பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி தடகள விளையாட்டு அணி SMTFA இல் பிரகாசித்து, இலங்கை மேர்கன்டைல் தடகள சம்மேளனத்திற்காக 15 பதக்கங்களை வென்றுள்ளது


பீப்பிள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சியின் தடகள விளையாட்டுக்கள் அணியானது சிங்கப்பூரில் இடம்பெற்ற SMTFA International Masters Track & Field Championships போட்டிகளில் இலங்கை மேர்கன்டைல் தடகள சம்மேளனத்தின் அங்கமாக பங்குபற்றியுள்ளது. இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய 29 போட்டியாளர்கள் மத்தியில், 63 பதக்கங்களில், 15 இனை நாட்டுக்காக வெற்றியீட்டி கணிசமான பங்களிப்பை இந்த அணி வழங்கியுள்ளது. இலங்கையில் வங்கி அல்லாத நிதியியல் சேவைகள் துறையில் முன்னிலை வகிக்கின்ற ஒரு நிறுவனம் என்ற வகையில், பெருமதிப்பு மிக்க இந்நிகழ்வில் தனது தடகள அணி நிலைநாட்டியுள்ள மகத்தான சாதனைகள் குறித்து அறிவிப்பதில் பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி பெருமை கொள்கின்றது. 22 நாடுகளிலிருந்து பங்குபற்றிய போட்டியாளர்கள் மத்தியில், தமது திறமைகளையும், அர்ப்பணிப்பையும் காண்பித்த அணி, மொத்தமாக 15 பதக்கங்களை வென்றது. அலுவலகத்திற்கு உள்ளேயும், வெளியேயும் தனது ஊழியர்களின் ஆர்வங்களுக்கு ஆதரவளிப்பதில் பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சியின் அர்ப்பணிப்பை இச்சாதனைகள் அடிக்கோடிட்டுக் காண்பிக்கின்றன.
அந்த வகையில், 50+ பிரிவில் போட்டியிட்ட சமந்த செனவிரத்ன அவர்கள் 4100மீ மற்றும் 4300மீ அஞ்சலோட்டங்களில் 2ஆம் இடத்தைக் கைப்பற்றியதுடன், 800மீ இல் 3ஆம் இடத்தைப் பிடித்தார். மொஹான் நாணயக்கார அவர்கள், 40+ பிரிவில் 100மீ தடைதாண்டலில் 2ஆம் இடத்தை வென்றதுடன், 4100மீ மற்றும் 4400மீ அஞ்சலோட்டங்களில் இரண்டாம் இடத்தைப் பெற்ற அணியின் வெற்றிக்குப் பங்களித்தார். 35+ பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்தி கோசல மிகார அவர்கள் நீளம் பாய்தல் மற்றும் முப்பாய்ச்சல் ஆகிய இரு போட்டிகளிலும் 1ஆம் இடத்தை வென்றதுடன், 4100மீ அஞ்சலோட்டத்தில் 2ஆம் இடத்தைப் பெற்ற அணியில் முக்கிய பங்கு வகித்தார். 30+ பிரிவில் போட்டியிட்ட குமார கூரே அவர்கள் 200மீ மற்றும் 400மீ ஆகிய இரண்டிலும் 3ஆம் இடத்தை வென்று பதக்கப் பட்டியலில் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்ததுடன், 4100மீ அஞ்சலோட்டத்தில் 3ஆம் இடத்தையும், 4*400மீ அஞ்சலோட்டத்தில் 1ஆம் இடத்தையும் வென்ற அணிகளின் வெற்றிக்கு பங்களித்தார். 30+ பிரிவில் போட்டியிட்ட விராஜ் மதுசங்க அவர்கள் நீளம் பாய்தலில் 1ஆம் இடத்தையும், முப்பாய்ச்சலில் 2ஆம் இடத்தையும் வென்றார்.
SMTFA International Masters Track & Field Championships போட்டிகளில் நிறுவனத்தின் தடகள அணி ஈட்டியுள்ள வெற்றிகள், பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி வரைவிலக்கணம் வகுக்கின்ற முயற்சி மற்றும் மகத்துவத்தை பிரதிபலிக்கின்றது. உத்வேகமளிக்கும் இந்த சாதனையாளர்களுக்கு நிறுவனம் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், தனது ஊழியர்கள் சகல துறைகளிலும் மகத்துவத்தை எட்டுவதற்கு ஆதரவளிப்பதற்கு ஆவலுடன் உள்ளது.

புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சி – அண்மையில் நட்சத்திர பெறுபேறுகளை வெளிப்படுத்திய பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி தடகள அணியின் வீரர்கள்.
இடமிருந்து வலப்புறமாக – கோசல மிகார, விராஜ் மதுசங்க, சமந்த செனவிரத்ன, மொஹான் நாணயக்கார மற்றும் குமார கூரே.