செய்திகள்


லீசிங் துறையில் புதிய புரட்சி “பீப்பள்ஸ் லீசிங் பெற்றோல் பெரலிய”

தனது லீசிங் வாடிக்கையாளர்களுக்கு அனுகூலங்களை பெற்றுக் கொடுக்கும் வகையில்இ வெவ்வேறு ஊக்குவிப்புத்திட்டங்களை பீப்பள்ஸ் லீசிங் முன்னெடுத்து வருகின்றது. நிறுவனத்தின் 23 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு, தனது லீசிங் வாடிக்கையாளர்களுக்கு வெகுமதியளிக்கும் வகையில் புதிய “பீப்பள்ஸ் லீசிங் பெற்றோல் பெரலிய” எனும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்தத் திட்டம் புத்தாக்கமானதாவூம், இதுவரையில் வேறெந்தவொரு வங்கி அல்லது நிதிச் சேவைகளை பெற்றுக் கொடுக்கும் நிறுவனத்தினாலும் முன்னெடுக்கப்படாத ஒரு திட்டமாக அமைந்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தில் லீசிங் வசதி அல்லது வாகனக் கடன் வசதியை பெற்றுக் கொண்ட 25 வாடிக்கையாளர்கள் மாதாந்தம் தெரிவூ செய்யப்பட்டு, ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் ஒரு வருட காலப்பகுதிக்கு ரூ. 100,000 பெறுமதியான எரிபொருள் கொடுப்பனவூ அன்பளிப்பு செய்யப்படும். இவ்வாறு மொத்தமாக 2.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான இலவச எரிபொருள் கொடுப்பனவை தனது வாடிக்கையாளர்களுக்கு மாதாந்த அடிப்படையில் பெற்றுக் கொடுக்க பீப்பள்ஸ் லீசிங் முன்வந்துள்ளது. மேலும்இ இந்த திட்டத்துக்காக கவர்ச்சிகரமான வட்டி வழங்கல் திட்டத்தையூம் அறிமுகம் செய்யவூள்ளதுடன், வெற்றியீட்டும் அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்கில் இந்த தொகை வைப்புச் செய்யப்படும்.

புதிதாக லீசிங் அல்லது வாகன கடன் வசதியை பெற்றுக் கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டத்தில் பங்கேற்பதற்கான அனுமதி வழங்கப்படும் இதற்காக எவ்வித மேலதிக கட்டணதi; தயூம் பீப்பள்ஸ் லீசிங் அறவிடமாட்டாது.

விசேடமாக வடிவமைக்கப்பட்ட இலத்திரனியல் வடிவமைப்பு திட்டத்தினூடாக வெற்றியாளர்கள் தெரிவூ செய்யப்படுவதுடன், சுயாதீனமான கண்காணிப்பு குழுவினால் கண்காணிக்கப்படுவார்கள். மொத்தமாக 300 அதிர்ஷ்டசாலி பீப்பள்ஸ் லீசிங் வாடிக்யைகாளர்கள் “பீப்பள்ஸ் லீசிங் பெற்றௌல் பெரலிய” திட்டத்தினூடாக குறித்த வருடமொன்றில் பயன் பெறுவார்கள்.

பீப்பள்ஸ் லீசிங் சந்தைப்படுத்தல் பிரிவின் பிரதி பொது முகாமையாளர் லக்சந்த குணவர்தன கருத்துத் தெரிவிக்கையில், “மக்களின் மனமறிந்த லீசிங் நிறுவனமாக எமது வாடிக்கையாளர்கள் பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்துடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுகின்றனர். எனவே, அவர்கள் தமது நிதித் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ள பீப்பள்ஸ் லீசிங்கை தெரிவூ செய்கின்றனர். பீப்பள்ஸ் லீசிங்கிடமிருந்து ஒரு தடவை லீசிங் மற்றும் நிதி வசதிகளை பெற்றுக் கொண்ட வாடிக்கையாளர் ஒருவர்இ கண்டிப்பாக தமது எதிர்கால நிதித் தேவைகளுக்காகவூம் பீப்பள்ஸ் லீசிங்கை தெரிவூ செய்வார். எந்தவொரு வாடிக்கையாளருக்கும் இந்த எரிபொருள் கொடுப்பனவான ரூ. 100,000 ஐ வெற்றியீட்ட முடியும்." என்றார்.

குணவர்தன மேலும் குறிப்பிடுகையில் “பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்துடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடும் இவ்வாறான பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்காக “பீப்பள்ஸ் லீசிங் பெற்றௌல் பெரலிய” திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினூடாக, மாதமொன்றில் மொத்தம் 2.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான எரிபொருள் கொடுப்பனவைஇ அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்களுக்கு நிறுவனம் வழங்கும். தமது சேமிப்புக் கணக்கில் வைப்புச் செய்யப்படும் எரிபொருள் கொடுப்பனவூக்கு அவர்களுக்கு கவர்ச்சிகரமான வட்டியையூம் பெற்றுக் கொள்ள முடியூம். ஒவ்வொரு மாதமும் லீசிங் வசதியை பெற்றுக் கொள்ளும் பீப்பள்ஸ் லீசிங் வாடிக்கையாளர்களிலிருந்து வெற்றியாளர்களை நாம் தெரிவூ செய்வோம். “பீப்பள்ஸ் லீசிங் பெற்றௌல் பெரலிய” திட்டத்துடன் எவ்வாறு இணைந்து கொள்வது என்பது பற்றி, எந்தவொரு பீப்பள்ஸ் லீசிங் கிளையிலிருந்தும் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.” என்றார்.

 

 

petrol peraliya anuradhapura
Anuradhapura
petrol peraliya hatton
Hatton

petrol peraliya kelaniya
Kelaniya

petrol peraliya mannar
Mannar

petrol peraliya medawachiya
Medawachiya