பீபள்ஸ் லீசிங், மருத்துவ உபகரண தொகுதியை அம்பாந்தோட்டை, தங்காலை மற்றும் பெலியத்த வைத்தியசாலைகளுக்கு நன்கொடையாக வழங்கியது


கௌரவ நீர்பாசன அமைச்சர் மற்றும் தேசிய பாதுகாப்பு, இடர் முகாமைத்துவ மற்றும் வீட்டு விவகார மாநில அமைச்சர் சமல் ராஜபக்க்ஷ அவர்கள் மருத்துவ உபகரண தொகுதியை உத்தியோகப்பூர்வமாக தங்காலை வைத்தியசாலைக்கான மருத்துவ கண்காணிப்பாளர் வைத்தியர் (திருமதி) D.R.N. சரணசிங்க  அவர்களிடம் கையளிப்பதையும் மற்றும் ஏற்பாட்டாளர்களான கௌரவ இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப மற்றும் நிறுவன அபிவிருத்தி மாநில அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ (வ) மற்றும் மக்கள் வங்கி, பீபள்ஸ் லீசிங் நிறுவன தலைவர் திரு.சுஜீவ ராஜபக்க்ஷ (இடமிருந்து மூன்றாவது) மற்றும் பீபள்ஸ் லீசிங் நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி/ பொது முகாமையாளர் திரு. ஷமிந்திர மார்சலின் (இடமிருந்து இரண்டாவது)  ஆகியோர் அருகில் நிற்கின்றார்கள்.

பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி, தெற்கு பிராந்தியத்தில் உள்ள மூன்று அரச மருத்துவமனைகளில், மாவட்ட பொது வைத்தியசாலைகளான அம்பாந்தோட்டை, தங்காலை மற்றும் பெலியத்த வைத்தியசாலைகளுக்கு ரூ.06 மில்லியன் பெறுமதியான மருத்துவ உபகரண தொகுதியை  நன்கொடையாக வழங்கியது.

கையளிக்கும் வைபவமானது, கௌரவ நீர்பாசன அமைச்சர் மற்றும் தேசிய பாதுகாப்பு, இடர் முகாமைத்துவ மற்றும் வீட்டு விவகார மாநில அமைச்சர் சமல் ராஜபக்க்ஷ மற்றும் கௌரவ இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப மற்றும் நிறுவன அபிவிருத்தி மாநில அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ மற்றும் விமான மற்றும் ஏற்றுமதி வலய மேம்பாட்டு கௌரவ மாநில அமைச்சர் D.V. சானக ஆகியோர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

கையளிக்கும் நிகழ்வானது, மக்கள் வங்கி, பீபள்ஸ் லீசிங் நிறுவன தலைவர் திரு.சுஜீவ ராஜபக்க்ஷ மற்றும் பீபள்ஸ் லீசிங் நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி/ பொது முகாமையாளர் திரு. ஷமிந்திர மார்சலின் ஆகியோர் முன்னிலையில் நடைப்பெற்றது.

கையளிக்கப்பட்ட மருத்துவ உபகரண தொகுதியில், பீசிஆர் இயந்திரமானது தங்காலை மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் V. G. S. C. உபேசேகரவினாலும்  மற்றும் தங்காலை பிரதான வைத்தியசாலை மற்றும் பெலியத்த பிராந்திய வைத்தியசாலைக்கான அத்தியாவசிய மருத்துவ உபகரண தொகுதியானது முறையே தங்காலை வைத்தியசாலைக்கான மருத்துவ கண்காணிப்பாளர் வைத்தியர் (திருமதி) D.R.N. சரணசிங்க  மற்றும் பெலியத்த வைத்தியசாலைக்கான மருத்துவ அதிகாரி வைத்தியர் M.D. பிரியந்த ஆகியோரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.