ஹைப்ரிட் ஒட்டோமொபைல் தொழில்நுட்பத்துறையில் தகுதியான 50 இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் பீப்பிள்ஸ் லீசிங் புலமைப்பரிசில்களை வழங்கியது
தேசிய தொழிற் படையில், துறைசார் இளம் தொழிலாளர்களை ஊக்குவிப்பதற்கான தேசிய முன்னுரிமைக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றும் வகையில், இலங்கையின் முன்னணி வங்கி அல்லாத நிதி நிறுவனமான பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி (பிஎல்சி) இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையுடன் (விடிஏ) இணைந்து அண்மையில் ஹைப்ரிட் ஒட்டோமொபைல் தொழில்நுட்பத் துறையில் 50 தகுதியான இளைஞர்களுக்கு 50 தொழிற்கல்வி புலமைப்பரிசில்களை வழங்கியது. புலமைப்பரிசில்களை பெறுபவர்கள் இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் தமது மையத்தில் தமது தொழிற்கல்வி படிப்பினை ஆரம்பிப்பதற்கு இது உதவுகிறது.
பிஎல்சியானது விடிஏவுடன் இணைந்து 2022ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் திகதி நாரஹேன்பிட்டியில் உள்ள இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் முதல் பிரிவு இளைஞர்களுக்கான ஆரம்ப நிகழ்ச்சியை பிஎல்சியின், மீட்பு மற்றும் கடன் முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பொது முகாமையாளர், தமித் மளவிதந்தில மற்றும் விடிஏயின் பணிப்பாளர் நாயகம் சுலங்கனி பெரேரா ஆகியோரின் ஒத்துழைப்புடன் நடத்தியது. பிஎல்சியின் சந்தைப்படுத்தல், தொடர்பாடல் மற்றும் நிலைத்தன்மையின் முகாமையாளர் ஹிஷான் வெல்மில, விடிஏயின் பயிற்சிப் பணிப்பாளர் சாந்தி எதிரிசிங்க மற்றும் பிஎல்சி, விடிஏ ஆகியவற்றின் பிரதிநிதிகளும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
“ஹைப்ரிட் ஒட்டோமொபைல் தொழில்நுட்பத் துறையில் திறமையான தொழிலாளர்களுக்கு கடுமையான பற்றாக்குறை காணப்படுகின்றது. இந்த பயனாளி இளைஞர்கள் இன்று தங்களுக்கு விருப்பமான தொழிற்கல்வி படிப்பைத் தொடர புலமைப்பரிசில்களைப் பெறுவது உண்மையில் ஒரு பாக்கியம். பிஎல்சியுடன் இணைந்து வழங்கப்படும் தொழிற்கல்வி படிப்பு திட்டத்தை வெற்றிகரமாக முடிக்க நீங்கள் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும் மற்றும் ஹைப்ரிட் ஒட்டோமொபைல் தொழில்நுட்பத் துறையில் வெற்றிகரமான வாழ்க்கையை நோக்கி உங்கள் வழியை வகுக்க வேண்டும்.” என, இந்த செயற்றிட்டம் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்த விடிஏயின் பணிப்பாளர் நாயகம் சுலங்கனி பெரேரா பயனாளி இளைஞர்களை வலியுறுத்தினார்.
“பிஎல்சி இளைஞர்கள் மற்றும் உள்ளூர் சமூகங்களின் தொழில்முயற்சி மற்றும் நிதியறிவு திறன்களை மேம்படுத்த உறுதிபூண்டுள்ளது. ஹைபிரிட் ஒட்டோமொபைல் தொழில்நுட்பவியலாளர்களுக்கு சந்தையில் வெற்றிடம் காணப்படுகின்றது. பசுமைத் தொழில்நுட்பங்கள் மூலம் சாதகமான காலநிலை நடவடிக்கையை நோக்கிய உலகளாவிய மாற்றத்தின் காரணமாக உலகளவில் இந்தத் துறையில் பல வேலை வாய்ப்புகள் உள்ளன. இந்த முயற்சி விடிஏவுடனான எங்களின் ஒத்துழைப்பு சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று நாங்கள் நம்புகிறோம்” என பிஎல்சியின் மீட்பு மற்றும் கடன் முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பொது முகாமையாளர் தமித் மாளவிதந்தில தெரிவித்தார்.
“இன்று பிஎல்சி வழங்கும் தொழில்சார் புலமைப்பரிசில்கள் இளைஞர்கள் தங்களுக்கு விருப்பமான துறையில் நிபுணத்துவம் பெறுவதற்கான சிறந்த வாய்ப்பாகும். நீங்கள் உங்கள் தொழில்சார் திட்டத்தை நிறைவு செய்யும் போது, உங்கள் ஆரம்ப முயற்சியை நம்பிக்கையுடன் தொடங்குவதற்கு நிதி ஆலோசனையுடன் இணைந்து தனிப்பயனாக்கப்பட்ட நிதி தீர்வுகளை உங்களுக்கு வழங்க பிஎல்சி தயாராக உள்ளது.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிஎல்சி எனப்படுவது நாட்டின் மிகப்பெரிய அரசுக்கு சொந்தமான வங்கிகளில் ஒன்றான மக்கள் வங்கியின் முதன்மை துணை நிறுவனமாகும். 1996ஆம் ஆண்டு விசேட குத்தகை நிறுவனமாக செயற்படத் தொடங்கிய பீப்பிள்ஸ் லீசிங், 2011ஆம் ஆண்டு கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. பிஎல்சியானது பங்களாதேஷில் வெளிநாட்டு முயற்சி உட்பட நிபுணத்துவம் வாய்ந்த ஆறு துணை நிறுவனங்களுடன் பல்வகைப்படுத்தப்பட்ட வங்கி அல்லாத நிதியியல் சக்தியாக செயற்படுகின்றது.