செய்திகள்
- தெற்காசியா விளையாட்டுப் போட்டிகளில் இலங்கையின் முதலாவது தங்கப்பதக்கம், வாழ்த்துக்கள் ரணுக்க பிரபாத
- லீசிங் துறையில் புதிய புரட்சி “பீப்பள்ஸ் லீசிங் பெற்றோல் பெரலிய”
- பிரான்ட் ஃபினான்ஸ் சுட்டெண் 2019 இல் “சிறந்த வங்கிசாரா நிதி நிறுவனம்” எனும் நிலையை பீப்பள்ஸ் லீசிங்
- மரநடுகைத் திட்டத்தை முன்னெடுக்க பீப்பள்ஸ் லீசிங் உயிரியல் பாதுகாப்பு சங்கத்துடன் கைகோர்ப்பு
- பீப்பள்ஸ் லீசிங் மஹரகம கிளையினால் விசேட மருத்துவ முகாம் முன்னெடுப்பு
- இலங்கையின் சிறுவர்கள் மத்தியில் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் 'செனெஹஸ யாலு' அன்பளிப்பு தி
- பெருமளவு வசதிகளுடன் புதிய முகவரியில் பீப்பள்ஸ் லீசிங் நெலுவ கிளை
- பீப்பள்ஸ் லீசிங் வர்த்தக நாம ஊக்குவிப்பாளராக புகழ்பெற்ற நடிகர் ஹேமால் ரணசிங்க நியமனம்
- பீப்பிள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பி.எல்.சி.யின் ஆண்டறிக்கை 2017/18.
- சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் திறன் மேம்பாட்டுக்காக பீப்பள்ஸ் லீ
- பீப்பள்ஸ் லீசிங் தங்காலை கிளையினால் சிறுவர்கள் மத்தியில் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் பயிற்சிப்ப
- பீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் அம்பாறை கிளையினூடாக அம்பாறை மாவட்ட செயலகத்தில் முன்பள்ளி ஆசிரியர்கள
- SLITAD மக்கள் அபிவிருத்தித் தரச்சிறப்பு விருது 2016/17
- PLC- ஏஷியா பசிபிக் ICT எலையன்ஸ் விருதுகள் (APICTA) 2017 நிகழ்வில் PLC தங்க விருதை வென்றது
- PLC – CA ஸ்ரீலங்காவின் 53ஆவது ஆண்டறிக்கை விருதுகள் நிகழ்வில் நான்கு விருதுகளைப் பெற்றது
- PLC – தேசிய தரச்சிறப்பான மென்பொருள் விருதுகள் 2017 நிகழ்வில் இரண்டு விருதுகளைப் பெற்றது
- PLC - பிஸ்னஸ் ருடே “Top 30” நிறுவனங்கள் பட்டியலில் 15ஆவது இடத்தைப் பெற்றது
- PLC - இலங்கையிலுள்ள மிகச் சிறந்த நிறுவனப் பிரஜைகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது
- இலங்கையின் மிகச் சிறந்த ஆண்டறிக்கைக்கான பிரதான விருது
- உலகளாவிய HR தொழில் நிபுணர்களுள் செல்வாக்கு மிகுந்த 100 பேரில் ஒருவர்
- PLC - அதி பெறுமதியான வர்த்தகப் பெயர்களுள் ஒன்றாகும்
- PLC - “அதி மதிப்பார்ந்த நிறுவனங்கள்” – 2017 பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது
மரநடுகைத் திட்டத்தை முன்னெடுக்க பீப்பள்ஸ் லீசிங் உயிரியல் பாதுகாப்பு சங்கத்துடன் கைகோர்ப்பு
இலங்கையின் முன்னணி வங்கிசாரா நிதிச்சேவைகளை வழங்கும் பீப்பள்ஸ் லீசிங் நிறுவனம், மக்கள் வங்கியின் துணை நிறுவனமாக திகழ்கிறது.
நிதிச் சேவைகளை வழங்கும் பீப்பள்ஸ் லீசிங், வருடாந்தம் தனது இலாபத்தில் ஒரு பகுதியை சமூகப் பொறுப்புணர்வூ செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு பயன்படுத்துவதுடன், தனது நாடு முழுவதையூம் சேர்ந்த கிளை வலையமைப்பில் பணியாற்றும் ஊழியர்களை தன்னார்வ அடிப்படையில் ஈடுபடுத்தி சமூகம் மற்றும் சூழல் மேம்பாட்டுக்கு பங்களிப்பு வருகிறது. இந்த செயற்பாடுகளுக்கு மன்னார், புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு, பானந்துறை, அளுத்கமை, அம்பலாங்கொடை, காலி, மாத்தறை மற்றும் தங்காலை ஆகிய பிரதேசங்களில் காணப்படும் பீப்பள்ஸ் லீசிங் கிளைகளின் முகாமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் தன்னார்வ அடிப்படையில் முன்வந்து பங்களிப்பு வழங்கியிருந்தனர்.
சூழல் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தும் நிறுவனம் எனும் வகையில், பீப்பள்ஸ் லீசிங், கரையோர மரநடுகை சமூகப் பொறுப்புணர்வூ திட்டத்தை முன்னெடுத்திருந்தது. இதன் பிரகாரம் மன்னார் முதல் தங்காலை வரையிலான கரையோர பகுதிகளில் சுமார் 5,500 தாவரக் கன்றுகள் நடப்பட்டன. இந்தத் திட்டத்தினூடாக கரையோரப் பகுதியில் உயிரியல் பரம்பலை பாதுகாத்து, மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் வழிகாட்டலுடன், பீப்பள்ஸ் லீசிங், உயிரியல் பாதுகாப்பு சங்கத்துடன் கைகோர்த்து இந்த திட்டத்தை முன்னெடுத்திருந்தது. மன்னார் முதல் தங்காலை வரையான கரையோரப் பகுதிகளில், 4,500 கொடி முந்திரிகை (பண்டனுஸ் டெக்ட்டோரியஸ்) மற்றும் 1,000 சிவப்பு கண்டல் தாவரங்கள் பயிரிடப்பட்டிருந்தன. இந்த தாவரங்கள் பயிடப்பட்ட பகுதிகளில் (எருக்கலம்பிட்டி) மன்னார், (கண்டக்குளிய) புத்தளம், (குருக்குபானே) சிலாபம், (துங்கல்பிட்டிய) நீர்கொழும்பு, (பொதுபிட்டிய) பானந்துறை, (அதுருவெல்ல) அளுத்கமை, (அஹுங்கல்ல) அம்பலாங்கொடை, (மஹாமோதர) காலி, (மிதிகம) மாத்தறை மற்றும் (கபுஹேன்வெல) தங்காலை ஆகியன அடங்குகின்றன.
மர நடுகைத் திட்டத்துக்கு மேலாக, கரையோர உயிரியல் பரம்பல் கட்டமைப்புடன் நேரடியாகவூம் மறைமுகமாகவூம் தொடர்புடைய பங்காளர்களுக்கான கரையோர உயிரியல் சமநிலை பாதுகாப்பு தொடர்பான 10 பயிற்சிப் பட்டறைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதில் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம், இலங்கை காவல் துறை, கரையோர பாதுகாப்பு திணைக்களம், பாடசாலை மாணவர்கள், சமூக சார் அமைப்புகள் மற்றும் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் அடங்கியிருந்தனர். கண்டல் தாவரங்கள் மற்றும் சூழல் கட்டமைப்புகள் பற்றிய இந்த புரிந்துணர்வினூடாக, கண்டல் செய்கைத் திட்டங்களில் சமூகங்களைச் சேர்ந்தவர்களை சிறந்த முறையில் ஈடுபடுத்த முடியூம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தாவரக் கன்றுகள் நடுகைத் திட்டத்தில் இந்த பங்காளர்கள் தன்னார்வ அடிப்படையில் முன்வந்து பயிரிட்டமை மாத்திரமின்றி, புதிதாக பயிரிடப்பட்ட தாவரங்களை பாதுகாத்து வளர்ப்பதற்கும் தமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியிருந்தமை விசேட அம்சமாகும். பங்குபற்றியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருந்தன.
பீப்பள்ஸ் லீசிங் பிரதம நிறைவேற்று அதிகாரியூம் பொது முகாமையாளருமான திரு. சப்ரி இப்ரஹிம் கருத்துத் தெரிவிக்கையில், “பொறுப்பு வாய்ந்த கூட்டாண்மை நிறுவனம் எனும் வகையில் பீப்பள்ஸ் லீசிங் நிறுவனம், சூழல் பாதுகாப்பில் தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், நாட்டின் குடிமக்களின் நிலையை மேம்படுத்தவூம் தன்னை அர்ப்பணித்துள்ளது. இதற்காக கிளை வலையமைப்பிலிருந்து சிறந்த ஈடுபாட்டையூம் அர்ப்பணிப்பையூம் மேற்கொள்கிறது.” என்றார்.
பீப்பள்ஸ் லீசிங் சந்தைப்படுத்தல் பிரதி பொது முகாமையாளர் லக்சந்த குணவர்தன கருத்துத் தெரிவிக்கையில், “இந்த நீண்ட கால அடிப்படையிலான மரக் கன்றுகள் நடுகைத் திட்டத்தின் நோக்கம் என்பது, உலக வெப்பமடைதலுக்கு காரணமாக அமைந்துள்ள பச்சை இல்ல வாயூக்களின் தாக்கத்தை குறைப்பதற்கு பங்களிப்பு வழங்குவதாகும். உயிரியல் பரம்பலை மேம்படுத்தும் எனவூம் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்துக்கு உயிரியல் பாதுகாப்பு சங்கத்தின் உதவி மிகவூம் பாராட்டுதலுக்குரியது.” என்றார்.
உயிரியல் பாதுகாப்பு சங்கம், இலங்கையில் தனது செயற்பாடுகளை சீராக முன்னெடுப்பதுடன், கடல் ஆமைகளை பாதுகாப்பதில் அதிகளவூ கவனம் செலுத்தி வருகிறது. இந்த அமைப்பின் தலைவர் கலாநிதி. லலித் ஏக்கநாயக்க, கடல் ஆமைகள் பாதுகாப்பு நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது.
கலாநிதி. லலித் ஏக்கநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “இந்த திட்டத்தை முன்னெடுப்பதற்கு பீப்பள்ஸ் லீசிங் உடன் கைகோர்ப்பதையிட்டு நாம் மிகவூம் மகிழ்ச்சியடைகிறௌம். வளிமண்டலத்திலிருந்து காபனீரொட்சைட்டை கண்டல் தாவரங்கள் நேரடியாக அகத்துறிஞ்சுவதன் காரணமாக, பச்சைஇல்ல விளைவூகளில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தி, உலக காலநிலை மாற்றத்தில் கட்டுப்பாட்டை மேற்கொள்கிறது. கண்டல் தாவரங்களின் வேர் பகுதிகளில் சிறிய மீன்கள் மற்றும் இறால் வளர்ப்பு போன்றன அதிகரிக்கப்படும். எனவே, மீனவர்களுக்கும் தமது மீன்பிடி நடவடிக்கைகளுக்கு அனுகூலம் கிடைக்கும். மேலும், கரையோர மரநடுகை திட்டம் மேலும் மேம்படுத்தப்பட்டு, கரையோர மண்அரிப்பை தடுப்பதற்கான நேரடி பங்களிப்பு வழங்கப்படும். கரையோர குடும்பங்கள், களப்பு சார்ந்த கடற்றொழிலில் அதிகளவூ தங்கியூள்ளனர். இது போன்றன உடனடி பாதுகாப்பு மற்றும் நிர்வாக செயற்பாடுகள் சூழல்கட்டமைப்பை சீராக பேணுவதற்கு மிகவூம் அத்தியாவசியமானவையாக அமைந்துள்ளன. கண்டல் தாவரங்கள் பல பகுதிகளில் வேகமாக அழிவடைந்து வருவதை காணக்கூடியதாகவூள்ளது.” என்றார்.
1995ம் ஆண்டு பீப்பள்ஸ் லீசிங் கம்பனி நிறுவப்பட்டிருந்தது. இது இலங்கையின் மாபெரும் அரச வங்கியான மக்கள் வங்கியின் துணை நிறுவனமாகும். இலங்கையின் வங்கிசாரா நிதித்துறையில் சந்தை முன்னோடியாக பீப்பள்ஸ் லீசிங் கம்பனி திகழ்கிறது.
கம்பனியின் உயர் தர கடன் நியமத்துக்காக, Fitch ரேட்டிங் லங்காவினால் AA-(lka) எனும் கடன் தரப்படுத்தல் வழங்கப்பட்டுள்ளதன் மூலம் உயர்ந்த மட்ட தரப்படுத்தலைப் பெற்ற நிதிச் சேவை வழங்குநர் எனும் நிலையை கொண்டுள்ளது. இலங்கையில் இரு சர்வதேச தரப்படுத்தல்களை பெற்ற ஒரே உள்நாட்டு நிதித் தாபனமாக பீப்பள்ஸ் லீசிங் திகழ்கிறது. இதில் ஒன்று Standard & Poor's ('B+/B') க்கு நிகரானதாக அமைந்துள்ளது. மற்றையது Fitch ரேட்டிங் இன்டர்நஷனலின் 'B' தரப்படுத்தலாகவூம் அமைந்துள்ளது.
பீப்பள்ஸ் லீசிங் நிறுவத்தினால் வழங்கப்படும் நிதிச் சேவைகளில் லீசிங், வாகன கடன், நிலையான வைப்புகள், சேமிப்புக் கணக்குகள், வீடமைப்பு மற்றும் வியாபார கடன்கள், தங்கக் கடன்கள், மார்ஜின் டிரேடிங், ஃபக்டரிங் மற்றும் இஸ்லாமிய வங்கியியல் சேவைகள் போன்றன அடங்கியூள்ளன.
இந்நிறுவனத்தின் துணை நிறுவனங்களாக பீப்பள்ஸ் இன்சூரன்ஸ் பிஎல்சி, பீப்பள்ஸ் மைக்ரோ-ஃபினான்ஸ் லிமிடட், பீப்பள்ஸ் லீசிங் புரொபர்டி டிவலப்மன்ட் லிமிடட், பீப்பள்ஸ் லீசிங் ஃப்லீட் மனேஜ்மன்ட் லிமிடட் மற்றும் பீப்பள்ஸ் லீசிங் ஹவ்லொக் புரொப்பர்டீஸ் லிமிடெட் ஆகியன காணப்படுகின்றன.
பீப்பள்ஸ் லீசிங் நிறுவனம் தமது வாடிக்கையாளர்களுக்கு ஒரே கூரையின் கீழ் பரந்தளவூ நிதிசார் சேவைகளை வழங்குவதால் வாடிக்கையாளர்களுக்கு சகல சேவைகளையூம் இலகுவான முறையில் பெற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளது.