பீப்பள்ஸ் லீசிங் “தலைவர் விருது” புதிய தயாரிப்பு மேம்பாட்டில் பணியாளர்களின் புத்தாக்கத்தை அங்கீகரித்து பரிசளிக்கிறது


இலங்கையின் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் செயற்பாட்டில் நம்பகமான நிதி தீர்வுகளை வழங்குநரான பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி (பீப்பள்ஸ் லீசிங்) அண்மையில் நடைபெற்ற கௌரவமிக்க “தலைவர் விருது” நிகழ்வில் புதிய தயாரிப்புக் கருத்தாக்கங்களை அபிவிருத்தி செய்வதில் ஊழியர்களின் புத்தாக்கத்தை அங்கீகரித்து பரிசுகளை வழங்கியது.

பீப்பள்ஸ் லீசிங் கிளிநொச்சி கிளையின் வி.சருஜனால் வழங்கப்பட்ட புதிய தயாரிப்பு கருத்துருவானது “தலைவர் விருது” நிகழ்வில் “மிகவும் புதுமையான” புதிய தயாரிப்பு கருத்தாக அங்கீகரிக்கப்பட்டது. பீப்பள்ஸ் லீசிங் தலைமையகத்தில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் நிலையான வைப்பு மற்றும் சேமிப்பு பிரிவின் சமிந்த யாப்பா மற்றும் சுன்னாகம் கிளையின் ஜி.பிரதீபன் ஆகியோர் இணைந்து இரண்டாம் இடத்திற்கான விருதைப் பெற்றனர்.

இந்த நிகழ்வில் பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தின் தலைவர் பிரதீப் அமிர்தநாயகம், பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர் ஷமிந்த்ர மார்செலின் மற்றும் பணிப்பாளர் சபை மற்றும் சிரேஷ்ட முகாமைத்துவ பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

அனைத்து பீப்பள்ஸ் லீசிங் ஊழியர்களும் “விருது திட்டத்திற்கு” விண்ணப்பிக்க தகுதி பெற்றிருந்ததோடு பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் கிளைகள் ஆகியவற்றின் ஊழியர்களிடமிருந்து 58 புதிய தயாரிப்பு கருத்துருவாக்கங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன. ஒரு பிரத்தியேகக் குழு, புதிய தயாரிப்புக் கருத்துகளின் புதுமையை, நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்தது. அதற்கமைய, எட்டு சமர்ப்பிப்புகள் இறுதிப் பட்டியலுக்குள் இடம்பெற்றன. அவற்றில் சிறந்த மூன்று கருத்துருவாக்கங்னள் முறையாக அங்கீகரிக்கப்பட்டு விருது வழங்கலில் பரிசளிக்கப்பட்டன.

பீப்பிள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி என்பது இலங்கையின் முன்னணி வங்கி அல்லாத நிதி நிறுவனமாகும், மேலும் நாட்டின் மிகப்பெரிய அரச வங்கிகளில் ஒன்றான மக்கள் வங்கியின் துணை நிறுவனமாகும். 1996 இல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன. பீப்பள்ஸ் லீசிங் 2011இல் கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. பீப்பள்ஸ் லீசிங்,பங்களாதேஷில் ஒரு வெளிநாட்டு முயற்சி உள்ளிட்ட ஆறு துணை நிறுவனங்களுடன் பல்வகைப்பட்ட வங்கி அல்லாத நிதி அதிகார மையமாக வளர்ந்துள்ளது.

“மிகப் புதுமையான” புதிய தயாரிப்புக் கருத்தாக்கத்திற்கான மதிப்புமிக்க “தலைவர் விருது” வென்ற பீப்பள்ஸ் லீசிங் கிளிநொச்சி கிளையின் வி. சருஜன் பீப்பிள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி (பிஎல்சி) தலைவர் பிரதீப் அமிர்தநாயகத்திடமிருந்து “தலைவர் விருதை” பெறுகிறார். இதன்போது (இடமிருந்து) நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர் ஷமிந்த்ர மார்செலின், பிரதம செயற்பாட்டு அதிகாரி உதேஷ் குணவர்தன மற்றும் பீப்பிள்ஸ் லீசிங் பணிப்பாளர் அசோக பண்டார அருகில் உள்ளனர்.