பீப்பள்ஸ் லீசிங் தனது 26ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் அதேவேளையில் நாடளாவிய ரீதியில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஊழியர்களின் அயராத உழைப்பைப் பாராட்டுகிறது
பீப்பள்ஸ் லீசிங் தனது 26ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் அதேவேளையில் நாடளாவிய ரீதியில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஊழியர்களின் அயராத உழைப்பைப் பாராட்டுகிறது.
வங்கி அல்லாத நிதிச் சேவைகளில் இலங்கையின் மறுக்கமுடியாத முன்னோடி மற்றும் பொதுத்துறை வங்கியியல் நிறுவனமான பீப்பள்ஸ் வங்கியின் துணை நிறுவனமான பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி (பிஎல்சி) தனது 26ஆவது ஆண்டு நிறைவை 2022 மே 31 அன்று கொண்டாடியது.
பொருளாதார நெருக்கடியின் காரணமாக, எரிபொருள் நிரப்புபவர்கள் தமது ஓய்வு மற்றும் நிம்மதி குறித்து பொருட்படுத்தாமல் அயராது உழைத்து நுகர்வோருக்கு 24 மணி நேர சேவையை வழங்குகிறார்கள்.
ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் எரிபொருள் நிலையங்களின் ஊழியர்களைப் பாராட்டும் வகையில், பீப்பள்ஸ் லீசிங்கின் நிறுவன முகாமைத்துவத்தின் கருத்திட்டத்திற்கு அமைய, கிளை முகாமையாளர்களுடன் இணைந்து, நாடளாவிய ரீதியில் பீப்பள்ஸ் நிறுவன கிளைகளுக்கு அருகிலுள்ள எரிபொருள் நிலையங்களின் உரிமையாளர்களில் எழுமாறாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு மே 31 அன்று பாராட்டுச் சின்னம் வழங்கப்பட்டது.
பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி இலங்கையின் முன்னணி வங்கியல்லாத நிதி நிறுவனம் மற்றும் நாட்டின் மிகப்பெரிய அரச வங்கிகளில் ஒன்றான மக்கள் வங்கியின் துணை நிறுவனமாகும். 1996ஆம் ஆண்டு விசேட குத்தகை நிறுவனமாக செயற்படத் தொடங்கிய பீப்பள்ஸ் லீசிங், 2011ஆம் ஆண்டு கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி, பங்களாதேஷில் வெளிநாட்டுச் செயற்பாடுகள் உட்பட ஆறு துணை நிறுவனங்களுடன் பல்வகைப்பட்ட வங்கியல்லாத நிதியியல் அதிகார மையமாக வளர்ந்துள்ளது.
பிஎல்சியின் 26ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், பிஎல்சியின் கிளை முகாமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் எரிபொருள் நிலையங்களின் ஊழியர்களுக்கு பாராட்டுச் சின்னத்தை வழங்குவதைப் படம் காட்டுகிறது.