பீபள்ஸ் லீசிங், கோவிட்-19 இற்கு எதிராக போராட, ரூ.25 மில்லியன் மதிப்புள்ள அத்தியாவசிய மருத்துவ உபகரணத்தை நன்கொடையாக வழங்கியது.
இலங்கையின் முன்னணி அரசுக்கு சொந்தமான வங்கிசாரா நிதி நிறுவனமான, பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி (பீப்பள்ஸ் லீசிங்) அண்மையில் கோவிட்-19 காரணமாக சவாலுக்கு முகங்கொடுத்துள்ள நாட்டை கட்டியெழுப்பும் நோக்கத்துடன், அத்தியாவசிய மருத்துவ உபகரணத்தை நன்கொடையாக வழங்கியது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரச மருத்துவமனைகளுக்கு முக்கிய மருத்துவ பொருட்கள் பரிசோதனை மற்றும் சிகிச்சைகளை முன்னெடுப்பதற்காக வழங்கப்பட்டன.
அலரி மாளிகையில் நடைப்பெற்ற ஒப்படைப்பு விழாவை கௌரவ பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்க்ஷ மற்றும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் மக்கள் வங்கி, பீபள்ஸ் லீசிங் நிறுவன தலைவர் திரு.சுஜீவ ராஜபக்க்ஷ மற்றும் பீபள்ஸ் லீசிங் நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி/ பொது முகாமையாளர் திரு. ஷமிந்திர மார்சலின் ஆகியோர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நன்கொடையானது, பீபள்ஸ் லீசிங் நிறுவனத்தினது 25வது வருட நிறைவையிட்டு நிறுவன சமூகபொறுப்பினை பிரதிபலிக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையாகும்.
பிஎல்சியானது, கோவிட்-19 இனை வினைத்திறனாக கட்டுப்படுத்துவதற்கு மருத்துவ உதவிகளை வழங்கும் நோக்கத்துடன் 02 பி.சி.ஆர் இயந்திரங்களை கோவிட் பரிசோதனைகளுக்காகவும் மற்றும் பிற அத்தியாவசிய மருத்துவ உபகரணத்தை நோயாளர் பிரிவு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் வழங்கியது. மருத்துவ உபகரண தொகுதிகளில், செயற்கை சுவாசத்தொகுதி, உயர் ஓட்ட ஒட்சிசன் சிகிச்சை அலகு, பலதரப்பட்ட நோய் குறியீட்டு மானி ஆகியவை உள்நோயாளர் பிரிவு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளுக்கும் CPAP/BiPAP இயந்திரங்கள், நாடித்துடிப்பு மானிகள் உட்செலுத்துகை மற்றும் தடுப்பூசி குழாய்கள் போன்றவையும் கையளிக்கப்பட்டன.
கௌரவ சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, கோவிட்-19 மூன்றாவது அலைக்கு எதிரான பரிசோதனைகளை திறம்பட செய்வதற்கும், நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சையளிப்பதற்கும் அத்தியாவசிய மருத்துவ உபகரணத்தை உரிய நேரத்தில் வழங்குவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
இன்று வழங்கப்பட்ட மருத்துவப்பொருட்களின் நன்கொடையானது, பிற்காலத்தில் முன்னணி சுகாதாரப் பணியாளர்கள் அதிக வினைத்திறனுடனும், தேவையான வளத்துடனான வசதியுடனும் சுயாதீனமாக செயற்படுவதற்கான அதிகாரத்தை வழங்குவதற்கான பிஎல்சியின அர்பணிப்பு மிக்க உறுதிப்பாட்டிற்கான ஒரு சான்றாகும். எங்கள் ஆண்டுவிழாவுடன் ஒத்துப்போகும் இந்த நன்கொடையானது, மட்டுப்படுத்தப்பட்ட வளங்களுடன் செயல்படும் அரச மருத்துவமனைகள் இருந்து அனுப்பப்பட்ட கோரிக்கையின் பிரதிபலிப்பாகும் என்று பீபள்ஸ் லீசிங் நிறுவன தலைவர் சுஜீவ ராஜபக்க்ஷ கூறினார்.
இதற்கிடையில் பீபள்ஸ் லீசிங் நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி/ பொது முகாமையாளர் திரு. ஷமிந்திர மார்சலின், இந்த குறிப்பிட்ட திட்டத்தின் நோக்கமானது கொழும்புக்கு வெளியே பாதிக்கக்கூடிய சமூகங்களையும் உள்ளடக்கியதாகும் என்று கூறினார். தேவை மதிப்பீடுகளை நடத்துவதிலிருந்து தரமான கொள்வனவாளர்களிடமிருந்து விரைவாக கொள்வனவு செய்யும் திட்டம் முழுவதற்கும் தொடர்ந்து ஆதரவு நல்கியமைக்காக சுகாதார அமைச்சகத்திற்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.
‘’பீபள்ஸ் லீசிங் நிறுவனமானது, மிகவும் தேவைப்படும் பொருட்களை நன்கொடையாக வழங்கியதை நாங்கள் பாராட்டுகின்றோம்’’ என்று திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் I.W.M.J விக்ரமரத்ன கூறினார். கடந்த வாரங்களில் நாளாந்த கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், நன்கொடையானது மிகவும் முக்கியமானது மற்றும் பொருத்தமானது என அவர் மேலும் கூறினார்.
தொற்றுநோய் தொடங்கிய காலப்பகுதியிலிருந்து, பிஎல்சியானது தனது வணிக இயக்க தளங்களில் நாடு முழுவதும் நோய்தடுப்பு மற்றும் பதிலளிப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது. அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட சுகாதார விதிமுறைகளை பின்பற்றி, அதன் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடையே தடுப்புமுறை குறித்த முக்கிய செய்திகளுடன் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்ளுகின்றது, மேலும் அதன் வணிக அலகு வலையமைப்பில் சுகாதார வசதிகள் மற்றும் கோவிட் கட்டுப்பாடு தொடர்பான உடனடி நடவடிக்கைகளை எடுக்க நிறுவனத்திற்குள் ஒரு பிரத்தியேக கோவிட் பணிக்குழுவை நியமித்துள்ளது.
தொற்றுநோயின் முதல் அலையின்போது, அக வெப்பமானிகள், இதயத்துடிப்புமானிகள், தீவிர எதிரொலி நுண்ணாய்வு கருவி மற்றும் அத்தியாவசிய மருத்துவ உபகரணகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை பல அரச மருத்துவமனைகளுக்கு வழங்குவதன் மூலம் கோவிட் நோய் முகாமைத்துவத்தை வலுப்படுத்த பிஎல்சியானது தனது ஆதரவினை வழங்கியது. மேலும், 21 அரச பாடசாலைகளில் கோவிட் தடுப்புமுறைக்கான தயார்படுத்தல் முயற்சிகளை மேம்படுத்த நிறுவனம் கல்வியமைச்சுடன் இணைந்துள்ளது. சுகாதார வசதிக்கு அப்பால், பீபள்ஸ் லீசிங் நிறுவனமானது, நிச்சயமற்ற காலங்களில் கல்வியை தொடர்ச்சியாக ஆதரித்தது. 2017 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட “செனஹச” உதவித்தொகை திட்டத்தின் கீழ், தகுதியான 53 பயனாளிகளுக்கு ரூ. 1.2 மில்லியன் பெறுமதியான மின்னணு சாதனங்களை வழங்குவதன் மூலம் அவர்களின் இணையம் மூலமான கல்வி நடவடிக்கைகளை தொடர உதவி புரிந்துள்ளது
1996 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட, பீபள்ஸ் லீசிங் பொறுப்பு மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய நிதி முறை மூலம் தீவிர வறுமையை ஒழிப்பதற்கான அதன் முயற்சிகளை தொடர்கின்றது.