தடைகளைத் தகர்த்தல்: பீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி மற்றும் ஹேலீஸ் சோலார் ஆகியன ஒன்றிணைந்து, சூரிய மின்சக்தியை அனைவரும் பெற்றுக்கொள்ள வழிவகுத்துள்ளன


நிலைபேணத்தகு எரிசக்தி தீர்வுகளைப் பொறுத்தவரையில் மிகவும் தைரியமான ஒரு முயற்சியில் காலடியெடுத்து வைத்து, பீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி (People’s Leasing & Finance PLC – PLC) மற்றும் ஹேலீஸ் ஃபென்டன்ஸ் லிமிட்டெட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அங்கமான ஹேலீஸ் சோலார் (Hayleys Solar) ஆகியன, மேற்கூரை சூரிய மின்னுற்பத்தியில், வீடுகள், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கான இலகுவான மற்றும் கட்டுபடியான கடன் திட்டத்தை வழங்குவதற்காக, புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றினூடாக புதுமையான கூட்டிணைவொன்றை உத்தியோகபூர்வமாக ஏற்படுத்திக் கொண்டுள்ளன. பசுமையான எதிர்காலத்தை ஊக்குவித்து, இலங்கை மக்கள் தமது அன்றாட பாவனைக்கும் மற்றும் வணிக நோக்கங்களுக்கும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உள்வாங்கிக் கொள்வதற்கு இத்திட்டம் அவர்களுக்கு வலுவூட்டும்.      

நாட்டில் வீடுகளிலும், சிறு தொழில் முயற்சிகளிலும் சூரிய மின்வலுவைப் பயன்படுத்துவதில் இலகுவான மற்றும் கட்டுபடியான கடன் வசதிகள் போதுமான அளவில் கிடைக்காமை பாரியதொரு முட்டுக்கட்டையாக காணப்படுகின்றது. இச்சவாலுக்கு தீர்வுகாணும் வகையில், இத்தகைய வாடிக்கையாளர்களுக்கு எவ்விதமான பிணைகளுமின்றி, மிகவும் கவர்ச்சியான வட்டி வீதத்துடன் சூரிய மின்வலுவைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பினை வழங்குவதற்கு தனித்துவமான சூரிய மின்னுற்பத்தி கடன் தீர்வை வடிவமைப்பதில் ஹேலீஸ் சோலார் மற்றும் PLC ஆகியன கைகோர்த்துள்ளன. சௌகரியம் மற்றும் இலகுவில் இதனைப் பெற்றுக்கொள்ளும் வழிமுறையை மேம்படுத்துவதற்காக, விரைவான அனுமதி மற்றும் வழங்கல் செயல்முறையையும் இத்திட்டம் வழங்குகின்றது. தேசிய மின் விநியோகத்துடன் இணைக்கப்படாத, இணைக்கப்பட்ட மற்றும் கலப்பு இணைப்புக்கள், சூரிய மின்வலு நீர் சூடாக்கிகள் மற்றும் சூரிய மின்வலு நீர்ப்பம்புகள் போன்ற ஏனைய சூரிய மின்வலு தீர்வுகளுக்காக, PLC வாடிக்கையாளர்களுக்கு இக்கடன் திட்டம் பிரத்தியேகமாக வழங்கப்படுகின்றது.     

மூலோபாய முக்கியத்துவம் மிக்க இக்கூட்டாண்மையின் கீழ், PLC இன் பிரத்தியேகமயமாக்கப்பட்ட குத்தகைத் திட்டத்தினூடாக, தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் புத்தாக்கமான கடன் தீர்வுகளை நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கு வழங்குவதன் மூலமாக சூரிய மின்வலுவை அவை உள்வாங்கிக் கொள்வதை PLC மற்றும் ஹேலீஸ் சோலார் இடையிலான மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இக்கூட்டாண்மை ஊக்குவிக்கும். நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் துறையின் தேவைப்பாடுகளை நிறைவேற்றும் வகையில் மிகவும் போட்டித்திறன் கொண்ட வட்டி வீதங்கள் மற்றும் குத்தகை தொகை எல்லை அடங்கலாக, பல்வேறுபட்ட கவர்ச்சியான நன்மைகளை PLC சூரிய மின்வலு கடன் திட்டம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும். சூரிய மின்வலுத் தீர்வுகளை பரந்த மட்டத்தில் மக்களுக்கு வழங்கும் முயற்சிகளை ஆரம்பிக்கும் வகையில் இந்த கடன் உதவி மூலோபாய ரீதியில் முன்னெடுக்கப்படும்.        

PLC இன் பதில் பிரதம நிறைவேற்று அதிகாரி / பொது முகாமையாளர் உதேஷ் குணவர்த்தன அவர்கள் இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் எமது நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக காணப்படுகின்றன. பல்வேறு கைத்தொழில் துறைகளில் அவை இயங்குவதுடன், மின்சாரத்தை பாரியளவில் நுகரும் பிரிவாகவும் காணப்படுகின்றன. ஹேலீஸ் சோலார் உடனான மூலோபாய முக்கியத்துவம் மிக்க எமது கூட்டாண்மை, நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் துறையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை இலகுவாக பெற்றுக்கொள்வதற்குஅனுசரணையளிப்பதுடன், வினைதிறனை மேம்படுத்தி, சர்வதேச அளவில் போட்டித்திறன் கொண்டவையாக மாறுவதற்கான அவற்றின் தேடலுக்கும் உதவுகின்றது. இந்த வாய்ப்பினை தவற விடாது பயன்படுத்தி, நாட்டில் மிகவும் சூழல்நேயமான மற்றும் நிலைபேணத்தகு வணிக கட்டமைப்பினைக் கட்டியெழுப்புவதில் முக்கிய பங்கு வகிக்க முன்வருமாறு நான் அனைவரையும் வலியுறுத்துகின்றேன்,” என்று குறிப்பிட்டார்.      

PLC வழங்குகின்ற கடனுதவியானது வணிகச் செயல்பாடுகளின் அனைத்து அம்சங்கள் மத்தியிலும் நிலைபேற்றியலை தங்குதடையின்றி ஒருங்கிணைக்கும் வகையில் மூலோபாயரீதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சூழல், சமூகம் மற்றும் நிர்வாகம் (ESG) ஆகிய கோட்பாடுகளில் காண்பிக்கும் அதன் ஓயாத அர்ப்பணிப்பை வெளிக்காண்பித்த வண்ணம், சூழல் மீது அக்கறை கொண்ட இந்த முயற்சி நன்கு ஸ்தாபிக்கப்பட்டுள்ள PLC இன் நிலைபேற்றியல் கட்டமைப்புடன் சிறப்பாக ஒத்திசைகின்றது. சூரிய மின்வலுவை ஊக்குவிப்பதில் பிரத்தியேகமாக கவனம் செலுத்தியவாறு, காபன் உமிழ்வை கணிசமான அளவில் குறைத்து, மிகவும் துடிதுடிப்பான மற்றும் நிலைபேணத்தகு சூழலை வளர்ப்பதற்குப் பங்களித்து, சூழல் தொடர்பான சவால்களுக்கு தீர்வு காண்பதில் PLC மிகவும் தீவிரமாக செயற்பட்டு வருகின்றது.      

இலங்கையில் சூரிய மின்வலு உற்பத்தி ஏற்பாடுகளில் முதல் ஸ்தானத்தில் திகழ்ந்து வருகின்ற ஹேலீஸ் சோலார், PLC வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான நன்மைகளுடன், பல்வகைப்பட்ட சூரிய மின்வலு உற்பத்தி ஏற்பாடுகளை வழங்கி, அதன் மூலமான பல்வேறு பயன்களை வழங்குவதற்காக PLC உடன் கைகோர்த்துள்ளது. தொழிற்துறையில் இத்தகைய இரு முன்னோடிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பானது, புதுப்பித்தக்க எரிசக்தியை உள்வாங்குவதற்கு நுகர்வோரை ஊக்குவித்து, நிலைபேணத்தகு வாழ்வை வெறுமனே ஏற்றுக்கொள்வது மட்டுமல்லாது, அதனை ஊக்குவிப்பதிலும் கொண்டுள்ள பகிரப்பட்ட வலுவான அர்ப்பணிப்பை சுட்டிக்காட்டுகின்றது.    

ஹேலீஸ் ஃபென்டன்ஸ் லிமிட்டெட்டின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஹசித் பிரேமதிலக அவர்கள் இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், இலங்கையில் சூரிய மின்வலு தொடர்பான பொறியியல், கொள்வனவு மற்றும் கட்டுமானம் ஆகியவற்றில் முன்னணி வகித்து வருகின்ற ஒரு நிறுவனம் என்ற வகையில், முன்னணி வகிக்கின்ற வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் ஒன்றான பீப்பிள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி உடன் இக்கூட்டாண்மையை ஏற்படுத்தியுள்ளமை எமக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கின்றது. ஒன்றாக இணைந்து செயல்பட்டு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றால் முன்னெடுத்துச் செல்லப்படுகின்ற, பிரகாசமான மற்றும் பசுமையான, நிலைபேணத்தகு எதிர்காலத்தை அனைத்து இலங்கை மக்களுக்கும் தோற்றுவிக்கும் வகையில் அவர்களுக்கு வலுவூட்டுவதற்கு நாம் ஆவலாக உள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.   

இந்த இரு நிறுவனங்களுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையைத் தொடர்ந்து இக்கூட்டாண்மை தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

PLC ஊடாக ஹேலீஸ் சோலார் நிறுவனத்திடமிருந்து சூரிய மின்வலு உற்பத்திக்கான சாதனங்களைப் பெற்றுக்கொள்ளும் போது, மிகவும் அனுபவம் வாய்ந்த மற்றும் திறன் கொண்ட பொறியியலாளர்கள் எவ்விதமான கட்டணங்களுமின்றி, வாடிக்கையாளர்களின் இடங்களுக்கு நேரில் சென்று, உரிய ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளும் நன்மையும் அவர்களுக்கு கிட்டுகின்றது. மேலும், இலங்கையில் சூரிய மின்வலுவில் முன்னோடி நிறுவனங்களில் ஒன்றிடமிருந்து, 20 வருட செயல்பாடு உத்தரவாதத்தின் பக்கபலத்துடன், மிகச் சிறந்த விற்பனைக்குப் பின்னரான சேவை அனுபவத்தையும் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.     

இதனை எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பான மேலதிக விபரங்களை அறிந்து கொள்வதற்கு 0770 136 414 / info@plc.lk மூலமாக PLC இனையோ அல்லது 0112 102 102 மூலமாக ஹேலீஸ் சோலார் நிறுவனத்தையோ தொடர்பு கொள்ளுங்கள்.

PLC இனை பிரதிநிதித்துவப்படுத்தி, இதில் பங்குபற்றிய உதேஷ் குணவர்த்தன, பதில் பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர் மற்றும் ஷமிந்திர மார்சலின், முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகியோரும், ஹேலீஸ் ஃபென்டன்ஸ் லிமிட்டெட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி இதில் பங்குபற்றிய ஹசித் பிரேமதிலக, முகாமைத்துவப் பணிப்பாளர், பமுதித் குணவர்த்தன, நிறைவேற்று அதிகாரம் கொண்ட பணிப்பாளர்/பிரதம நிதி அதிகாரி மற்றும் அகில ஜெயசேன, பிரதிப் பொது முகாமையாளர் – தேசிய விற்பனை, ஆகியோரும் படத்தில் காணப்படுகின்றனர்
PLC இன் தலைவர் திரு. பிரதீப் அமிர்தநாயகம் அவர்கள் வாடிக்கையாளர் ஒருவருக்கு முதலாவது சூரிய மின்வலு குத்தகை வசதியைக் கையளித்து வைக்கும் காட்சி