இலங்கையின் மிகச் சிறந்த ஆண்டறிக்கைக்கான பிரதான விருது
“சேகரிக்கும் தருணங்கள்” என்னும் தொனிப்பொருளில் 2016/17 நிதியாண்டிற்னெ பீப்பிள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பி.எல்.சி. வெளியிட்ட ஆண்டறிக்கைக்கு 31ஆவது விருதுகள் சர்வதேச நிகழ்வில் இலங்கையின் மிகச் சிறந்த ஆண்டறிக்கைக்கான தங்க விருது கிடைத்தது. உலகின் அதிமுக்கியமான இந்த ஆண்டறிக்கைப் போட்டியின் விருதளிப்பு நிகழ்வு ஜப்பான், டோக்கியோ, ரிட்ஸ்-சால்டன் ஹொட்டேலில் 2017 ஒக்டோபர் 12ஆம் திகதி நடைபெற்றது. நிதிச் சேவைகள் துறையில் ஆறு பிரிவுகளுக்கான விருதுகளையும் எமது ஆண்டறிக்கை பெற்றது. பொதுத் துறையில் Infographi உளக்கான தங்க விருது, பாரம்பாரியமற்ற ஆண்டறிக்கை மற்றும் புகைப்படத்திற்கான இரண்டு வெள்ளி விருதுகள், நிதித் தரவுகள் மற்றும் அச்சிடுதலும் உற்பத்தியும், முகப்பு அட்டைப் படம்/வடிவமைப்பு ஆகிய பிரிவுகளில் இரண்டு வெண்கல விருதுகள் என்பனவே அவையாகும்.