செய்திகள்


பீப்பள்ஸ் லீசிங் மஹரகம கிளையினால் விசேட மருத்துவ முகாம் முன்னெடுப்பு

இலங்கையின் முன்னணி வங்கிசாரா நிதிச்சேவைகளை வழங்கும் பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தின் மஹரகம கிளையினூடாக விசேட மருத்துவ முகாம் ஒன்று அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மஹரகம பொலிஸ் நிலையத்துடன் இணைந்து இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வு மஹரகம தர்மாசோக கனிஷ்ட பாடசாலையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த சமூகப் பொறுப்புணர்வு செயற்திட்டத்தில் மேலைத்தேய மருத்துவ முகாம், பல் சிகிச்சை கிளினிக், குடும்பக் கட்டுப்பாட்டு சம்மேளனத்துடன் இணைந்து பெண்களின் மார்பு மற்றும் கருப்பை புற்றுநோய் கண்டறிதலுக்கான சிகிச்சை நிலையம், ஹோமகம லயன்ஸ் கிளப் உடன் இணைந்து கண் பரிசோதனை முகாம் மற்றும் மூக்குக்கண்ணாடிகள் விநியோகம், சிறுநீரக பரிசோதனை முகாம், தலவதுகொட ஹேமாஸ் வைத்தியசாலையுடன் இணைந்து நீரிழிவு பரிசோதனை முகாம் மற்றும் சுதேச மருத்துவ தேவைகளுக்காக நாவின்ன சுதேச மருத்துவ நிலையத்துடன் இணைந்த மருத்துவ முகாம் போன்றன முன்னெடுக்கப்பட்டிருந்தன.

மஹரகம நகரம், மஹரகம கிழக்கு, பன்னிபிடடி; ய வடக்கு மற்றும் மேற்கு மற்றும் கொடிகமுவ வடக்கு மற்றும் மேற்கு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த வயது முதிர்ந்தவர்களுக்கு அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நடவடிக்கைகளையும் பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நடவடிக்கைகள் பிரிவு முன்னெடுத்திருந்தது.

18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு 'செனெஹஸே இதுரும்' கணக்கை ஆரம்பிப்பதற்கான வசதிகளையும் இந்த சமூகப் பொறுப்புணரவு; செயற்திட்டங்களினூடாக பீப்பள்ஸ் லீசிங் முன்னெடுத்திருந்தது.

இந்நிகழ்வில் பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தின் சிரேஷ்ட பதில் பொது முகாமையாளர் சஞ்ஜீவ பண்டாரநாயக்க, பிரதம முகாமையாளர் திருமதி. பிரியங்கா விமலசேன, மஹரகம பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பி.எஸ். மீதின் மற்றும் ஹோமகம லயன்ஸ் கழகத்தின் தலைவி திருமதி. ஜனித சந்தசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தின் மஹரகம கிளையின் முகாமையாளர் சுகத் ஜயசூரிய கருத்துத் தெரிவிக்கையில், 'மஹரகம பிரதேசத்தைச் சேர்ந்த மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு பீப்பள்ஸ் லீசிங் மஹரகம கிளை தொடர்ச்சியான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. விசேட மருத்துவ முகாம் மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட நடமாடு சேவை போன்றன மஹரகம பொலிஸ் நிலையத்துடன் இணைந்து நாம் முன்னெடுத்திருந்தோம். ஒரு நாளில் இது போன்ற நிகழ்வொன்றை ஏற்பாடு செய்வது என்பது பெரும் சவால்களைக் கொண்டதாகும். பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தின் மஹரகம கிளையைச் சேர்ந்த ஊழியர்கள் மற்றும் மஹரகம பொலிஸ் நிலைய அதிகாரிகளின் அர்ப்பணிப்பான செயற்பாடுகளினூடாக இந்த தன்னார்வ செயற்பாடு மிகவும் வெற்றிகரமாக அமைந்திருந்தது. இவர் அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.

1995ம் ஆண்டு பீப்பள்ஸ் லீசிங் கம்பனி நிறுவப்பட்டிருந்தது. இது இலங்கையின் மாபெரும் அரச வங்கியான மக்கள் வங்கியின் துணை நிறுவனமாகும். இலங்கையின் வங்கிசாரா நிதித்துறையில் சந்தை முன்னோடியாக பீப்பள்ஸ் லீசிங் கம்பனி திகழ்கிறது.

கம்பனியின் உயர் தர கடன் நியமத்துக்காக, குவைஉh ரேட்டிங் லங்காவினால ; யுயு-(டமய) எனும் கடன் தரப்படுத்தல் வழங்கப்பட்டுள்ளதன் மூலம் உயர்ந்த மட்ட தரப்படுத்தலைப் பெற்ற நிதிச் சேவை வழங்குநர் எனும் நிலையை கொண்டுள்ளது. இலங்கையில் இரு சர்வதேச தரப்படுத்தல்களை பெற்ற ஒரே உள்நாட்டு நிதித் தாபனமாக பீப்பள்ஸ் லீசிங் திகழ்கிறது. இதில் ஒன்று ளுவயனெயசன ரூ Pழழச'ள ('டீ10ஃடீ') க்கு நிகரானதாக அமைந்துள்ளது. மற்றையது குவைஉh ரேட்டிங் இன்டர்நஷனலின ; 'டீ' தரப்படுத்தலாகவும் அமைந்துள்ளது.

பீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் நிறுவனத்தின் விசேட நிதிச் சேவைகளில், லீசிங், நிலையான வைப்புகள், சேமிப்புக் கணக்குகள், தனிநபர் மற்றும் வியாபார கடன்கள் மற்றும் இஸ்லாமிய நிதிச் சேவைகள் போன்றன அடங்குகின்றன.

இந்நிறுவனத்தின் துணை நிறுவனங்களாக பீப்பள்ஸ் இன்சூரன்ஸ் பிஎல்சி, பீப்பள்ஸ் மைக்ரோ- ஃபினான்ஸ் லிமிடட், பீப்பள்ஸ் லீசிங் புரொபர்டி டிவலப்மன்ட் லிமிடட், பீப்பள்ஸ் லீசிங் ஃப்லீட் மனேஜ்மன்ட் லிமிடட் மற்றும் பீப்பள்ஸ் லீசிங் ஹவ்லொக் புரொப்பர்டீஸ் லிமிடெட் ஆகியன காணப்படுகின்றன.

பீப்பள்ஸ் லீசிங் நிறுவனம் தமது வாடிக்கையாளர்களுக்கு ஒரே கூரையின் கீழ் பரந்தளவு நிதிசார் சேவைகளை வழங்குவதால் வாடிக்கையாளர்களுக்கு சகல சேவைகளையும் இலகுவான முறையில் பெற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளது.

 

Registration of participants
மருத்துவ முகாமுக்காக பங்குபற்றுநர்களை பதிவு செய்தல்

Mr. P S Meedin, OIC, Maharagama Police
மஹரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பி. எஸ். மீதின் ஒன்றுகூடியுள்ளவர்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.

Mr. Sanjeewa Bandaranaike, senior DGM, PLC
பங்குபற்றுநர் ஒருவருக்கு பீப்பள்ஸ் லீசிங் சிரேஷ்ட பதில் பொது முகாமையாளர் சஞ்ஜீவ பண்டாரநாயக்க மூக்குக்கண்ணாடி ஒன்றை அன்பளிப்பு செய்கிறார்.

Mrs. Priyanka Wimalasena, Chief Manager, PLC
பங்குபற்றுநர் ஒருவருக்கு பீப்பள்ஸ் லீசிங் பிரதம முகாமையாளர் திருமதி. பிரியங்க விமலசேன மூக்குக்கண்ணாடி ஒன்றை அன்பளிப்பு செய்கிறார்.