பீப்பிள்ஸ் லீசிங் அதன் மெட்ரோ பொலிட்டன் கிளையை மேம்படுத்தி இடமாற்றம் செய்கிறது


பீப்பிள்ஸ் லீசிங் அன்ட் பைனான்ஸ் பிஎல்சி (பிஎல்சி) இன் மெட்ரோ பொலிட்டன் கிளையை இல. 86 வோக்ஸ்ஹால் வதி ீ , கொழும்பு – 02ற்கு இடமாற்றம் செய்துள்ளது.

இந்த புதிய வளாகம், மக்கள் வங்கி மற்றும் பீப்பள்ஸ் லீசிங் அன்ட்பை னான்ஸ் பிஎல்சியின் தலை வர் சுஜீவ ராஜபக்சவினால் திறந்து வை க்கப்பட்டது.

மெட்ரோ பொலிட்டன் கிளையானது சில்லறை மற்றும் பெருநிறுவன வாடிக்கையாளர்களுக்கு இலகுவான வழியை வழங்குவதுடன், பீப்பிள்ஸ் லீசிங் அன்ட் பைனான்ஸ் பிஎல்சி வலையமைப்பின் கீழ் இயங்கும் முதல் பசுமைக் கிளையாக விரைவில் அதன் செயற்பாடுகள் மூலம் கார்பன் தடத்தை குறைப்பதற்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தும்.

பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பை னான்ஸ் பிஎல்சி தனது மதிப்புமிக்க வாடிக்கை யாளர்களுக்கு அளப்பரிய வங்கி அல்லாத நிதிச் சே வை அனுபவத்தை வழங்குவதற்கான த ொலை ந ோக்குப் பார்வை யுடன் செ யல்படுகிறது. மே லும் நிதித்துறை யில் புதிய அளவுக ோலை அமை ப்பதற்காக புதிய த ொழில்நுட்பம், புதுமை யான தயாரிப்புகள் மற்றும் சே வை களுடன் வே கமாக வளர்ச்சியடை ந்து வருகிறது. பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பை னான்ஸ் பிஎல்சி அதன் அனை த்து மதிப்புமிக்க வாடிக்கை யாளர்களை யும் புதிய வளாகத்திற்குச் செ ன்று சிறந்த அனுபவத்தைப் பெற அழை க்கிறது.

பீப்பிள்ஸ் லீசிங் அன்ட் பைனான்ஸ் பிஎல்சி இலங்கையின் முன்னணி வங்கியல்லாத நிதி நிறுவனமாகும், மேலும் நாட்டின் மிகப்பெரிய அரச வங்கிகளில் ஒன்றான பீப்பிள்ஸ் வங்கியின் துணை நிறுவனமாகும். 1996 ஆம் ஆண்டு விசேட குத்தகை நிறுவனமாக செயற்படத் தொடங்கிய பீப்பிள்ஸ் லீசிங் 2011ஆம் ஆண்டு கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. பீப்பிள்ஸ் லீசிங், பங்களாதேஷில் ஒரு வெளிநாட்டு வணிக முயற்சி உட்பட ஆறு துணை நிறுவனங்களுடன் பல்வகைப்பட்ட வங்கி அல்லாத நிதியியல் அதிகார மையமாக வளர்ச்சியடைந்துள்ளது.

மக்கள் வங்கி மற்றும் பீப்பிள்ஸ் லீசிங் அன்ட் பைனான்ஸ் பிஎல்சியின் தலைவர் சுஜவீ ராஜபக்சவுடன், பீப்பிள்ஸ் லீசிங் அன்ட் பைனான்ஸ் பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர் ஷமிந்திர மார்சலின் ஆகியோர் இணைந்து மெட்ரோ பொலிட்டன் கிளையை வைபவ ரீதியாக திறந்து வைத்தனர்.
பிஎல்சி மெட்ரோ பொலிட்டன் கிளை ஊழியர்கள் மற்றும் சிரேஷ்ட முகாமைத்துவம்
பிஎல்சி மெட்ரோ பொலிட்டன