உழைக்கும் சூழல்

பி. எல். சி யில் பணியாற்றல

எமது மனித வள முகாமைப் பிரிவின் வழிகாட்டல் மற்றும் கொள்கையின் அடிப்படையில்இ நாம் எப்போதும் எமது ஊழியர்களுக்கு உரித்தான மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பதுடன்இ ஐக்கிய நாடுகளின் பிரகடனம்இ சிறந்த தொழிலாளர்களது உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சர்வதேச தொழிலாளர் நிறுவனங்களின் நியதிகள் என்பவற்றை பின்பற்றுவதன் ஊடாகவூம் தொழிலாளர்களின் ஆகக் குறைந்த ஊதியம்இ வேலை மணித்தியாலங்கள்இ வேறுபாடுகள்இ ஊழல்இ துன்புறுத்தல்கள் பற்றிய சகல விடயங்களுக்குமான விதிமுறைகளை முறையாக பின்பற்றுவதுடன் அவற்றுக்கு மதிப்பளித்து செயற்படுகின்றௌம்.

எமது ஊழியர்கள் அவர்களது முறையான செயற்பாடுகளின் பிரதிபலிப்புக்களை நன்கறிந்துள்ளதுடன்இ அவற்றின் ஊடாக நிறுவன ரீதியாக வெளிப்படும் முன்னேற்றமானது அவர்களது வெற்றியின் படிகளாவதுடன்இ எமது சக்தியாகவூம் இருந்து வருகின்றது.

எமது ஊழியர்கள் அவர்களது முறையான செயற்பாடுகளின் பிரதிபலிப்புக்களை நன்கறிந்துள்ளதுடன்இ அவற்றின் ஊடாக நிறுவன ரீதியாக வெளிப்படும் முன்னேற்றமானது அவர்களது வெற்றியின் படிகளாவதுடன்இ எமது சக்தியாகவூம் இருந்து வருகின்றது.

எமது ஊழியர்கள் சம்பந்தமான கொள்கையானதுஇ எப்போதும்இ சமத்துவத்தை முதன்மையாகக் கொண்டிருப்பதுடன்இ பல்வகைமையை ஆதரிக்கின்றது. பி. எல். சி யானது தொழில் புரியூம் சூழலில் பாகுபாடுகளை கலைவதானதுஇ உற்பத்தித் திறன் மற்றும் செயற்றிறனை அதிகரிப்பதற்குரிய சிறந்த முறைமையாகக் கருதுகின்றது. இதனூடாக ஒவ்வொருவரது திறமையூம் தௌpவாக வெளிப்படுவதுடன் அதனடிப்படையில் அவர்களது திறமைகளை சிறந்த முறையில் பயன்படுத்தவூம்இ மென்மேலும் மெருகூட்டவூம் ஏதுவாக அமையூம். இனஇ மதஇ குல ரீதியான மற்றும் வயது இயலாமைகள் மற்றும் ஏனைய விதங்களில் இடம்பெறும் அனைத்துவிதமான வேறுபாடுகள் மற்றும் பாகுபாடுகளை கலைந்து அனைவருக்கும் சமத்துவமான சந்தர்ப்பங்களை வழங்கி முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லல் அனைத்து கிளை முகாமையாளர்கள்இ பிரிவூத் தலைவர்கள் ஆகியோரது முக்கிய பொறுப்பாகும்.

அதேபோன்று நிறுவனத்துக்காக பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கு சமமான சந்தர்ப்பங்களை வழங்குவதுடன் நிறுவனத்தின் வெற்றிக்காக உழைக்கும் அனைவருக்கும் உழைப்புக்கேற்ற வெகுமதிகளை வழங்கி அவர்களை உற்சாகப்படுத்தி வரவேற்பது எமது வழமையாகும். அதாவதுஇ ஊழியர்களின் திறமைகளையூம் செயற்றிறனையூம் கண்காணித்து அவர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவிக்கும் செயற்பாடு வழமையாக இடம்பெற்று வருகின்றது.

 

வேலைவாய்ப்பு மற்றும் தெரிவூ

பி. எல். சியானது தமக்குரிய ஊழியர்களை பணியமர்த்துவதில் அல்லது தெரிவூ செய்வதில் அதற்கே உரிய வழமையான அனுகுமுறைகளையூம் விதிமுறைகளையூம் பின்பற்றி வருகின்றது. மனித வள முகாமைத்துவப் பிரிவினால் நடைமுறைப்படுத்தும் முறைமைகளினூடாக புதிய ஊழியர்களை தெரிவூ செய்தல் பணிமர்த்தல் அவர்களுக்குரிய பயிற்சிகளை ஏற்பாடு செய்து நடாத்தல் போன்ற நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஊடாக எமது நோக்கத்தை அடையத்தக்க முயற்சியூள்ள திறமையான ஆளுமை மிகுந்தவர்களை இனங்கண்டு தெரிவூ செய்யூம் சந்தர்ப்பம் கிடைக்கப்பெறுகின்றது. இத்தெரிவானது எவ்வித சாதிஇ மதஇ இனஇ குலஇ மொழிஇ பால் மற்றும் அரசியல் பேதங்கள் ஏதுமின்றி திறமையானவர்களுக்கு சந்தர்ப்பத்தை பெற்றுக்கொடுத்தலே இங்கு இடம்பெறுகின்றதுடன் உரியவர்களுக்கு பதவியூயர்வூகளும் கிடைக்கின்றன.

புதிதாக சேவையில் அமர்த்தப்படும் ஊழியர்களுக்கு உரிய மேற்பார்வையின் கீழ் வடிவமைக்கப்பட்ட பயிற்சிகள்இ வழிகாட்டல் நிகழ்வூகள் மற்றும் தேவையான அனைத்துவிதமான வசதிகளைப் பெற்றுக்கொடுத்தல் என்பவற்றின் மூலம் அவர்கள் அவர்களது பணியை உரியவிதமாக செய்யூம் வகையில் அமைத்துக் கொடுக்கப்படும்.

 

பிஎல்சியூடன் இணைந்துகொள்வதற்குத் தேவையான மிகக் குறைந்த தகைமைகள்

  • க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் முதல் தடவையிலேயே கணிதம் மற்றும் ஆங்கிலத்தில் திறமை சித்தியூடன் க.பொ.த உயர்தரப் பீர்டசையில் மூன்று பாடங்களிலும் சித்தியடைந்திருத்தல் கட்டயாமாகும்.
  • மேலதிகமாக தொழில் துறை அல்லது கள அனுபவம் மற்றும் தொழில் சார் அனுபவங்கள்இ ஆங்கில மொழி எழுத மற்றும் பேசுவதலுள்ள திறமைகள் கருத்திற்கொள்ளப்படும்.

 

செயற்றிறன் சார் காலாசாரம

பிஎல்சியானதுஇ வினைதிறனையூம் தமது வெளிப்பாடுகளையூம் உயர்மட்டத்தில் பேணுவதற்காக உயர்தரமான கொடுப்பனவூ முறைகளை தமது ஊழியர்களுக்கு பெற்றுக்கொடுப்பதின் ஊடாக அவர்களை உற்சாகப்படுத்துகின்றது. நிலையான ஊதியமானது ஒரு போதும் ஊழியர்களை உற்சாகப்படத்தமாட்டாது என நாம் நம்புகின்றௌம். அதிகூடிய வேதனத்தை வழங்கும் துறைசார் நிறுவனமாக பிஎல்சி திகழ்கின்றது.

இலங்கை தொழிலாளர் சட்டத்துக்கிணைவாக ஒவ்வொரு தொழிலாளியூம் ஒரு வாரத்தில் 45 மணித்தியாலங்கல் பணியாற்ற வேண்டும். பிஎல்சியில் வாரத்தின் 5 நாட்களில் 8 மணித்தியாலங்ஙூகள் படியூம் சனிக்கிழமைகளில் 5 மணித்தியாலங்களும் பணியாற்றல் வேண்டும்.

நாம் எமது குழாத்தை முன்னேற்றமடையச் செய்வோம்.

நாம் எமது எமது குழாத்துக்கு செவிசாய்ப்போம்.
நாம் பல்வகைமையூடைய எமது குழாத்தின் பலத்தை அறிவோம்.
நாம் எமது குழாத்தின் திறமைகளை அறிந்து கௌரவிப்போம்.
நாம் எமது குழாத்தைப் பற்றி கவனம் செலுத்துவதுடன் அவர்களது நலனுக்கு முன்னுரிமையளிப்போம்.
நாம் எமது குழாத்தின் வேலைப்பழு மற்றும் வாழக்கையை சமநிலைப்படுத்தத் தேவையான நலன்புரி நிகழ்வூகளை ஏற்பாடு செய்துகொடுப்போம்.