க்ரெஸ்ட் சேவர்

நிலையான வருமானமுள்ள சுயதொழில் புரிபவர்கள் அல்லது ஊதியம் பெறக்கூடிய நிரந்தர தொழிலில் உள்ளவர்கள் இத்திட்டத்தின் ஊடாக கணக்கை ஆரம்பித்து சேமிப்பதன் மூலம் சிறந்த சலுகைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

பிரதிபலன்கள்

 • கணக்கை ஆரம்பித்து 3 மாதங்களின் பின்னர் தொடர்ச்சியாக 3 மாதங்களுக்கு குறித்த தொகையை கணக்கில் சேமிக்கும் பட்சத்தில் அத்தொகையின் 15 மடங்கு வரை கடன் பெறும் வசதி
 • அத்துடன் வழமையான கடன் விகிதத்திலும் 1% குறைவான விகிதத்தில் கடன் அல்லது லீசிங் பெறும் வாய்ப்பு.
 • 8.00% வருட வட்டி தினசரி மிகுதிக்கு வட்டி கணக்கெடுக்கப்படுவதுடன் மாத இறுதியில் கணக்கில் சேர்க்கப்படும்.
 • இரட்டைப் பயன்பாடுடைய பீப்பள்ஸ் வீசா சர்வதேச வரவட்டை மூலமாக PET அல்லது எந்தவொரு ATM நிலையங்களினூடாவும் பணம் மீளப்பெறும் வாய்ப்பு.
 • பீப்பள்ஸ் வீசா சர்வதேச வரவட்டை ஊடாக ஒரு நாளில் அதிகபட்ச பணமாக ரூ. 100,000.00 யினை 540 PET இயந்திரங்களினூடாக மீளப்பெறுவதற்கு அல்லது ரூ. 150,000.00 பெறுமதிக்குரிய பொருட் கொள்வனவிற்கு சந்தர்ப்பம் இருக்கின்றது.
 • தமது சேமிப்புக் கணக்கு மிகுதித் தகவல்களுக்கு மேலதிகமாக ஒவ்வொரு வைப்பு பணம் மீளப்பெறல் போன்ற கொடுக்கல் வாங்கல்களை உடனடியாக இலவச SMS மூலம் தகவல் பெற்றுக்கொள்ளும் வசதி.
 • PLC இணையப்பிரிவு செயல் மூலம் இணைய பரிவு செயல் மூலம் உங்கள் சேமிப்புக் கணக்கு பற்றி முழு விபரத்தையும் ஒன்லைன் மூலம் உலகின் எங்கிருந்தும் பெற்றுக்கொள்ளும் வசதி மற்றும் கொடுக்கல் வாங்கல் செய்யும் வசதி.
 • கணக்கு மீதியை பரிசோதித்தல் கொடுக்கல் வாங்கல் விபரங்கள், நிலையியற் கட்டளைகள் மற்றும் ஒன்லைன் கொடுக்கல் வாங்கல்கள் உட்பட பட்டியல் செலுத்துகைகள் லீசிங் மற்றும் கடன் கட்டணங்களை செலுத்தும் வசதி.
 • அருகிலுள்ள பிஎல்சி கிளைகள், பீப்பள்ஸ் ATM இயந்திரங்கள், பொலிஸ் நிலையங்கள், வைத்தியசாலைகள் மற்றும் எரிபொருள் நிலையங்கள் பற்றிய விபரங்கள்.
 • தேவைக்கேற்ப உங்கள் வாசலடிக்கே வந்து வைப்புக்களை எடுத்துச் செல்லும் வசதி.
 • SLIP ட்ரான்ஸ்பர் ஊடாக இலவச நிலையியற் கட்டளை வசதிகள்.
 • கணக்குரிமையாளரின் பெயரிலுள்ள காசோலைகளை மாற்றும் வசதி.
 • எந்தவொரு பிஎல்சி கிளையிலும் வைப்பு செய்யும் மீளப்பெற்றுக்கொள்ளும் வசதி.

நாங்கள் அழைக்கின்றோம்