சாஸ்த்ர கல்விக் கடன்
நீங்கள் ஒரு மாணவராயின் உள் நாட்டு அல்லது வெளிநாட்டு உயர் கல்வித் தேவைகளுக்கு உதவி பெறுவதற்கு சரியான வழியைத் தெரிவு செய்து கொள்ளுங்கள். ரூபா. 05 மில்லியன் வரையிலான கடன் பெற்றுக்கொள்ளும் வசதி. பாடசாலைகளுக்கான கட்டணங்கள் சர்வதேச பாடசாலைகளுக்கு சேர்த்துக் கொள்வதற்கான ஆரம்பக் கட்டணங்கள், நியாயமான வட்டியுடன், ஒன்று முதல் ஐந்து வருடங்கள் வரையிலான மீளச் செலுத்தும் வசதிகள், இந்நிதித் திட்டம் பொருளாதார வசதியினைக் கருத்திற்கொண்டு வழங்கப்படும்.
பிரதிபலன்கள்
- செலவு செய்யப்படும் கடன் பணத்துக்கு முற்பணமோ செலவு தொகையோ அறவிடப்பட மாட்டாது.
- தெரிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் மாணவர் பதிவுக் கட்டனங்களுக்கு விசேட கழிவு வழங்கப்படும்.
- தேவைகளுக்கேற்ப கல்வி நிறுவனங்களுக்கு நேரடியாகப் பணம் செலுத்தப்படும். இலகுவாக வீசா பெற்றுக் கொள்வதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்படும்.
- தேவையற்றமுறையில் வட்டியினைச் செலுத்துவதனைத் தவிர்த்துக் கொள்வதற்காக படிப்படியாக தேவைக்கேற்ப கடன்தொகையைப் பெற்றுக்கொள்ளும் வசதி.
- தொந்தரவற்ற மிகவும் நெகிழ்வான செயன்முறைகள்.
- வாடிக்கையளர்களுக்கு தேவையான மொழியில் பல்வேறு கட்டங்களில் அவர்களின் கடன் நிலைமைகள் பற்றி SMS சேவை மூலம் அவர்களை அறிவுறுத்தல்.
- ஆகக் குறைந்த ஆவணங்களைக்கொண்டு தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளுதல்.
- உங்கள் காலடிக்கே வந்து தேவைகளை துரிதமாக பூர்த்திசெய்துதரல்.