளை அங்கீகரித்து, வெகுமதியளிப்பதற்கான ஒரு மகத்தான மேடையை CEO Club நிகழ்வு வழங்கியுள்ளதுடன், இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் மறக்க முடியாத மற்றும் உத்வேகமளிக்கின்ற ஒரு நிகழ்வாகவும் மாறியுள்ளது. நிறுவனத்தின் உள்ளக அணிகளுக்கு இடையில் ஒருவருக்கொருவர் அறிமுகமாகி, நட்புறவையும், தோழமையையும் வளர்ப்பதற்கான மகத்தான வாய்ப்பினையும் இது வழங்கியுள்ளது. நிறுவனத்தினுள் திறமை மற்றும் உத்வேகமளிக்கும் மகத்துவமான பெறுபேற்றுத்திறன் ஆகியவற்றை அங்கீகரிப்பதில் பீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி இன் அர்ப்பணிப்பை இம்முயற்சி பிரதிபலிக்கின்றது.