இஸ்லாமிய நிதி வசதித் திட்டங்கள்
இஜாரா (குத்தகை)
வாடிக்கையாளரின் சார்பில் PLC-AIF ஒரு பொருளைக் கொள்வனவு செய்யவும் வாடிக்கையாளர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வாடகை செலுத்தி அப் பொருளைக் குத்தகைக்குப் பெற்றுக்கொள்ளவும் இத் திட்டம் இடமளிக்கின்றது. குத்தகைக் காலம் முழுவதிலும் அப் பொருள் சேவை வழங்குநருக்கு (PLC-AIF) சொந்தமாக இருக்கும். ஒப்புக்கொள்ளப்பட்ட வாடகைக் காலம் முடிவடைந்ததும் அப் பொருளின் உரிமை ஓா் அன்பளிப்பாக வாடிக்கையாளருக்குக் கைமாற்றம் செய்யப்படும்.
அனுகூலங்கள்:
- போட்டி முறையிலான வாடகைகள்
- மாறுபடும் வீதங்கள் (Variable Rates) அடிப்படையிலான திட்டங்கள்
- 7 ஆண்டுகள் வரையான மீளளிப்புக் காலம்
- பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத வாகனங்கள், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களுக்குப் பொருத்தமானது
- மூலதனத்தின் பகுதித் தீர்ப்பனவுக்கான (capital part settlement) விருப்பத்தேர்வு உண்டு
முஷாரகா
முஷாரகா என்பது ஷரிஆவுக்கு அமைவான வேலைத்திட்டம் ஒன்றிற்கு நிதி வழங்கவும் அதனை முகாமைத்துவம் செய்யவும் வசதியளிக்கும் வகையில் வாடிக்கையாளருக்கும் PLC-AIF பிரிவுக்கும் இடையே செய்துகொள்ளப்படும் பங்காளித்துவ ஒப்பந்தமாகும் (Joint venture).
- வாகனம், காணி மற்றும் இயந்திரங்களின் கொள்வனவு
- தொழிற்படு மூலதனத் தேவைகள்
- மூலதனத்தின் பகுதித் தீர்ப்பனவுக்கான வசதிகள்
வாடிஆ (தங்கப் பாதுகாப்பு வைப்பு வசதி)
PLC வழங்கும் வாடிஆ தங்கப் பாதுகாப்பு வசதி என்பது நிதிப் பிரச்சினையுள்ள மக்கள் அவசர பணத் தேவை ஏற்படும் வேளையில் தமது தங்க நகைகளைப் பாதுகாப்பு வைப்புக்காகக் கையளித்துப் பணத்தைப் பெற்றுக்கொள்ள இடமளிக்கும் ஒரு வசதியான தீர்வாகும்.
முக்கிய அம்சங்கள்:
- வசதியான மீளளிப்புக் காலங்கள் (10 நாட்கள், 30 நாட்கள், 60 நாட்கள், 90 நாட்கள், 180 நாட்கள், நாட்கள்)
- பாதுகாப்பு வைப்புக்காக குறைந்தபட்ட கட்டணங்கள் – நாளாந்தம் கணிக்கப்படும்
- இலாபம் எதனையும் சேர்க்காமலே முற்பணம் வழங்கப்படும்
- தங்க நகைகளுக்கு இலவச தக்காஃபுல் காப்பீடு
- மக்கள் வங்கி CDM மூலம் கொடுப்பனவைச் செலுத்தலாம்
- வெளியிடத் தீா்ப்பனவு வசதியும் கிடைக்கும் (Outside settlement facility available)