நிலைபெறுதன்மை

பிஎல்சி ஆனது எதிர்கால சந்ததியினருக்கு வளங்களை பாதுகாத்தவாறு தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதன் ஊடாக நிலைபேராண்மையை உறுதிசெய்கின்றது. மேலும்இ எமது நிதியியல் நிபுணத்துவத்தை பயன்படுத்தி தனிநபர்களுக்கு, குடும்பங்களுக்கு, வர்த்தக நடவடிக்கைகளுக்கு மற்றும் சமூகத்துக்கு நன்மை பயப்பதே எமது மூலோபாயமாகும்.

எமது சூழலை புரிந்துகொள்ளல்

தற்போதைய உலகில் சனத்தொகை பெருக்கம் மற்றும் நுகர்வூ அதிகரித்துள்ளமை போன்றவற்றினால் நிலவூகின்ற பொருளாதார, சமூக, மற்றும் சுற்றாடல் சவால்கள் மற்றும் வளப் பற்றாக்குறை, புவி வெப்பமடைதல் மற்றும் தொழிலிண்மை போன்ற விடயங்கள் தலைதூக்கியூள்ளது. பொறுப்புள்ள நிதித் தீர்வூ வழங்குனர் என்ற வகையில் பீஎல்சீயானதுஇ உற்பத்தி மற்றும் நிதியியல் வளங்களை அதிகரிப்பதன் மூலம் வருமான சமத்துவமின்மையை இல்லாமலாக்கி ஏற்பட்டுள்ள நிலைமைக்கு தகுந்த தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

நிலைபெறு தன்மைக்கான அணுகுமுறை

நாம் நிலைபெறு தன்மையை ஒரு தந்திரோபாய வாய்ப்பாகவே கருதுகின்றௌம். இலங்கையின் எதிர்கால தனிநபர், வர்த்தக மற்றும் சமூக வளர்ச்சி மற்றும் அபிவிருத்தித் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக அல்லது நேரான முறையில் தீர்வூ காண்பதற்காக ஒரே குடும்மபமாக நாம் எமது நிபுணத்துவத்தை உபயோகித்து எமது பங்களிப்பை மேற்கொள்கின்றௌம். பிஎல்சி பொறுப்பு வாய்ந்த பெருநிறுவனம் என்கின்ற வகையில், வருமானத்தை அதிகரிக்கும் முறையை உருவாக்குதல் முக்கிய பொறுப்பாகும். நெறிப்படுத்தப்பட்ட கொள்கைகள் மற்றும் செயல்முறைகள் மூலம் எமது அனைத்து வியாபார நடவடிக்கைகளும் மிகவூம் சூட்சமமான முறையிலே சமூகத்தின் நன்மைகருதி பொறுப்பு வாய்ந்தமுறையில் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை உறுதிசெய்கின்றௌம். ஏ. எஸ் இப்ராஹீம், பிரதம நிறைவேற்று அதிகாரி: பீப்பல்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி

பங்குதாரர்களுடனான பிணைப்பு

எமது ஒன்றிணைந்த பொருளாதார வளர்ச்சிக்குரிய வினைதிறன்மிக்க ஊக்கிகளாக செயற்படும் எமது பங்குதாரர்களுக்கு நாம் செவி சாய்ப்பதுடன் அவர்களது முக்கிய விடயங்களுக்கு நாம் முக்கியத்துவமளிக்கின்றௌம். எமது பங்குதாரர்களான எமது சேவைக் குழாம், வாடிக்கையாளர்கள், பங்குடைமையாளர்கள் முதலீட்டாளர்கள், கட்டுப்பாட்டாளர்கள், வணிகப் பங்குதாரர்கள் மற்றும் உள்ளுர் சமூகங்களுடன் தொடர்ச்சியான நட்புறவை பேணுதலானது எமது பரஸ்பர புரிந்துணர்வை அதிகரிப்பதற்கும் அவர்களுக்குரிய பெறுமதியை அதிகரிப்பதற்கும் ஏதுவாக அமையூம்.

நெறிமுறையான நடத்தை மற்றும் நல்லாட்சி

நாம் எமது வர்த்தக நடவடிக்கைகளை மிகவூம் நம்பகமான முறையிலும்இ நடைமுறையிலுள்ள விதிமுறைகளுக்கு ஏற்பவூம் வெளிப்படையான முறையிலும் மேற்கொண்டு வருகின்றௌம். நல்லாட்சியின் நடைமுறைகளை தொடர்ந்தும் கடைபிடிப்பதானதுஇ பிஎல்சி இற்கு எதிர்காலத்திலும் துறைசார் நிபுணத்துவத்துடன் முன்னணியில் நிலைத்திருப்பதற்கு சிறந்த அத்திவாரமாக அமையூம்.

நிலையான அபிவிருத்தி நிரல்களுக்கான பங்களிப்பு

இலங்கை கைச்சாத்திட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின், நிலையான அபிவிருத்தி நிரல்கள் கொள்கைத் திட்டத்தை 2030 ஆம் ஆண்டளவில் அடைவதற்கு முயற்சி செய்வது பிஎல்சி எமது கடப்பாடாகும். எமது நிதியியல் நிபுணத்துவத்தை பயன்படுத்தி நிலையான அபிவிருத்தி கொள்கைகளை அடைவதற்கு எம்மால் இயன்ற பங்களிப்பை எதிர்காலத்திலும் வழங்குவோம்.

வாடிக்கையாளர்கள்

ஊழியர்கள்

சமூகப் பொறுப்புகள்

சுற்றாடல் பொறுப்புடைமை