மாநில அமைச்சர் கௌரவ அஜித் நிவாட் கப்ரால் அவர்கள் பீப்பள்ஸ் லீசிங் வலைத்தளத்தை மீண்டும் ஆரம்பித்து வைக்கின்றார்
இலங்கையின் அரசுக்கு சொந்தமான முன்னோடி நிதி நிறுவனமான பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி (பீப்பள்ஸ் லீசிங்), தனது 25வது ஆண்டு நிறைவை 31 மே 2021 அன்று கொண்டாடியது.
வாடிக்கையாளர்களுக்கான பரிவர்த்தனைகளை எளிதாக்குவதை உறுதிசெய்து, பீப்பள்ஸ் லீசிங் நிறுவனமானது தனது முத்தொகுப்பு வலைத்தளத்தை மாநில நிதி அமைச்சர்/ மூலதன சந்தைகள் மற்றும் நிறுவன சீர்திருத்தங்கள் அமைச்சர் கௌரவ அஜித் நிவாட் கப்ரால் முன்னிலையில் மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளளது.
மக்கள் வங்கி, பீபள்ஸ் லீசிங் நிறுவன தலைவர் திரு.சுஜீவ ராஜபக்க்ஷ மற்றும் பீபள்ஸ் லீசிங் நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி/ பொது முகாமையாளர் திரு. ஷமிந்திர மார்சலின் ஆகியோரும் இந்த ஞாபகார்த்த நிகழ்வில் கலந்துக்கொண்டார்கள்.
ஆரம்ப விழாவில் உரையாற்றிய கௌரவ மாநில அமைச்சர், பிஎல்சியானது எப்போதும் வித்தியாசமாக விடயங்களை செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக சுட்டிக்காட்டினார். ‘’டிஜிட்டல் உலகில் கிடைக்கக்கூடிய தொழில்நுட்ப அலகை சிறபபாக பயன்படுத்துவதன் மூலம், ‘’இந்த இயல்பான புதிய’’ சூழ்நிலையில் மற்ற நிறுவனங்களும் ஆக்கப்பூர்வமாக சிந்திப்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும்’’என்று மாநில அமைச்சர் மேலும் கூறினார்.
பீபள்ஸ் லீசிங், ஒரு இலட்சிய டிஜிட்டல் புரட்சி திட்டத்தில் நுழையும்போது, புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட பீப்பள்ஸ் லீசிங் வலைத்தளமானது ஒருவரின் நிதித் தேவைக்கான ஒரு பாவனையாளர் தள வாடிக்கையாளர் மையத்தை மேலும் வலியுறுத்துகின்றது.
இலங்கையின் மிகப்பெரிய வங்கி சாரா நிதி நிறுவனமும் நிதித்துறையில் தலைவருமான பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி, இலங்கையருக்கு 25 ஆண்டுகளாக பெறுமதி சேர்க்கப்பட்ட நிதி சேவைகளை வழங்குவதில் முன்னோடியாக மாறியுள்ளது. நாடு முழுவதும் 112 கிளைகள் மற்றும் அர்ப்பணிப்புள்ள வலுவான ஊழியர் குழுவுடன், எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளருடனான எங்களது பிணைப்பை எமது பரந்தளவிலான தயாரிப்புகள் மற்றும் சேவைகள் மூலம் அவர்களின் அனைத்து நிதித் தேவைகளையும் பூர்த்தி செய்வதன் மூலம் பலமான நிறுவனமாக வியாப்பித்துள்ளோம்.