நாங்கள் யார்

பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி நிறுவனமானது மக்கள் வங்கியின் துணை நிறுவனமாவதுடன் கொழும்பு பங்குச் சந்தையின் (சீ.எஸ்.சீ) பிரதான வாரியத்தில் வரையறுக்கப்பட்ட பொறுப்பினையுடைய நிறுவனமாகவும்  பட்டியலிடப்பட்டுள்ளது. எமது குழுமத்தில் பீப்பள்ஸ் லீசிங் பிலீட் மெனேஜ்மென்ட் லிமிட்டட்இ பீப்பள்;ஸ் லீசிங் ப்ரொப்பர்ட்டி டிவலொப்மன்ட் லிமிட்டட் பீப்பள்ஸ் லீசிங் ஹெவ்லொக் ப்ரொப்பர்ட்டீஸ் லிமிட்டட் பீப்பள்ஸ் மைக்ரோ பினான்ஸ் லிமிட்டட் மற்றும் பீப்பள்ஸ் இன்ஷ்ஷூரன்ஸ் லிமிட்டட் ஆகிய ஐந்து துணை நிறுவனங்கள் அடங்குகின்றன. நாம் சந்தைப்போட்டிக்குள் பிரவேசித்த ஆறு வருடங்கிளிலேயே லீசிங் துறையில் முன்னணியில் உள்ள நிறுவனமாக திகழத்தக்கதாக முன்னேறியிருக்கிறோம். மேலும் நாம் பெற்ற இவ்வெற்றியை பத்து வருடங்களுக்கும் மேலாக தக்கவைத்துக்கொள்வதில் வெற்றியடைந்துள்ளோம். 2012 நவம்பர் மாதம் இலங்கை மத்திய வங்கியின் கண்காணிப்புக் குழுவினரால் 2011 ஆண்டின் 42 ஆம் இலக்க நிதி வியாபாரச் சட்டத்தின் கீழ் எமக்கு நிதி வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான அனுமதி வழங்கப்பட்டதுடன் நாம் இப்போது வங்கியல்லாத நிதி நிறுவனங்களில் முன்னணியில் திகழுகின்றோம்(சொத்தின் அடிப்படையில்).

எமது கடந்த தசாப்தங்களில் பீப்பள்ஸ் லீசிங் கம்பனியானது இலங்கை மக்களுக்கு பெறுமதி சேர்க்கப்பட்ட நிதியியல் சேவைகளை பெற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கின்றது. நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 100 க்கும் மேற்பட்ட கிளைகளினூடாக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்படும் ஊழியர்களை உள்ளடக்கிய சிறந்த அணியின் மூலமாக எமது பெறுமதிமிக்க வாடிக்கையாளர்களுக்கு அவர்களுக்குரிய நிதித் தேவைகளை அவர்கள் வழங்கப்பட்டதுடன் வகையில் எம்மிடமுள்ள பரந்தளவிலான நிதியியல் தீர்வுகளைக்கொண்டு சேவைகளை வழங்கி வருகின்றோம். எமது நிதித் தீர்வுகளில் பிரதானமாக நிதியியல் லீசிங் வகைகள் கடன் வசதிகள் வைப்புக்கள்(நிலையான மற்றும் சேமிப்பு வைப்புக்கள்) மற்றும் இஸ்லாமிய நிதித் தீர்வுகள் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் எமக்கு வெளிநாட்டு பணத்தாள்கள் மற்றும் நாணயங்களை கொள்வனவு செய்வதற்கு விற்பனை செய்வதற்கு மற்றும் பயணிகள் காசோலைகளை பணமாக்குவதற்குரிய அனுமதி வழங்கப்பட்டிருந்தும் நாம் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட வர்த்தக நடவடிக்கைகளையே மேற்கொண்டு வருகின்றோம். பீப்பள்ஸ் லீசிங் கம்பனியானது தற்போதைய இலங்கையின் நிதியியல் வர்த்தகத் துறையில் அதிசிறந்த தீர்வுகளை பெற்றுக்கொடுக்கத்தக்க வகையிலேயே எமது உற்பத்தி மூலோபாயங்கள் மிகவும் அவதானமான வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

பீப்பள்ஸ் லீசிங் கம்பனியானது நிதியியல் சேவைகள் துறையில் செயற்பட்டு வருவதுடன் கொழும்பு பங்கு சந்தையின் பிரதான வாரியத்தில் பட்டியலிடப்பட்டுள்ளதோடு இலங்கை மத்திய வங்கி இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனைகள் ஆணைக்குழு மற்றும் கொழும்பு பங்குச் சந்தையின் நேரடி தீவிர கண்காணிப்பின் கீழ் செயற்பட்டு வருகின்றது

 

எமது நோக்கம்

வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற ஆக்கபூர்வமான புத்தாக்கமுள்ள சிறந்த பூரணமான நிதியியல் சேவைத் தீர்வை பெற்றுக்கொடுக்கத்தக்க சேவை வழங்குனராகத் திகழல்.

எமது குறிக்கோள்.

போட்டிமிக்க நிலையான பிரதிபலன்களை பெற்றுக்கொடுத்தவாறு நிறுவன ரீதியாக அதிசிறந்த பெறுமதி சேர்க்கப்பட்ட அர்ப்பணிப்புடனான வாடிக்கையாளர் சேவையை அதியுயர் தரத்தில் வழங்கல்.

அடிப்படை விழுமியங்கள்.
  • பொருளாதார நம்பகத்தன்மை
  • சூழலியல் பொறுப்பு
  • சமூகப் பொறுப்பு
எமது முக்கிய வகையீடுகள்
  • அர்ப்பணிப்புள்ள மற்றும் திறமைமிகு சேவைக் குழாம்.
  • எமது பல்வகைமை மிக்க முதலீடுகள்.
  • வெளிப்புறச் சூழல் போக்குகளின் மாற்றங்களுக்கேற்ப பதிலளிக்கத்தக்க ஆளுமை.

 

CEO / GM (2017 - 2018), நிலைபெறு தன்மைக்கான அணுகுமுறை

இப்ராஹிம் 2017 ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் மக்கள் லீசிங் அண்ட் பினான்ஸ் பி.எல்.சி. இன் தலைமை நிர்வாக அதிகாரி / பொது முகாமையாளராக நியமிக்கப்பட்டார். அதற்கு முன்னர் அவர் உள்நாட்டிலும், சர்வதேச ரீதியிலும், மூத்த வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர், மொத்த வங்கியியல் (2012 அக்டோபர் முதல் செப்டம்பர் 2016 வரை) தலைமை நிர்வாகி, கருவுலத் தலைவர், கார்ப்பரேஷனல் பேங்கிங் & மீள்பார்வைத் தலைவர், தலைமை இடர் அதிகாரி மற்றும் ஹட்டன் தேசிய வங்கி பி.எல்.சி இன் தலைமை கடன் அதிகாரி (2004 முதல் அக்டோபர் 2014 வரை அக்டோபர் 2014 வரை) ஜூலை 2007) மற்றும் கடன் மற்றும் GSAM தலைவர், ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு பாங்க் (2002 முதல் 2004 வரை).

திரு. இப்ராஹிம் வங்கியியல் அனுபவம் 33 ஆண்டுகளுக்கும் மேலாக கார்ப்பரேட் வங்கி, கருவுல மேலாண்மை மற்றும் இடர் மேலாண்மை ஆகியவற்றில் முக்கியமாக உள்ளது; இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் கௌரவ பட்ட பட்டம் (பி.எஸ்.சி) மற்றும் வங்கியாளர் பட்டய நிறுவனம் - ஐக்கிய இராச்சியம் (FCIB) ஆகியோருடன் இணைந்துள்ளார்.

திரு. இப்ராஹிம் HNB செக்யுரிட்டீஸ் (பிரைவேட்) லிமிடெட் (2005 முதல் 2007 வரை) மற்றும் பீப்பிள்ஸ் மெர்ச்சண்ட் பாங்க் பி.எல்.சி (2009 முதல் 2011 வரை) இயக்குனராகவும் இருந்தார். அவர் சமீபத்தில் மக்கள்-இன்சூரன்ஸ் பி.எல்.சி. அல்லாத சார்பற்ற மற்றும் சுயாதீன இயக்குனராகவும் நியமிக்கப்பட்டார், மேலும் மக்கள் லீசிங் ஃப்ளீட் மேலாண்மை லிமிடெட் மற்றும் மக்கள் லீசிங் சொத்து அபிவிருத்தி லிமிட்டட்டின் இயக்குனராகவும் செயல்பட்டார்.




 

 

முன்னைய பிரதம நிறைவேற்று அதிகாரி முகாமைப் பணிப்பாளர் (1997 - 2017), திரு. டீ. பீ. குமாரகே

பீப்பள்ஸ் லீசிங் கம்பனியின் பிரதம நிறைவேற்று அதிகாரி பொது முகாமையாளர் மற்றும் பீப்பள்ஸ் லீசிங் கம்பனியின் துணை நிறுவனங்களின் முகாமைப் பணிப்பாளரான திரு. டீ. பீ. குமாரகே அவர்கள் பீப்பள்ஸ் லீசிங் கம்பனியில் 20 வருட ஆக்கபூர்வமான திறன்மிக்க தொடர் சேவையினை நிறைவு செய்தார். பீப்பள்ஸ் லீசிங் கம்பனியானது 1995 ஆம் ஆண்டு மக்கள் வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனமாக இணைக்கப்பட்டதுஇ திரு. குமாரகே அவர்கள் பீப்பள்ஸ் லீசிங் கம்பனியின் பிரதம நிறைவேற்று அதிகாரி பொது முகாமையாளராக 1997 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். திரு குமாரகே அவர்களது இலக்கை நோக்கிய தலைமைத்துவமானது நிறுவனத்தை மிகக் குறுகிய காலத்தில் வெற்றியை நோக்கிய பாதையில் இட்டுச் சென்றது. திரு. குமாரகே அவர்கள் நிறுவனத்தை லீசிங் துறை மற்றும் மிகப்பெரிய வங்கியல்லாத நிதி நிறுவனம் என்ற வகையில் முன்னிலையில் திகழத்தக்க நிறுவனமாக மாற்றுவதற்குரிய தலைவராக திகழ்ந்தார் என்பதை மறுக்க முடியாது. கொழும்பு பங்கு சந்தையில் முன்னணியில் திகழத்தக்க நிறுவனமாக மாற்றியதுடன் வர்த்தக நடவடிக்கைகளை இலங்கையில் மாத்திரமன்றி வங்காளதேசத்திலும் விஸ்தரித்தார். திரு. குமாரகே என்ற நாமம் பீப்பள்ஸ் லீசிங் கம்பனி வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் நாமமாகும்.

 

 

முக்கிய மைல்கற்கள்

  • 1995 / 96
    பீப்பள்ஸ் லீசிங் கம்பனியானது 1995 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி வரையறுக்கப்பட்ட பொறுப்பினையுடைய மக்கள் வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனமாக இணைக்கப்பட்டது
  • 1996 / 97
    ரூபா 10 மில்லியன் மூலதனம் மற்றும் மூன்று ஊழியர்களுடன் 1996 ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி தமது நடவடிக்கைகளை ஆரம்பித்தது.
  • 1997 / 98
    தனது முதலாவது கிளையை கண்டியில் திறந்து வைத்தது.
    பம்பலப்பிட்டியிலிருந்த தமது பிரதான அலுவலகத்தை கொழும்பு 02 க்கு மாற்றியது.
  • 1999 / 00
    தமது பிரதான அலுவலகத்தை கணினிமயமாக்கல் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
    லீசிங் துறையில் 4 ஆவது இடத்தை சுவீகரித்தது.
  • 2000 / 01
    வரையறுக்கப்பட்ட பொது உடைமை நிறுவனமாக தமது புதிய கூட்டு வர்த்தக சின்னத்தை அறிமுகம் செய்தது.
    வாகன முற்றத்தை பொரல்ல மக்கள் வங்கி வளாகத்தில் திறந்து வைத்தது.
  • 2001 / 02
    வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்காக தமது கிளைகளை ஒன்லைன் முறைமையு+டாக இணைத்தது.
  • 2002 / 03
    முதற் தடவையாக பீப்பள்ஸ் லீசிங் கம்பனி லீசிங் துறையில் இலங்கையின் முன்ணணி நிறுவனமாக தரப்படுத்தப்பட்டது.
  • 2004 / 05
    ICASL இனது வருடாந்த அறிக்கை விருதுகளில் “இரண்டாமிடத்துக்குரிய” விருதினை தமது முதல் விருதாக சுவீகரித்துக்கொண்டது
  • 2005 / 06
    இஸ்லாமிய நிதிச் சேவைப் பிரிவு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
  • 2006 / 07
    தமது உத்தியோகபூர்வ இணையத்தளமான www.plc.lk ஆரம்பித்து வைக்கப்பட்டது.
  • 2007 / 08
    'Window Office' முறைமையை அறிமுகம் செய்து வைத்ததன் ஊடாக தமது வாடிக்கையாளர்களது நலன் கருதி ஒவ்வொரு மக்கள் வங்கிக் கிளையிலும் தமது சேவை மையத்தை ஆரம்பித்து வைத்தது.
  • 2008 / 09
    வேறுபட்ட நடவடிக்கைகள் பீப்பள்ஸ் லீசிங் ப்ரொப்பர்ட்டி டிவலொப்மன்ட் லிமிட்டட் மற்றும் பீப்பள்ஸ் லீசிங் பிலீட் மெனேஜ்மன்ட் லிமிட்டட் ஆகிய துணை நிறுவனங்களினால் மேற்கொள்ளல் ஆரம்பிக்கப்பட்டது.
  • 2009 / 10
    செலான் மெர்ச்சன்ட் லீசிங் பிஎல்சி நிறுவனம் தன்னகப்படுத்தப்பட்டது.
    பீப்பள்ஸ் இன்ஷ்ஷூரன்ஸ் லிமிட்டட் உருவாக்கப்பட்டது.
  • 2010 / 11
    பீப்பள்ஸ் மைக்ரோ ஃபினேன்ஸ் லிமிட்டட் ஆரம்பிக்கப்பட்டது.
    பீப்பள்ஸ் லீசிங் ஹெவ்லொக் ப்ரொப்பர்டீஸ் லிமிட்டட் ஆரம்பிக்கப்பட்டதுடன் குழும நிறுவனங்கள் ஒருங்கிணைக்கப்பட்டன.
  • 2011 / 12
    பொரல்லையில் புதிய பிரதான அலுவலகம் அமைக்கப்பட்டது.
    பொது மக்களுக்கான அதிக சலுகைகளை பெற்றுக்கொடுப்பதால் பொது உடைமை நிறுவனமாக மாறியது.
  • 2012 / 13
    பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி ஆக உருவெடுத்தது.
    வருடத்தின் நிதியியல் சேவை வழங்குனராக முதற் தடவையாக SLIM Nielsen மக்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
    முதற் தடவையாக இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் பத்து “Best corporate Citizen” இல் ஒருவராக தெரிவுசெய்யப்பட்டது.
    இரு வெளிநாட்டு தரப்படுத்தல்கள் கிடைக்கப்பெற்றன. 'Standard and Poor' (B+/B) 'Fitch Rating International' (B+)B+
    நாடளாவிய ரீதியில் 100 கிளைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
  • 2014 / 15
    காபன் சான்றிதழ் நிறுவனமாக தரமேற்றப்பட்டது.
    வியாபாரப் பெறுமானம் 6 பில்லியனை தாண்டிய முதலாவது வங்கியல்லா நிதி நிறுவனமாக 2014 நவம்பரில் தெரிவானது.
  • 2015 / 16
    வியாபாரப் பெறுமானம் 7 பில்லியனை தாண்டிய முதலாவது வங்கியல்லா நிதி நிறுவனமாக 2016 செப்டம்பரில் தெரிவானது.
    பீப்பள்ஸ் லீசிங் கம்பனியின் இன்ஷ்ஷூரன்ஸ் துணை நிறுவனமானது பொது நிறுவனமாக பீப்பள்ஸ் இன்ஷ்ஷூரன்ஸ் பிஎல்சி ஆக மாறியது.
  • 2016 / 17
    பீப்பள்ஸ் லீசிங் கம்பனி 20 வருட சேவைக் காலத்தை எட்டியது.
    வங்காளதேசத்தில் தமது சேவையை ஆரம்பித்தது.