பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி, இலங்கை இஸ்லாமிய வங்கிச்சேவை மற்றும் நிதித் தொழிற்துறை (SLIBFI) விருதுகள் 2023/24 நிகழ்வில் மூன்று பெரும் பிரிவு வெற்றிகளையீட்டி திருப்புமுனை சாதனையை படைத்துள்ளது  


PLC Al-Safa இலங்கை இஸ்லாமிய வங்கிச்சேவை மற்றும் நிதித் தொழிற்துறை (Sri Lanka Islamic Banking and Finance Industry – SLIBFI) விருதுகள் 2023/24 நிகழ்வில் மதிப்பிற்குரிய மூன்று விருதுகளை வெற்றியீட்டி, இஸ்லாமிய நிதித்துறையில் தனது தலைமைத்துவத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. இலங்கையில் ஷரியா இணக்கப்பாட்டு நிதியியல் தீர்வுகளை வழங்குவதில் புத்தாக்கம் மற்றும் மகத்துவம் ஆகியவற்றில் நிறுவனம் தற்போது காண்பித்து வருகின்ற அர்ப்பணிப்பின் பிரதிபலிப்பாக இந்த அங்கீகாரம் அமைந்துள்ளது.

SLIBFI விருதுகள் 2023/24 நிகழ்வில், PLC Al-Safa இல் இஸ்லாமிய நிதி மற்றும் டிஜிட்டல் தீர்வுகளுக்கான பிரதம முகாமையாளரான  ஃபஸ்மில் மௌலானா அவர்கள் Gold Award for Transformative Leadership (தலைமைத்துவ பரிமாண வளர்ச்சிக்கான தங்க விருது) விருதைப் பெற்றுக்கொண்டதுடன், அனைத்து முன்னணி வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மத்தியில் இலங்கையில் இஸ்லாமிய நிதியை மேம்படுத்துவதில் ஆற்றியுள்ள முக்கியமான பங்களிப்புக்களுக்காகவே இந்த அங்கீகாரம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், Bronze Award for Islamic Finance Entity of the Year (வருடத்தின் மிகச் சிறந்த இஸ்லாமிய நிதி நிறுவனத்திற்கான வெண்கல விருது) விருதையும் PLC Al-Safa பெற்றுள்ளதுடன், அதன் புத்தாக்கம்மிக்க Wadi’ah தங்க பாதுகாப்பு வைப்பக தீர்வுக்காக Islamic Finance Product of the Year – Merit Award (வருடத்தின் மிகச் சிறந்த இஸ்லாமிய நிதித் தீர்வு – சிறப்புத்தகுதி விருது) என்ற கௌரவத்தையும் அது பெற்றுள்ளமை, தொழில்துறையில் நம்பிக்கைக்குரிய முன்னோடி என்ற அதன் அந்தஸ்தை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. இச்சாதனை குறித்து திரு. மௌலானா அவர்கள் கருத்து வெளியிடுகையில், “இவ்விருதுகளை வென்றுள்ளமை ஒட்டுமொத்த PLC Al-Safa அணியின் கூட்டு முயற்சி மற்றும் ஓயாத அர்ப்பணிப்பை ஆகியவற்றைப் பிரதிபலிக்கின்றது. ஷரியா விழுமியங்களுடன் ஒன்றியுள்ள, புத்தாக்கமான, வாடிக்கையாளர்களை நோக்காகக் கொண்ட தீர்வுகளை வழங்குவதில் நாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளதுடன், இஸ்லாமிய நிதியில் சாத்தியமான உச்சபட்ச தீர்வுகளை வழங்குவதை நோக்கிப் பயணிப்பதற்கு இவ்விருதுகள் எமக்கு ஒரு உந்துசக்தியாகக் காணப்படுகின்றன. எமது முன்னோடி ஸ்தானத்தை கட்டிக்காப்பது மாத்திரமன்றி, ஷரியா-இணக்கப்பாடு மற்றும் முன்னோக்கு சிந்தனை ஆகியவற்றுடன் சாத்தியமான அளவுக்கு மிகச் சிறந்த நிதியியல் தீர்வுகளை எமது வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்வதை உறுதி செய்தவாறு, தொழிற்துறையில் புதிய தராதரங்களை நிலைநாட்டுவதே எமது நோக்கம். மாற்று நிதித்தீர்வுகளுடன், இன்னும் கூடுதலான அளவில் மதிப்புக் கூட்டப்பட்ட நன்மைகளை எமது வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கு இது எமக்கு இடமளிக்கும்,” என்று குறிப்பிட்டார்.                  

தொடர்ந்து 13வது ஆண்டாகவும் UTO EduConsult ஆல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள SLIBFI விருதுகள் நிகழ்வு, இலங்கையில் இஸ்லாமிய வங்கிச்சேவை மற்றும் நிதித் தொழிற்துறையில் மிகவும் பிரசித்தி பெற்ற விருதுகள் நிகழ்வாகக் காணப்படுவதுடன், இத்துறையில் மிகச் சிறந்த பெறுபேற்றுத்திறன்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. SLIBFI விருதுகளுக்காக விண்ணப்பிக்கின்ற நிறுவனங்கள், மிகக் கடுமையான மீளாய்வு நடைமுறைக்கு உட்படுத்தப்படுவதுடன், கணக்காய்வு செய்யப்பட்ட நிதியியல் புள்ளி விபரங்கள் மற்றும் பல்வேறுபட்ட ஏனைய அளவுருக்கள் மற்றும் முக்கிய பெறுபேற்றுத்திறன் குறிகாட்டிகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுவதுடன், தொழில்துறை வல்லுனர்கள் அடங்கிய சுயாதீன நடுவர் குழுவினால் ஒவ்வொரு விண்ணப்பமும் மதிப்பீடு செய்யப்படுகின்றது. இவ்விருதுகள் புத்தாக்கம் மற்றும் மகத்துவத்தைக் கொண்டாடுவதுடன், இலங்கையில் இஸ்லாமிய நிதியின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் வழங்கியுள்ள முக்கியமான பங்களிப்புக்களுக்கு அங்கீகாரம் அளிக்கின்றன.     

பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. சஞ்சீவ பண்டாரநாயக்க அவர்கள் கருத்து வெளியிடுகையில், “இவ்விருதுகளை வென்றுள்ளமை எமக்கு மிகவும் கௌரவமளிப்பதுடன், எமது அணியின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பை இவை தெளிவாக காண்பிக்கின்றன. இலங்கையில் அனைத்து சமூகங்களுக்கும் சேவையாற்றுவதில் நாம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை இந்த அங்கீகாரம் மீள உறுதிப்படுத்துவதுடன், இலங்கையில் அனைவரையும் உள்ளடக்கி அரவணைத்து, ஆதரவளிக்கின்ற பல்கலாச்சார நிறுவனமாகத் திகழ்வதில் PLC இன் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது,” என்று குறிப்பிட்டார்.   

இலங்கையிலுள்ள முதலாவது, வங்கியல்லாத ஒட்டுமொத்த சேவைகளை வழங்கும் இஸ்லாமிய நிதி நிறுவனம் என்ற ரீதியில், பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சியின் ஒரு அங்கமான PLC Al-Safa, 2005 ஆம் ஆண்டு முதல் நம்பகமான ஷரியா இணக்கப்பாட்டு தீர்வுகள் மற்றும் சேவைகளை வழங்கி வருகின்றது. கடந்த இரு தசாப்தகாலத்தில் உயர்தர, வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட சேவைகளை வழங்கும் ஒரு நிறுவனம் என்ற நன்மதிப்பை இந்நிறுவனம் கட்டியெழுப்பியுள்ளதுடன், முழுமையான ஷரியா இணக்கப்பாட்டுடனான மாற்று நிதியியல் தீர்வுகளை நாடுகின்ற இலங்கை மக்களுகக்கு சேவைகளை வழங்கி வருகின்றது.   

தனது தீர்வுகள், சேவைகள் மற்றும் நடைமுறைகள் அனைத்தும் ஷரியா கோட்பாடுகளுக்கு இணங்குவது மாத்திரமன்றி, அதிகபட்ச மதிப்பு, நெகிழ்தன்மை மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றையும் வழங்குகின்றன என்பதை உறுதிசெய்வதற்காக, தனது ஷரியா மேற்பார்வைச் சபையை வலுப்படுத்தி, இஸ்லாமிய நிதிக் கட்டமைப்பின் கீழ், புத்தாக்கத்தின் எல்லைகளை PLC Al-Safa தொடர்ந்தும் அகட்டி வருகின்றது. நிறுவனத்தின் வலுவான டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் நாடளாவிய ரீதியில் 50 க்கும் மேற்பட்ட PLC கிளைகளில் அணுகல் புள்ளிகளுடனான நாடளாவிய பிரசன்னம் ஆகியன வாடிக்கையாளர்களுக்கு அதன் முழுமையான நிதியியல் சேவைகளுக்கான 24/7  அணுகலை வழங்கி, இத்தொழிற்துறையில் முன்னோடி என்ற அதன் ஸ்தானத்தை மேலும் ஆணித்தரமாக நிலைநாட்டியுள்ளன.           

அந்த வகையில், SLIBFI விருதுகள் 2023/23 நிகழ்வில் PLC Al-Safa இன் வெற்றியானது, இஸ்லாமிய நிதித்துறையில் அதன் தொடர்ச்சியான ஆதிக்கம் மற்றும் தலைமைத்துவத்திற்கான தெளிவான அடையாளம். இந்த ஆண்டு விருதுகள் நிகழ்வில் நிறுவனத்தின் சாதனைகள், மகத்துவத்தின் மீது அதன் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை பிரதிபலிப்பது மாத்திரமன்றி, இலங்கையில் இஸ்லாமிய நிதியின் பிரகாசமான எதிர்காலத்திற்கான அதன் தெளிவான இலக்கினையும் காண்பிக்கின்றது.    

புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சி: BPC இன் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பணிப்பாளர் சுபாஷ் சந்திர போஸ் அவர்கள், இஸ்லாமிய நிதி மற்றும் டிஜிட்டல் தீர்வுகளுக்கான பிரதம முகாமையாளர் திரு. ஃபாஸில் மௌலானா அவர்களிடம் விருதொன்றை கையளிப்பதுடன், Park Street Al-Safa தொழிற்பாட்டு முகாமையாளர் திரு. முஸ்னி முனாஸ், மத்திய இஸ்லாமியப் பிரிவின் திருமதி சஃப்ரா ஃபிர்தோஸ் மற்றும் திருமதி இனூல் முன்தாஸ் ஆகியோரும் காணப்படுகின்றனர்.   

புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சி: பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி, திரு. சஞ்சீவ பண்டாரநாயக்க அவர்கள்.