பீபள்ஸ் லீசிங் 25வது ஆண்டு நிறைவை கொண்டாடுகின்றது


இலங்கை அரசுக்கு சொந்த முன்னோடி நிதி நிறுவனமான பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி (பிஎல்சி) தனது 25வது ஆண்டு நிறைவை 31 மே 2021 அன்று கொண்டாடுகின்றது. தலைவர், நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் ஊழியர்கள் கடந்த 25 வருடக்காலமாக நிறுவனத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள அதன் வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்கள் அனைவருக்கும் தங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டார்கள். இந்நிறுவனமானது, நாட்டிலுள்ள நிதி நிறுவனங்களில் மிகவும் நம்பகரமான வங்கியல்லாத நிதி நிறுவனமாகும் (NBFI)

பிஎல்சியானது, ஆரம்பிக்கப்பட்ட 1996ஆம் ஆண்டிலிருந்து 2021ஆம் ஆண்டு வரை நாட்டின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய 112 கிளைகளுடனான பரந்த நிதிச்சேவை வலையமைப்பைக் கொண்டுள்ளது. மூன்று மூல உறுப்பினர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட பிஎல்சியானது, தற்போது பொறுப்பு மற்றும் கடமையுணர்வு மிக்க 2,400 ஊழியர்களுடன் விரிவாக்கம் பெற்றுள்ளது. 1996இல் ரூ.10 மில்லியன் மூலதனத்துடன் ஆரம்பிக்கப்பட்ட மூலதன கட்டமைப்பினை குழுவானது,  30.25 பில்லியன்களாக உயர்த்தியுள்ளது. பிஎல்சியானது, இலங்கையிலுள்ள நிதி நிறுவனங்களில், தனித்துவமான தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் விரிவான மற்றும் வேறுப்பட்ட வாகனக்கடன்கள், தங்க கடன்கள், வணிகக்கடன்கள், கல்விக்கடன்கள், வீட்டுக்கடன்கள் மற்றும் தனிநபர் கடன்களை போட்டி வட்டி விகிதத்தில் வழங்குகின்றது. ஐந்து துணைநிறுவங்களுடனான பிஎல்சியின், நட்பான சேவை மற்றும் நெகிழ்வுத்தன்மை காரணமாக அதன் போட்டியாளர்களிலிருந்து தனித்துவம் மிக்கதாக காணப்படுகின்றது.

முக்கிய முன்னேற்றங்கள் பற்றி நிறுவன தலைவர் திரு.சுஜீவ ராஜபக்க்ஷ கூறுகையில், ‘’ பீப்பள்ஸ் லீசிங்கின் முக்கிய நீண்டகால குறிக்கோளானது,  நிலையான மற்றும் போற்றப்படும் ஒரு வணிக மாதிரியாக மாறுவதேயாகும். நிச்சயமற்ற சூழலின் செயல்பாடு மற்றும் இணக்க நடைமுறைகள் உள்ளிட்ட நிதியல்லாத விடயங்கள் மற்றும்  நிர்வாகத்தை மேம்படுத்தல் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். ஏனெனில், இது வேகமாக வளர்ந்துவரும் இடர் முகாமைத்துவத்தின் ஒரு அம்சமாகும். நிலையான பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்காக வங்கியல்லா நிதி நிறுவனமாக கடன் வழங்கும் கொள்கைகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், தொழில்துறை நண்பர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களுடன் பீப்பள்ஸ் லீசிங் ஒத்துழைக்க எதிர்பார்க்கின்றது’’ என்றார்.

இதற்கிடையில், நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி ஷமிந்திர மார்சலின், நிறுவனத்தை தற்போதைய நிலைக்கு உயர்த்த, தமது அர்பணிப்பினை நல்கிய கடந்த கால மற்றும் நிகழ்கால ஊழியர்களுக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். ‘’ ஒன்றாக இணைந்து பணியாற்றிய எனது அணியின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் நான் நன்றி கூறுகிறேன். எல்லா நேரங்களிலும் வாடிக்கையாளர் மையப்படுத்தலின்போது நிறுவன தத்துவத்தை நிலைநிறுத்துங்கள்’’ என்றார்.

பிஎல்சிக்கான எதிர்காலத் திட்டங்கள் குறித்து மார்சலின் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், பொறுப்புள்ள பங்குதாரர்களின் நன்மதிப்பை ஊக்குவிக்கும் ஒரு நோக்கத்தை கொண்ட வணிகத்தை உருவாக்குவதன் மூலம் பிஎல்சி முன்னேற விரும்புகின்றது. ‘’ எமது வணிக செயல்திறனை மேலும் ஒருங்கிணைந்த நிலைக்கு கொண்டுவர நாங்கள் முயற்சி செய்கின்றோம். நிதித்துறையில் பொது-தனியார் பங்குடைமைக்கு (PPP) சிறந்த வாடிக்கையாளர் சேவையுடனான நிதி தீர்வுகளை உள்ளடக்கிய முன்மாதிரியாக பிஎல்சியை நிறுவ நாங்கள் விரும்புகின்றோம். அரசுக்கு சொந்தமான மக்கள் வங்கியின் வலிமை மற்றும் தனியார் துறை அதிர்வு ஆகியவற்றைக் கொண்டு, நாம் இருக்க முடியாது என்பதற்கு முற்றிலும் காரணமில்லை’’ என்றார்.

‘’பிஎல்சியானது, சுலபம் மற்றும் செயல்திறனுக்காக டிஜிட்டல்மயப்படுத்தப்படும். ஏனெனில், தொழில்நுட்பமானது எமது பல சேவைகளை உள்ளடக்கியதாகவும் செயல்திறன் மற்றும் துல்லியத்தை மேம்படுத்தும்போது எளிதில் அணுகக்கூடியதாகவும் இருக்கும் என்று நாங்கள் நம்புகின்றோம். மாற்றமானது ஏற்கனவே தொடங்கிவிட்டது. அடுத்த 18 மாதங்களுக்குள் இந்த மாற்றம் முழுமையாக நிறைவேறும் என்று நம்புகின்றேன். அப்படியானால், உலகளாவிய தொற்றுநோய் காலப்பகுதியில் கட்டாயமாக்கப்பட்ட ‘’புதிய இயல்புக்கு’’ ஏற்ப, மாநிலத்துறை நிறுவன மாற்றத்திற்கான ஒரு குறியீடாக எங்கள் பங்குதாரர்கள், நிதித்துறை, மத்தியவங்கி மற்றும் எமது இறுதி உரிமையாளரான நிதி அமைச்சு ஆகியோர் பிஎல்சியை நிலைநிறுத்துவார்கள் என்று நம்புகின்றேன்’’  என மார்சலின் கூறினார்.

ஆண்டுவிழாவுடன் இணைந்து, பிஎல்சி கட்டிடத்தை அறிமுகப்படுதல், ஆண்டுவிழா முத்திரையை வழங்குதல், ஊழியர்களுக்கான அங்கீகார விருதுகள், இணை முத்திரை கடனட்டைகளின் அறிமுகம், பெண் பிரதிநிதித்துவத்தை தழுவிய, புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை முதன்மையாக வழங்குதல் மற்றும் ஒரு புரட்சிகர பயனர் அனுபவத்தை வழங்க அதிநவீன டிஜிட்டல் பயன்பாட்டை அறிமுகப்படுத்தல் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் வரிசையாக உள்ளன.

கோவிட்-19 தொற்றுநோயின் மீள் எழுச்சியுடன் அரச வைத்தியசாலைகளில் கோவிட் நோயாளிகளுக்கான சிகிச்சை மற்றும் பராமரிப்பை மேம்படுத்துவதற்கு விமர்சன ரீதியாக தேவையான மருத்துவ மற்றும் மருத்துவமற்ற பொருட்களை வழங்குதல் உள்ளிட்ட ஆண்டு முழுவதும் வாடிக்கையாளர் சமூக பொறுப்புடனான முயற்சிகளுடன் ஆண்டுவிழா கொண்டாட்டங்கள் ஒத்துப் போகின்றன. வணிக நடவடிக்கைகளுக்கு புதுப்பிக்கக்கூடிய சக்தியை அறிமுகப்படுத்தல், பொறுப்பான வணிக நடவடிக்கைகளை ஆதரித்தல் மற்றும் குறைந்த இரசாயன பாவனையுடனான பசுமை நடைமுறைகளை பயனுள்ள முறையில் ஒருங்கிணைத்தல் ஆகியவற்றுக்கு நிறுவனத்தினால் முன்னுரிமை வழங்கப்படும். 

பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி நிறுவனமானது மக்கள் வங்கியின் துணை நிறுவனம், அத்துடன் கொழும்பு பங்குச் சந்தையின் (சீ.எஸ்.சீ) பிரதான வாரியத்தில் பொறுப்பினால் வரையறுக்கப்பட்ட நிறுவனமாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது. எமது குழுமத்தில் ஐந்து துணை நிறுவனங்கள் உள்ளடங்குகின்றன, அவையாவன; பீப்பள்ஸ் லீசிங் பி(f)லீட் மெனேஜ்மென்ட் லிமிட்டட், பீப்பள்ஸ் லீசிங் ப்ரொப்பர்ட்டி டிவலொப்மன்ட் லிமிட்டட், பீப்பள்ஸ் லீசிங் ஹெவ்லொக் ப்ரொப்பர்ட்டீஸ் லிமிட்டட், பீப்பள்ஸ் மைக்ரோ பினான்ஸ் லிமிட்டட் மற்றும் பீப்பள்ஸ் இன்ஷ்ஷூரன்ஸ் லிமிட்டட் ஆகும்.

 பீபள்ஸ் லீசிங் நிறுவன தலைவர் திரு.சுஜீவ ராஜபக்க்ஷ 
பீபள்ஸ் லீசிங் நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி/ பொது முகாமையாளர் திரு. ஷமிந்திர மார்சலின்